2     4     6     8   9   10  11  12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29  30  31  32

 

CONVERSATION 2 – AT THE BOOKSTORE

conversation2

Uraiyaadal 2  – Puththagak Kadaiyil
உரையாடல் 2 – புத்தகக் கடையில்

 

 

Conversation between Bookstore owner and Customer Kumar

 

SPOKEN TAMIL

 

Kumar: Vanakkam Sir.
Kumar: Hello Sir.
குமார்: வணக்கம் ஸார்.

 

Kadaikaarar: Vanakkam Sir. Sollunga.
Storekeeper: Hello Sir. Tell me.
கடைக்காரர்: வணக்கம் ஸார். சொல்லுங்க.

 

Kumar: Naa indha puththagaththa maaththa vandhaen.
Kumar: I need a replacement for this book.
குமார்: நான் இந்த புத்தகத்த மாத்த வந்தேன்.

 

Kadaikaarar: Yaen Sir, enna aachchu?
Storekeeper: Why Sir? What’s wrong?
கடைக்காரர்: ஏன் ஸார்? என்ன ஆச்சு?

 

Kumar: Idhula paththu-la irundhu pathinaaru vara ulla pakkaththa kaanala.
Kumar: Pages from 10 to 16 are missing.
குமார்: இதுல பத்துல இருந்து பதினாறு வர உள்ள பக்கத்த காணல.

 

Kadaikaarar: Neenga vaangumbodhu paaththu vaangalaiyaa?
Storekeeper: Didn’t you check it while purchasing?
கடைக்காரர்: நீங்க வாங்கும் போது பாத்து வாங்கலையா?

 

Kumar: Appo gavanikkala Sir.
Kumar: Didn’t notice it then, Sir.
குமார்: அப்போ கவனிக்கல ஸார்.

 

Kadaikaarar: Indha puththagaththa eppo vaanguneenga?
Storekeeper: When did you buy this book?
கடைக்காரர்: இந்த புத்தகத்த எப்போ வாங்குனீங்க?

 

Kumar: Moonu naalai-kku munnaala vaangunaen.
Kumar: Three days ago.
குமார்: மூணு நாளை-க்கு முன்னால வாங்குனேன்.

 

Kadaikaarar: Aduththa naaley yaen kondu varala?
Storekeeper: Why didn’t you bring it the very next day?
கடைக்காரர்: அடுத்த நாளே ஏன் கொண்டு வரல?

 

Kumar: Naan kudumbaththoda suttrulaa poyittaen. Naeththu kaalaiyila dhaan vandhaen. Raaththiri padikka eduththappa dhaan paaththaen.
Kumar: I went on family tour; arrived just yesterday morning. Only when I took out the book last night to read, did I notice it (the missing pages).
குமார்: நான் குடும்பத்தோட சுற்றுலா போயிட்டேன். நேத்து காலையில தான் வந்தேன். ராத்திரி படிக்க எடுத்தப்ப தான் பாத்தேன்.

 

Kadaikaarar: Puththagam vaanguna raseedhu vachchirukkeengalaa?
Storekeeper: Do you have the receipt for this purchase?
கடைக்காரர்: புத்தகம் வாங்குன ரசீது வச்சிருக்கீங்களா?

 

Kumar: Aamaa, raseedhu irukku. Idha paarunga.
Kumar: Yes, I do. Check this one.
குமார்: ஆமா ரசீது இருக்கு. இத பாருங்க.

 

Kadaikaarar: Idhu sariyaana raseedhu dhaan. Oru nimisham irunga, naan vaera puththagam thaaraen.
Storekeeper: Well, it’s the right receipt. Give me a minute while I get another copy for you.
கடைக்காரர்: இது சரியான ரசீது தான். ஒரு நிமிஷம் இருங்க, நான் வேற புத்தகம் தாரேன்.

 

Kumar: Saringa…
Kumar: Sure.
குமார்: சரிங்க….

 

Kadaikaarar: Indhaanga, idhula ellamey sariyaa irukkaa-nnu paarunga.
Storekeeper: Here you are. Please check if it is OK.
கடைக்காரர்: இந்தாங்க, இதுல எல்லாமே சரியா இருக்கான்னு பாருங்க.

 

Kumar: Aamaa Sir, ellaamey sariyaa irukku.
Kumar: Yes, it’s all good.
குமார்: ஆமா ஸார். எல்லாமே சரியா இருக்கு.

 

Kadaikaarar: Vaera yaedhaavadhu vaenumaa? Idhey author (aasiriyar) ezhudhuna pudhu puththagam vandhirukku. Paakkureengalaa?
Storekeeper: Do you need anything else? A new book written by the same author is available. Would you like to see it?
கடைக்காரர்: வேற ஏதாவது வேணுமா? இதே ஆத்தர் (ஆசிரியர்) எழுதுன புது புத்தகம் வந்துருக்கு. பாக்குறீங்களா?

 

Kumar: Aduththa thadava Sir; idha modhala padichchu mudichchukkuraen.
Kumar: Next time, Sir. Let me finish reading this one first.
குமார்: அடுத்த தடவ ஸார். இத மொதல படிச்சு முடிச்சுக்கிறேன்.

 

Kadaikaarar: Pillaigalukku thaevaiyaana kadha puththagam, padam varaiyira puththagam, color pencil, crayon, water color ellaam irukku. Yaedhaavadhu venumaa??
Storekeeper: We also have story books, drawing books, color pencils, crayons and water colors for children. Would you like any?
கடைக்காரர்: பிள்ளைகளுக்கு தேவையான கத புத்தகம், படம் வரையிற புத்தகம், கலர் பென்சில், கிரையான், வாட்டர் கலர் எல்லாம் இருக்கு. ஏதாவது வேணுமா?

 

Kumar: Ippo vaendaam Sir. Naan paiyana inga kootteettu vandhu vaangikkuraen.
Kumar: Not now Sir. I will bring my son here and buy them.
குமார்: இப்போ வேண்டாம் ஸார். நான் பையன இங்க கூட்டீட்டு வந்து வாங்கிக்குறேன்.

 

Kadaikaarar: Indha maasa kadaisi-yila thallupadi virpanai irukku. Unga mobile number-a (kaipaesi enn) kuduththeengannaa naan ungalukku thagaval solraen.
Storekeeper: There is a discount sale at the end of this month. If you give me your mobile number, I will inform you.
கடைக்காரர்: இந்த மாச கடைசியில தள்ளுபடி விற்பனை இருக்கு. உங்க மொபைல் நம்பர (கைபேசி எண்) குடுத்தீங்கன்னா நான் உங்களுக்கு தகவல் சொல்றேன்.

 

Kumar: Ennoda mobile number (kaipaesi enn) 9876543210. En manaivi-um neraiya puththagam padippaanga. Avangalayum kandippaa kootteettu vaaraen.
Kumar: My mobile number is 9876543210. My wife, too, reads a lot of books. I will surely bring her along.
குமார்: என்னோட மொபைல் நம்பர் (கைபேசி எண்) 9876543210. என் மனைவியும் நெறைய புத்தகம் படிப்பாங்க. அவங்களையும் கண்டிப்பா கூட்டீட்டு வாறேன்.

 

Kadaikaarar: Sari Sir. Nandri.
Storekeeper: OK Sir. Thank you.
கடைக்காரர்: சரி ஸார். நன்றி.
× Have Questions?