Conversation

Vacation

Uraiyaadal 23 –Vidumurai

உரையாடல் 23– விடுமுறை

Conversation between Students and Teachers

Students:Good morning madam.
மாணவர்கள்:வணக்கம் மேடம்.
Maanavarkal:Vanakkam madam.

Teacher: Good morning students. Sit down.
ஆசிரியர்: வணக்கம் மாணவர்களே. அமருங்கள்.
Aasiriyar:Vanakkam maanavarkalae. Amarungkal.

Students:Thank you madam.
மாணவர்கள்:நன்றி மேடம்.
Maanavarkal:Nandri madam.

Teacher:How are you all?
ஆசிரியர்:நீங்களெல்லாம் எப்படி இருக்கீங்க?
Aasiriyar:Neengalellam eppadi irukkeengka?

Students:Fine madam. How are you madam?
மாணவர்கள்:நல்லா இருக்கோம் மேடம். நீங்க எப்படி இருக்கீங்க?
Maanavarkal: Nallaa irukkoam madam. Neengka eppadi irukkeenga?

Teacher: I am fine, thank you. We are all meeting after a long time. How was your summer vacation? Did you enjoy the vacation?
ஆசிரியர்: நான் நல்லா இருக்கேன், நன்றி. நாமெல்லாரும் ரொம்ப நாளுக்குப் பின் சந்திக்கிறோம். உங்க சம்மர் (கோடைகாலம்) லீவு (விடுமுறை) எப்படி இருந்துச்சு? லீவ எஞ்சாய் பன்னினீங்களா (அன்பவிச்சீங்களா)?
Aasiriyar: Naan nallaa irukken, nandri. Naamellaarum romba naalukku pin santhikkiroam. Unga summer leave eppadi irunthuchu? Leeva enjoy pannineengalaa?

Students:Yes madam, we enjoyed the vacation.
மாணவர்கள்:ஆமா மேடம். நாங்க லீவ எஞ்சாய் பன்னினோம் (அனுபவிச்சோம்).
Maanavarkal:Aama madam. Naanga leave va enjoy panninoam (anubavichoam).

Teacher: Did you visit any place during this vacation?
ஆசிரியர்: இந்த லீவுல எங்கேயாவது போனீங்களா?
Aasiriyar: Intha leave la engeyaavathu poaneengala?

Muhilan: Yes madam, I went to Kodaikanal when I visited my uncle’s house in Madurai.
முகிலன்:ஆமா மேடம். நான் மதுரையில இருக்கிற எங்க மாமா வீட்டுக்குப் போயிருந்தபோது கொடைகானலுக்கு போனேன்.
Muhilan: Aama madam, naan maduraiyila irukkira enga mama veettukku poayirunthapoathu Kodaikaanalukku poanen.

Teacher:Good. It is a nice and cool place to visit.
ஆசிரியர்:நல்லது. அது அழகான மற்றும் குளிர்ச்சியான இடம்.
Aasiriyar: Nallathu. Athu azhakaana matrum kulirchiyaana idam.

Amudan:Madam, I visited Big Temple in Thanjavur.
அமுதன்: மேடம், நான் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குப் போனேன்.
Amuthan:Madam, naan Thanjavur periya koayilukku poanen.

Teacher:Fantastic. That temple is thousand years old. It was built by Raja Raja Chola
ஆசிரியர்: அற்புதம். அக்கோயில் ஆயிரம் வருசம் பழமையானது. அது ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
Aasiriyar:Arputham, akkoayil aayiram varusam pazhamaiyaanathu. Athu RajaRaja Choazhanaal kattappattathu.

Iniyan: Madam, I went to Mamallapuram.
இனியன்:மேடம் நான் மாமல்லபுரம் போனேன்.
Iniyan:Madam, naan Mamallapuram poanen.

Teacher:Oh great. It’s a historical place Iniyan. How was your experience there?
ஆசிரியர்: ஓ அருமை. அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் நிறைஞ்ச இடம் இனியன். அங்கே உன் அனுபவம் எப்படி இருந்துச்சு?
Aasiriyar:Oh arumai. Athu oru varalatru mukkiyaththuvam niranja idam Iniyan. Ange un anupavam eppadi irunthuchu?

Iniyan:It was a wonderful experience madam. We enjoyed a lot.
இனியன்:அது ஒரு அற்புதமான அனுபவமா இருந்துச்சு மேடம். நாங்க ரொம்ப எஞ்சாய் பன்னினோம்.
Iniyan:Athu oru arputhamaana anubavamaa irunthuchu madam. Naanga romba enjoy panninoam.

Amudan:Madam, is it the place the Chinese Prime Minister visited when he came to India?
அமுதன்:மேடம், சீன பிரதமர் இந்திய வந்தபோது இங்கதானே வந்திருந்தார்?
Amuthan:Madam, seena pirathamar India vanthapoathu ingathane vanthirunthaar?

Teacher:You are right. Our Prime Minister had a meeting with him there. This place is known for its temples and monuments.
ஆசிரியர்: ஆமா. நம்ம பிரதமர் அவர அங்கதான் சந்திச்சார். இந்த இடம் கோயில்களுக்கும், நினைவுச் சின்னங்களுக்கும் புகழ் பெற்றது.
Aasiriyar:Aamaa namma pirathamar avara angathaan santhichaar. Intha idam koayilkalukkum, ninaivu sinnangalukkum pugazh petrathu.

Iniyan: Madam, we saw a lot of temples there. There was a temple on the sea shore also.
இனியன்:மேடம், நாங்க நிறைய கோயில்கள பார்த்தோம். கடலோரத்துலகூட ஒரு கோயில பார்த்தோம்.
Iniyan:Madam, naanga niraya koayilkala paarththoam. Kadaloaraththula kuda oru koayila paarththoam.

Teacher: Yes there is a temple on the sea shore. But originally there were seven temples. These are called Pagodas. Historians say that remaining six temples submerged into the sea in the 13th century.
ஆசிரியர்:ஆமா, அங்கே கடலோரத்துல ஒரு கோயில் இருக்கு. ஆனா, ஆரம்பத்துல அங்கே ஏழு கோயில்கள் இருந்துச்சு. அவற்றிற்கு பகோடா என்று பெயர். மீதமுள்ள ஆறு கோயில்களும் 13ஆம் நூற்றாண்டுல கடலுக்குள்ள மூழ்கிடுச்சுன்னு வரலாற்று அறிஞர்கள் சொல்ராங்க.
Aasiriyar:Aama, ange kadaloaraththula oru koayil irukku. Aana, aarampaththula ange ezhu koayilkal irunthuchu. Avatrirku Pakodakkal entru peyar. Meethamulla aaru koayilakalum 13aam nootraandula kadalukkulla moozhkiduchunnu varalatru aringarkal solraanga.

Muhilan:It is interesting madam. Can you tell us more about this city?
முகிலன்: ரொம்ப ஆர்வமா இருக்கு மேடம். அத பத்தி இன்னும் சொல்றீங்களா?
Muhilan:Romba aarvama irukku madam. Atha paththi innum solreengala?

Teacher:Yes I will tell. This city was built by Pallava rulers in the 7th and 8th centuries. It is also called Mahabalipuram named after the king Narasimhavarma Pallava who was known as Mahabali. It was a port city in the ancient time.
ஆசிரியர்:சரி சொல்றேன். இந்த நகரம் 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுல பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. மஹாபலி என அழைக்கப்பட்ட நரசிம்மவர்ம பல்லவனின் பெயரைக் கொண்டு இதை மஹாபலிபுரம் என்றும் அழைப்பார்கள்.பழங்காலத்துல இது ஒரு துறைமுக நகரமா இருந்துச்சு.
AAasiriyar:Sari solren. Intha nagaram 7 matrum 8aam nootraandula pallava mannarkalaal kattappattathu. Mahaabali ena azhaikkappatta Narasimmavarma Pallavanin peyaraikkondu ithai Mahabalipuram endrum azhaippaarkal. Pazhangalaththula ithu oru thuraimuka nagarama irunthuchu.

Amudan:Oh , is it such a place of significance madam?
அமுதன்:ஓ, இது அவ்வளவு முக்கியமான இடமா மேடம்?
Amudan:Oh, ithu avvalavu mukkiyamaana idamaa madam?

Teacher:Yes, you can see lot of monuments there. UNESCO has declared this as the world’s heritage site.
ஆசிரியர்:ஆமா, பல நினைவுச் சின்னங்கள நீங்க அங்கே பார்க்கலாம். யுனெஸ்கோ இதை வேர்ல்டு ஹெரிடேஜ் (உலக பார்ம்பரியமிக்க) இடமா அறிவிச்சிருக்கு.
Aasiriyar:Aama, pala ninaivu sinnagala neenga ange paarkkalaam. UNESCO ithai World Heritage (Ulaga paarambariyamikka) idamaa arivichchirukku.

Iniyan:Yes madam, I saw many monuments there. I saw five rock temples in a single place.
இனியன்:ஆமா மேடம், நான் நிறைய நினைவுச் சின்னங்கள பார்த்தேன். ஒரே இடத்துல நான் ஐந்து பாறை கோயில்கள பார்த்தேன்.
Iniyan:Aama madam, naan niraiya ninaivu sinnangala paarththen. Ore idaththula naan ainthu paarai koayilkala paarththen.

Teacher:Very good Iniyan. These are called Five Rathas. Did you notice that these temples are built out of a single stone?
ஆசிரியர்: ரொம்ப நல்லது இனியன். அவை ஐந்து ரதங்கள் எனப்படும். அவையெல்லாம் ஒரே பாறையால் ஆனதைக் கவனிச்சாயா?
AAasiriyar: Romba nallathu Iniyan. Avai ainthu rathangal enappadum. Avaiyellam ore paaraiyaal aanathai kavanichayaa?

Iniyan:Yes madam, I noticed.
இனியன்:ஆமா மேடம் நான் கவனிச்சேன்.
Iniyan:Aama madam, naan kavanichen.

Muhilan:Amazing madam. Out of a single stone?
முகிலன்: ஆச்சர்யமா இருக்கு மேடம், ஒரே கல்லிலேயா?
Mukilan:Aacharyama irukku madam, ore kallileyaa?

Teacher:Yes, they are built out of a single stone. These are called monolithic temples. Iniyan, did you see anything else there?
ஆசிரியர்:ஆமா, அவையெல்லாம் ஒரே கல்லால கட்டப்பட்டவை. இவை மோனோலித்திக் கோயில்கள் எனப்படும். வேறு ஏதாச்சும் அங்கே பார்த்தாயா இனியன்?
Aasiriyar: Aama avaiyellam ore kallaala kattappattavai. Ivai monolithic koayilkal enappadum. Veru ethachum ange paarththaaya iniyan?

Iniyan:Yes madam, I saw Arjunan’s Penance.
இனியன்:ஆமா மேடம். அர்ஜுனனின் தவம் என்கிற இடத்தப் பார்த்தேன்.
Iniyan:Aama madam. Arjunanin thavam enkira idaththa paarthen.

Teacher:Well, it is also called Arjuna’s Thapas. It is a huge rock-cut relief. You can see a lot of images carved on them.
ஆசிரியர்:நல்லது, அத அர்ஜுனன் தபஸ் என்றும் சொல்வாங்க. இது ஒரு பெரிய பாறை மேல செதுக்கப்பட்டது. அந்தப் பாறை மேல நிறைய சிற்பங்கள பார்க்கலாம்.
Aasiriyar:Nallathu atha Arjunan Thapas endrum solvaanga. Ithu oru periya paarai mela sethukkappattathu. Antha paarai mela niraiya sirpangala paarkkalaam.

Iniyan:Madam, I also saw a huge rock there.
இனியன்:மேடம் நான் ஒரு பெரிய கல்லையும் அங்கே பார்த்தேன்.
Iniyan: Madam, naan oru periya kallaiyum ange paarthen.

Teacher:It is called Butterball. It rests on a small incline. We may think that it will roll down, but it will not.
ஆசிரியர்: அத வெண்ணெய் உருண்டைனும் சொல்வாங்க. அது பார்க்கிறதுக்கு உருண்டு விழுற மாதிரி இருக்கும். ஆனா, விழாது.
Aasiriyar: Atha vennai urundai nu solvaanga. Athu paakkirathukku urundu vizura maathiri irukkum. Aana vizaathu.

Muhilan: Yes madam, I saw that in the TV. It was amazing. Our Prime Minister and the Chinese Prime Minister had taken a photo in front of that stone.
முகிலன்: ஆமா மேடம், நான் டிவியில பார்த்தேன். நம்ம பிரதமரும், சீன பிரதமரும் அதுக்கு முன்னாடி நின்னு போட்ட எடுத்துக்கிட்டாங்களே.
Muhilan:Aama madam, naan TV yila paarthen. Namma pirathamarum, China pirathamarum athukku munnaadi ninnu phota eduththukkittaangale.

Teacher:You are right Muhilan.
ஆசிரியர்:நீ சொல்றது சரி முகிலன்.
Aasiriyar:Nee solrathu sari Muhilan.

Muhilan:Madam, it is interesting to hear about this city. Can we all make a visit to that place as a part of educational program?
முகிலன்: மேடம், இந்த ஊர பத்தி கேக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு, அங்கே நாம் ஒரு கல்வி சுற்றுலா போகலாமா?
Muhilan:Madam, intha oora paththi kekkurathukku romba aarvama irukku. Ange naam oru kalvi sutrulaa poagalaama?

Teacher:Oh sure. We will go. I will talk to our principal regarding this.
ஆசிரியர்: ஓ நிச்சயமா. நம்ம ஸ்கூல் முதல்வர் (பிரின்சிபல்) கிட்ட இது பற்றி நான் பேசுறேன்.
Aasiriyar: Oh nichayamaa. Namma school muthalvar (Principal) kitta ithu patri naan pesuren.

Students:Thank you very much madam.
மாணவர்கள்:ரொம்ப நன்றி மேடம்.
Manavarkal: Romba nandri madam.

Teacher: Thank you students. We will meet in the next class.
ஆசிரியர்: நன்றி மாணவர்களே. அடுத்த நாம் வகுப்பில் சந்திப்போம்.
AAasiriyar:Nandri maanavarkale. Aduththa vakuppil naam santhippoam.

Conversation

32 Conversations in colloquial Tamil and English

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?