Conversation
At the market
Uraiyaadal – Sandhai-yil
உரையாடல் – சந்தையில்
Conversation between Vegetable Vendor and Customer
CONVERSATION – 5
At the market
Conversation between Kadaikkaarar, Kala & Kannan
Conversation between Kala and Kannan
Kannan: Enna innaikku market-la (sandhai) orae koottamaa irukku!
Kannan: Oh! Today too much crowd in the market.
கண்ணண்: என்ன இன்னைக்கு மார்க்கெட்-ல (சந்தை) ஒரே கூட்டமா இருக்கு!
Kala: Naalai-kku Vinaayagar Chathurththi. Adhanaala ellaar-um poojai-kku saamaan vaanga vandhu iruppaanga.
Kala: Tomorrow is Vinayagar chathurththi. So, they have come to buy pooja items.
கலா: நாளை-க்கு விநாயகர் சதுர்த்தி. அதனால்-அ எல்லார்-உம் பூஜை-க்கு சாமான் வாங்க வந்து இருப்பாங்க.
Kannan: Sari, Nee thevaiyaana kaai, pazham ellaam vaangittu iru. Naan car-a park pannittu (vandiya niruththittu) varaen.
Kannan: Ok. You can buy vegetables and fruits. I will park the car and come.
கண்ணன்: சரி, நீ தேவையான காய், பழம் எல்லாம் வாங்கிட்டு இரு. நான் கார்-அ
பார்க் பண்ணிட்டு (வண்டிய நிறுத்திட்டு) வரேன்.
Kala: Saringa.
Kala: OK.
கலா: சரிங்க.
Conversation between Kadaikkaarar & Kala
Kala: Yaenga, indha thaengaai enna vila?
Kala: How much is this coconut?
கலா: ஏங்க, இந்த தேங்காய் என்ன வில?
Kadaikkaarar: Chinna thaengaai iruvadhu ruvaa, periya thaengaai muppadhu ruvaa. Ungalkku
edhu vaenum?
Kadaikkaarar: Rs.20 for small coconut, Rs.30 for big coconut. What do you want?
கடைக்காரர்:சின்ன தேங்காய் இருவது ருவா, பெரிய தேங்காய் முப்பது ருவா.
உங்கள்-க்கு எது வேணும்?
Kala: Chinna thaengaai-la rendu kudunga.
Kala: Give two small coconuts.
கலா: சின்ன தேங்காய்-ல ரெண்டு குடுங்க.
Kadaikkaarar: Sari.
Kadaikkaarar: Ok.
கடைக்காரர்: சரி.
Kala: Vaazhaippazham evalo?
Kala: How much is the banana?
கலா: வாழைப்பழம் எவ்ளோ?
Kadaikkaarar: Kilo aruvadhu ruvaa.
Kadaikkaarar: Rs.60 per kg.
கடைக்காரர்: கிலோ அறுவது ருவா.
Kala: Oru arai kilo kudunga, kaththirikaai kaal kilo, vendakkaai arai kilo poadunga. Thakkaali romba pazhuththu irukku. Idhu dhaan irukkaa? Ulla vaera nalladhu irukkaa?
Kala: Give ½ kg banana, ¼ kg brinjal, ½ kg lady’s finger. Tomatoes are very ripe.
is this only available or you have better ones inside?
கலா: ஒரு அரை கிலோ குடுங்க. கத்திரிக்காய் கால் கிலோ, வெண்டக்காய் அரை
கிலோ போடுங்க. தக்காளி ரொம்ப பழுத்து இருக்கு. இது மட்டும் இருக்கா
இல்ல உள்ள நல்லது இருக்கா?
Kadaikkaarar: Illa. Idhu dhaan irukku. Vandhadhu ellaam viththu pochu. Thakkaali evalo
vaenum?
Kadaikkaarar: No. This is only available. Everything sold out. How much tomatoes do you
Want?
கடைக்காரர்: இல்ல இது தான் இருக்கு. வந்தது எல்லாம் வித்து போச்சு. தக்காளி எவ்ளோ வேணும்?
Kala: Illa, thakkaali vaenaam. Poosanikkaai oru thundu vetti thaanga.
Kala: No. Don’t want Tomato. Cut one piece of pumpkin and give.
கலா: இல்ல தக்காளி வேணாம். பூசணிக்காய் ஒரு துண்டு வெட்டி தாங்க.
Kadaikkaarar: Vaera edhaavadhu vaenumaa?
Kadaikaarar: Anything else you want?
கடைக்காரர்: வேற ஏதாவது வேணுமா?
Kala: Karuvaeppilai, koththamalli paththu ruvaa-kku, pachcha milagaai ambadhu gram, inji nooru gram. Avalo dhaan.
Kala: Give curry leaves and coriander for 10 Rs.
கலா: கருவேப்பிலை, கொத்த மல்லி பத்து ருவா-க்கு, பச்ச மிளகாய் அம்பது
கிராம், இஞ்சி நூறு கிராம். அவ்ளோ தான்.
Kadaikkaarar: Indhaanga paiya kaattunga.
Kadaikaarar: Here it is. Show the bag.
கடைக்காரர்: இந்தாங்க பைய காட்டுங்க.
Kala: Evvalavu aachchu?
Kala: How much is the bill?
கலா: எவ்வளவு ஆச்சுங்க?
Kadaikkaarar: Moththam eranoothi aruvathi anju ruvaa aachchu. Neenga eranoothi aruvadhu
ruvaa kudunga.
Kadaikaarar: Total Rs.265. You give me Rs.260.
கடைக்காரர்: மொத்தம் இருநூத்தி அறுவத்தி அஞ்சு ருவா ஆச்சு. நீங்க இருநூத்தி
அறுவது ருவா குடுங்க.
Kala: Indhaanga, ainooru ruvaa. Meedhi eranoothi naappadhu ruvaa thaanga.
Kala: Here Rs500. Give balance Rs240.
கலா: இந்தாங்க ஐநூறு ருவா. பேலன்ஸ் (மீதி) இருநூத்தி நாப்பது ருவா தாங்க.
Kadaikkaarar: Indhaanga.
Kadaikaarar: Take it.
கடைக்காரர்: இந்தாங்க.
Conversation between Kala & Kannan:
Kannan: Kaai, pazham ellaam vaangiyaachchaa?
Kannan: Did you buy all fruits and vegetables?
கண்ணன்: காய், பழம் எல்லாம் வாங்கியாச்சா?
Kala: Vaangittaen.
Kala: Yes.
கலா: வாங்கிட்டேன்.
Kannan: Car-a park pannunna (Vandiya niruththina) idam romba dhooraththula irukku. Oru paiya enkitta kudu.
Kannan: Car parking is very far away. Give one bag to me.
கண்ணன்: கார்-அ பார்க் பண்ணுண (வண்டிய நிறுத்தின) இடம் ரொம்ப தூரத்துல இருக்கு. ஒரு பைய என்கிட்ட குடு.
Kala: Indhaanga.
Kala: Take it.
கலா: இந்தாங்க.
Kannan: Poara vazhiyila poojai-kku poo vaanganumaa?
Kannan: Do you want to buy flowers for pooja on the way?
கண்ணன்: போற வழியில பூஜை-க்கு பூ வாங்கணுமா?
Kala: Illa. Pookkaara ammaa kondu varuvaanga. Ilai mattum vaanganum.
Kala: No. Flower seller will bring it. Buy only banana leaf.
கலா: இல்ல. பூக்கார அம்மா கொண்டு வருவாங்க. இலை மட்டும் வாங்கணும்.
Kannan: Sari. Vaangittu veettukku poagalaam.
Kannan: Ok. Let’s buy and go.
கண்ணன்: சரி. வாங்கிட்டு வீட்டுக்கு போகலாம்.