Conversation – 11

 At the coffee shop

Uraiyaadal – Coffee Kadaiyil
உரையாடல் – காஃபி கடையில்

One on One Tamil class

Conversation between a Kala and Mala

CONVERSATION 11
AT THE COFFEE SHOP
CONVERSATION BETWEEN Kala & Mala

Mala: Kala! Eppadi irukka?
Mala: Kala! How are you?
Mala: கலா! எப்படி இருக்க?

Kala: Nallaa irukkaen. Nee eppadi irukka? Unnoada husband (kanavar), pillainga ellaarum eppadi irukkaanga?
Kala: I am fine. How are you? How are your children and husband?
கலா: நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? உன்னோட ஹஸ்பண்ட் (கணவர்), பிள்ளைங்க எல்லாரும் எப்படி இருக்காங்க?

Mala: Ellaarum nallaa irukkaanga. Enna coffee shop-kku thaniyaa vandhu irukka?
Mala: All are fine. Have you come alone to the coffee shop?
Mala: எல்லாரும் நல்லா இருக்காங்க. என்ன காஃபி ஷாப்-க்கு(கடை) தனியா வந்துருக்க?

Kala: Shopping mudichchu coffee kudichchuttu poagalaam-nnu vandhaen. Inga unna paaththuttaen.
Kala: I finished shopping and came for a coffee before heading home. Here I saw you.
கலா: ஷாப்பிங் முடிச்சு காஃபி குடிச்சுட்டு போலாமுன்னு வந்தேன். இங்க உன்ன பாத்துட்டேன்.

Mala: Aamaa, naan Sunitha-va tuition-la vida vandhaen. oru mani naeram kalichchu avala pick-up pannanum. Coffee kudichittu poagalaam-nu vandhaen. Sari, unnoada kanavar-kku transfer aaga poaradhaa sonniae, eppo poaga poareenga?
Mala: Yes, I came to drop Sunitha at tuition center. I will pick her up after one hour. I came here to drink coffee. Ok, you told that your husband is going to get transfer, when are you leaving?
Mala: ஆமா, நான் சுனிதாவ ட்யூசன்ல (பயிற்சி) விட வந்தேன். ஒரு மணி நேரம் கழிச்சு அவள பிக்-அப் (கூப்புட போகணும்) பண்ணனும். காஃபி குடிச்சுட்டு போகலாமுன்னு வந்தேன். சரி, உன்னோட கணவருக்கு ட்ரான்ஸ்பர் (இட மாற்றம்) ஆக போறதா சொன்னியே, எப்போ போக போறீங்க?

Kala: Innum paththu naal-la naanga kilambanum.
Kala: We will leave within 10 days.
கலா: இன்னும் பத்து நாள்ல நாங்க கிளம்பணும்.

Mala: Things (saamaangal) ellaam pack (katta) panna aarambichchittiyaa?
Mala: Did you start packing the entire luggage?
Mala: திங்க்ஸ் (சாமான்கள்) எல்லாம் பேக் (கட்ட) பண்ண ஆரம்பிச்சிட்டியா?

Kala: Aamaa. Pillainga school-kku (palli) poanadhum chinna porulkal-a ellaam pack panna aarambichchuttaen.
Kala: Yes. I have started packing the small things when children leave to school.
கலா: ஆமா. பிள்ளைங்க ஸ்கூலுக்கு (பள்ளி) போனதும் சின்ன பொருள்கள எல்லாம் பேக் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

Mala: Endha petti-la ennenna irukku-nnu ezhudhi vachchukko. Apa dhaan thirumba edukka vasadhiyaa irukkum. Enakku indha vaaram konjam mukkiyamaana velai irukku. Aduththa vaaram vandhu unakku udhavi seiraen.
Mala: Write down and keep what things are in which box. That would be easy to take back. I have some importance work this week. I will come and help you next week.
Mala: எந்த பெட்டில என்னென்ன இருக்குன்னு எழுதி வச்சுக்கோ. அப்ப தான் திரும்ப எடுக்க வசதியா இருக்கும். எனக்கு இந்த வாரம் சில முக்கியமான வேலைகள் இருக்கு. அடுத்த வாரம் வந்து உனக்கு உதவி செய்றேன்.

Kala: Sari. Nee eppa-venaalum vaa.
Kala: Ok. You may come at any time.
கலா: சரி. நீ எப்ப வேனாலும் வா.

Mala: Un pillainga CBSE school-la dhaana padikkuraanga. Neenga poara oorla CBSE school irukkaa?
Mala: Your children are studying in CBSE School. Is there a CBSE School in that town?
Mala: உன் பிள்ளைங்க சி‌பி‌எஸ்‌இ ஸ்கூல்ல தான படிக்குறாங்க. நீங்க போற ஊர்ல சி‌பி‌எஸ்‌இ ஸ்கூல் இருக்கா?

Kala: Aamaa. Avangala anga saekkuradhukku thayaar pannitoam.
Kala: Yes. Arrangements have been made to enroll them there.
கலா: ஆமா. அவங்கள அங்க சேக்குறதுக்கு தயார் பண்ணிட்டோம்.
Mala: Veedu paaththutia?
Mala: Have you seen the house?
Mala: வீடு பாத்துட்டியா?

Kala: Veedu online-laye paaththoam. Poana vaaram naanga andha oorukku poyi veeda paaththu advance (munpanam) kuduththuttu vandhuttoam. Annaikkae school-kkum poyi admission-kku kaettoam. Avanga written test vaikkanum-nu solli irukkaanga. Adhukku aduththa vaaram poaganum.
Kala: We saw the house online. Last week we went to the town, saw the house and gave advance. We went to the school the same day and asked for admission. They said that they will conduct written test. For that, we should go there.
கலா: வீடு ஆன்லைன்-லயே (இணையதளம்) பாத்தோம். போன வாரம் நாங்க அந்த ஊருக்கு போயி வீட்ட பாத்து அட்வான்ஸ் (முன்பணம்) குடுத்துட்டு வந்துட்டோம். அன்னைக்கே ஸ்கூலுக்கும் போயி அட்மிஷனுக்கு (சேர்க்கை) கேட்டோம். அவங்க ரிட்டன் டெஸ்ட் (எழுத்து தேர்வு) வைக்கணுமுன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு அடுத்த வாரம் போகணும்.

Mala: Veettukkum schoolukkum evvalavu dhooram?
Mala: How far is it to school and house?
Mala: வீட்டுக்கும், ஸ்கூலுக்கும் எவ்வளவு தூரம்?

Kala: School-kku pakkaththula dhaan veedu.
Kala: The house is near the school.
கலா: ஸ்கூலுக்கு பக்கத்துல தான் வீடு.

Mala: Veettu vaadaga evvalavu?
Mala: How much is the house rent?
Mala: வீட்டு வாடக எவ்வளவு?
Kala: Iruvadhu aayiram ruva.
Kala: Rs.20,000/-
கலா: இருவதாயிரம் ருவா.

Mala: Vaadaga romba adhigamaa irukkae!
Mala: House rent is too much!
Mala: வாடக ரொம்ப அதிகமா இருக்கே!

Kala: Pillainga-la naanae kondu poi vittuttu vandhuruvaen. Adanaal-a dhaan vaadagai konjam koodanaalum indha veeda select (thearvu) pannoam.
Kala: I will drop andpick the children from school. That is why we chose this house for just little higher rent.
கலா: பிள்ளைங்க- ல நானே கொண்டு போய் விட்டுட்டு வந்துருவேன். அதனால தான் வாடகை கொஞ்சம் கூடனாலும் இந்த வீட செலக்ட் (தேர்வு) பண்ணோம்.

Mala: Vaera yaedhaavadhu saappuduriya?
Mala: Do you want something else?
Mala: வேற ஏதாவது சாப்புடுறீயா?

Kala: Vaendaam. Naan kilamburaen. Pillainga school-la irundhu varra naeram aachchu.
Kala: No. I am leaving. It is time for children to come from school.
கலா: வேண்டாம். நான் கிளம்புறேன். பிள்ளைகள் ஸ்கூல்ல இருந்து வர்ற நேரம் ஆச்சு.

Mala: Sari. Aduththa vaaram sandhippoam.
Mala: Ok. We will meet next week.
Mala: சரி. அடுத்த வாரம் சந்திப்போம்.
Kala: Sari. Bye Mala.
Kala: Ok. Bye Mala.
கலா: சரி. பை Mala.

Mala: Bye.
Mala: Bye.
Mala: பை.

Conversation

32 Conversations in colloquial Tamil and English

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?