Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
தொடர்வட்டி கூட்டுவட்டிcompound interest
தொடர்வைப்புக் கணக்கு (வங்கி, அஞ்சல்நிலையம் முதலியவற்றில்) குறிப்பிட்ட ஆண்டுகள்வரை மாதாமாதம் தொடர்ந்து ஒரு தொகையைச் செலுத்திச் சேமித்து வட்டியோடு திரும்பப் பெறும் முறைrecurring deposit (in a bank, post office, etc.)
தொடரியல் வாக்கிய அமைப்பின் விதிமுறைகளையும் வாக்கியங்களுக்கு இடையிலான உறவையும் விளக்கும் மொழியியல் பிரிவுsyntax
தொடி (பெண்கள்) தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்துகொள்ளும் பிடிப்பான அணி வகைa kind of armlet (worn by women in former times)
தொடுகறி முக்கிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்dish prepared to go with courses of a meal
தொடுவானம் அடிவானம்horizon
தொடை (மனிதரில்) இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையே உள்ள, (விலங்குகளில்) பின்னங்கால்களின் மேல் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி(of human beings) thigh
தொடைதட்டு (ஒருவர் சண்டை, தகராறு முதலியவற்றிற்கு) உற்சாகத்துடனும் பரபரப்புடனும் தயாராதல்get ready for a fight with gusto
தொடைநடுங்கி பயந்து நடுங்குபவன்timid person
தொடைநடுங்கு மிகவும் பயப்படுதல்feel timid
தொண்டர் ஒரு கட்சியிலோ பொதுநல அமைப்பிலோ ஊதியம் இல்லாமல் பணி செய்பவர்worker (in a party)
தொண்டு தன்னலம் கருதாமல், ஆதாயம் எதிர்பாராமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சி போன்றவற்றிற்காகச் செய்யும் பணிservice
தொண்டு கிழம் மிகவும் வயதான ஆண் அல்லது பெண்very old person
தொண்டு நிறுவனம் லாப நோக்கில் இல்லாமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சிக்காகப் பணியாற்றும் நிறுவனம்service organization or society
தொண்டை உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான கழுத்தின் உள் பகுதிthroat
தொண்டை அடைப்பான் பெரும்பாலும் குழந்தைகளுக்குக் காய்ச்சல், தொண்டைப்புண் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி மூக்கினுள்ளும் உதடுகளின் மீதும் மஞ்சளான சாம்பல் நிறப் படலத்தை உண்டாக்கும் தொற்றுநோய்diphtheria
தொண்டைக்கட்டு சாப்பிடவும் பேசவும் முடியாமல் தொண்டை கட்டியிருக்கும் நிலைsore throat
தொண்டைகட்டு (ஜலதோஷம், தொடர்ச்சியான பேச்சு முதலியவற்றினால்) சரியாகப் பேச முடியாதபடி குரல் கம்முதல்have a sore throat
தொண்ணூறு பத்தின் ஒன்பது மடங்கைக் குறிக்கும் எண்(the number) ninety
தொணதொண எரிச்சலையும் வெறுப்பையும் உண்டாக்குகிற வகையில் ஒன்றையே திரும்பத்திரும்பப் பேசுதல்pester
தொணதொணப்பு எரிச்சலை ஏற்படுத்தும் தொடர்ந்த பேச்சுnagging
தொத்தல் சதைப்பிடிப்பு இல்லாமல் மிகவும் ஒல்லியாக இருப்பதுskinny
தொந்தம் சம்பந்தம்connection
தொந்தரவு தொல்லைtrouble
தொந்தி பருத்து முன்தள்ளிக் காணப்படும் வயிறுpaunch
தொப்பல் உடல் முழுவதும் நீர் சொட்ட ஈரத்துடன் இருக்கும் நிலை(soaking) wet
தொப்பி தலையில் அணிந்துகொள்ளும், பல வடிவத்தில் இருக்கும் தலை உறைhat (of various shapes and sizes)
தொப்புள் வயிற்றின் நடுவில் சுழி போன்று குழிந்து காணப்படும் சிறு பகுதிnavel
தொப்புள்கொடி தாயின் கருப்பைக்குள் சிசுவை அதன் தொப்புள் வழியாக நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் குழாய்umbilical cord
தொப்பை தொந்திpot belly
தொப்பைதள்ளு வயிறு பெருத்து முன்பக்கம் சரிதல்develop a pot belly
தொம்பக்கூத்தாடி கழைக்கூத்தாடிacrobat
தொம்பன் கூடை முடைபவன்basket weaver
தொம்பை (நெல் முதலிய தானியம் சேமித்து வைப்பதற்குப் பயன்படும்) மூங்கிலால் செய்யப்பட்ட குதிர் போன்ற கூடைa huge bamboo basket (to store grains like paddy)
தொய் இறுக்கம் அல்லது விறைப்பு இழந்து தளர்ந்து தாழ்தல்become slack
தொய்வு (-ஆக, -ஆன) (இறுக்கம் அல்லது விறைப்பு இழப்பதால் ஏற்படும்) தளர்வுslackness
தொல் தொன்மையானancient
தொல்பொருள் முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கிடைக்கும் கட்டடப் பகுதிகள், பாண்டம், கருவி முதலியவை அல்லது அவற்றின் சிதைவுகள்artifacts of archaeological value
தொல்பொருளியல்/தொல்லியல் தொல்பொருள்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் ஆய்வுarchaeology
தொல்லை தொந்தரவுannoyance
தொலை1(எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி) காணாமல்போதல்lose
தொலை2(பேசுபவரின் நோக்கில்) எரிச்சலையும் வெறுப்பையும் வெளிப்படுத்த உதவும் ஒரு துணை வினைan auxiliary verb expressing irritation, vexation, etc நான் புறப்படும் நேரத்தில் வந்துதொலைந்தான்
தொலை4(கட்டாயத்தினால் ஒரு செயலைச் செய்ய நேரும்போது) வெறுப்பையும் எரிச்சலையும் வெளிப்படுத்தும் ஒரு துணை வினைan auxiliary verb expressing impatience, irritation, etc
தொலை5தொலைவுdistance
தொலை எழுதி ஒரு முனையில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் செய்தியை மறு முனையில் தானாகத் தட்டச்சுப் பதிவு செய்யும் மின் கருவிteleprinter
தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியையோ காட்சியையோ ஒளிப்பதிவு செய்து மின்காந்த அலைகளாக மாற்றி ஒளிபரப்பி அதைப் படமாகக் காணும் முறைtelevision
தொலைக்காட்சிப் பெட்டி தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்படுவதை உள்வாங்கிக் காட்சிகளாக மாற்றிக் காட்டும் (திரை முதலியவை உள்ள) பெட்டி போன்ற கருவிtelevision set
தொலைத்தொடர்பு தொலைபேசி, தந்தி முதலிய நவீனச் சாதனங்கள்மூலம் ஓர் இடத்திலிருந்து செய்திகளை அனுப்புதலும் பெறுதலுமான செயல்பாடுtelecommunications
தொலைதூரத் தொடர்பகம் தொலைபேசிமூலம் தொலைவில் உள்ள இடங்களை இணைக்கும் நிலையம்(of telephones) trunk exchange
தொலைதூரம் வெகு தூரம்long distance
தொலைநோக்கி தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ஆடிகள் பொருத்திய குழல் வடிவக் கருவிbinoculars
தொலைநோக்கு எதிர்காலத்தில் ஏற்பட வேண்டிய நலனைக் கருத்தில்கொண்ட கணிப்புfarsightedness
தொலைப்பதிவு தொலை எழுதிமூலம் அனுப்பப்படும் தந்தி முறைச் செய்திtelex
தொலைபேசி பேச்சொலியை மின்னலைகளாகவும் மின்னலைகளைப் பேச்சொலியாகவும் மாற்றிக் கம்பிமூலம் அனுப்பித் தொலைவில் உள்ளவர்கள் தொடர்புகொண்டு பேசிக்கொள்வதற்கு உதவும் கருவிtelephone
தொலைபேசித் தொடர்பகம் தொலைபேசிகளுக்கிடையே தேவைப்படுகிற இணைப்பை ஏற்படுத்தித் தருகிற நிலையம்telephone exchange
தொலைவு இரு இடங்களுக்கு அல்லது பொருள்களுக்கு இடையில் உள்ள அளவு(குறிப்பிடப்படும் ஒருவரிடமிருந்து அல்லது ஒன்றிலிருந்து) விலகியிருக்கும் அளவுதூரம்distance
தொழில் (பொதுவாக) வேலைprofession
தொழில் காய்ச்சல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு அதே தொழில் செய்யும் மற்றொருவருக்கு ஏற்படும் பொறாமைprofessional jealousy
தொழில் துறை தொழில் துவங்குதல், மேம்படுத்துதல் முதலியவற்றைக் கவனிக்கும் அரசுத் துறை(of government) department of industry
தொழில் நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்து தொழில் நடத்தும் நிறுவனம்industrial concern
தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரங்கள் தொடர்புடைய தொழில்முறைக் கல்வியைப் பாடமாகக் கொண்டு தொழில் பயிற்சி அளிக்கும் கல்லூரிeducational institution providing training in trades connected with machines and tools
தொழில்நுட்பம் உற்பத்தியில் நேரடியாகப் பயன்படுத்தக் கூடிய தொழில்பற்றிய அறிவும் வழிமுறைகளும்technology
தொழில்மயமாக்கு (ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் பொருளாதார முன்னேற்றம் கருதித் தொழிற்சாலைகளைப் பெருக்குவதன்மூலம்) தொழில் வளர்ச்சி பெறச்செய்தல்industrialize
தொழில்முறை ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு தொழிலை வளர்ப்பதற்குத் தேவையானதுvocational
தொழில் முனைவோர் மூலதனம் போட்டு ஒரு தொழிலைத் துவங்கத் திட்டமிடுபவர்entrepreneur
தொழில்வரி மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குள் தொழிலை மேற்கொண்டவர்கள் மீது விதிக்கும் வரிprofession tax
தொழிலாளர் உடல் உழைப்பைத் தந்து சம்பளம் பெற்று ஒரு தொழிலைச் செய்பவர் அல்லது தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்கிப் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுபவர்(manual or industrial) worker
தொழிலாளி உடல் உழைப்பை வேண்டுகிற தொழிலைச் செய்பவர்labourer
தொழிற்கல்வி தொழில்முறைக்குத் தேவையான அடிப்படை அறிவையும் பயிற்சியையும் அளிக்கும் கல்விtechnical education
தொழிற்கூடம் தொழிற்சாலைindustrial plant or unit
தொழிற்சங்கம் தொழிலாளர்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டமைப்புtrade union
தொழிற்சாலை இயந்திரங்களின் உதவியால் பொருள்களை (பெருமளவில்) உற்பத்திசெய்யும் இடம்factory
தொழிற்படு இயங்குதல்function
தொழிற்பாடு செயல்பாடுfunction
தொழிற்புரட்சி (ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில்) புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பால் தொழில் துறையில் ஏற்பட்ட பெரும் மாற்றம்industrial revolution
தொழிற்பெயர் (பெயர்த் தன்மையோடு வினைத் தன்மையும் உடையதாக) வினையிலிருந்து பெறப்பட்டு வழங்கும் பெயர்ச்சொல்verbal noun
தொழிற்பேட்டை குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகி, பெருமளவில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக அரசு ஏற்படுத்தித் தந்திருக்கும் இடம்cluster of industries in a place set aside by the government
தொழு1(கடவுளை) வழிபடுதல்worship
தொழுகை (முஸ்லிம்கள்) மனத்தில் இறைவனை நினைத்து மெக்கா இருக்கும் திசையை நோக்கிச் செய்யும் வணக்கம்/(கிறித்தவர்) புனித நூலிலிருந்து வாசகங்களைக் கூறிச் செய்யும் வழிபாடுprayer
தொழுநோய் தோல் தடித்தல், தொடு உணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்leprosy
தொழுவம் (பெரும்பாலும்) மாடுகளைக் கட்டி வைக்கும் (கூரை போடப்பட்ட) இடம்cattle shed
தொழுவுரம் கால்நடைகளின் கழிவைச் சேமித்து நிலத்தில் இட்டுச் சேர்க்கும் உரம்farmyard manure
தொளதொள (தைக்கப்பட்ட ஆடைகளைக்குறித்து வருகையில்) உடலுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக இல்லாமல் பெரிதாக உள்ள(of garments) loose
தொளதொள-என்று/-என்ற (தைக்கப்பட்ட ஆடையைக் குறிக்கையில்) உடலுக்குச் சற்றுப் பெரிதாக/உடலுக்குச் சற்றுப் பெரிதான(hanging) loosely/loose
தொற்று1பாய்ந்து பிடித்தல்catch hold of
தொற்று2(பெரும்பாலும் கலைச்சொல்லாக) (வைரஸ் போன்ற) நுண்கிருமிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புinfection
தொற்றுநோய் நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதன்மூலம் பரவும் நோய்contagious disease
தொன்மை காலத்தால் மிகவும் முற்பட்டதுantiquity
தொன்றுதொட்டு மிக நீண்ட காலமாகfrom time immemorial
தொன்னை வாழை இலையையோ வேறு இலைகளையோ சுருட்டித் தைத்துச் செய்யப்பட்ட சிறு கிண்ணம் போன்ற சாதனம்plantain leaf or any other large leaf rolled into a cup-like form (for serving eatables)
தோட்டம் மலர்ச் செடிகள் அல்லது (சிறிய அளவில்) காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்garden (adjacent to a house)
தோட்டா துப்பாக்கிக் குண்டுcartridge
தோட்டி தெரு முதலியவற்றைச் சுத்தம் செய்யும் ஊழியர்sanitary worker
தோடா ஆண்கள் கையில் மணிக்கட்டுப் பகுதியில் அணிந்துகொள்ளும் வளையல் போன்ற பெரிய உலோக வளையம்large bracelet (worn on the wrist by men as a mark of honour)
தோடு1(பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட) வட்ட வடிவத் தங்கக் காதணிear stud (normally studded with precious stones, such as diamonds and worn by women)
தோடு2(புளியம்பழம் போன்றவற்றின்) மேல்புற ஓடுshell (of certain fruits, esp
தோண்டி (தண்ணீர் எடுப்பதற்கான) மண் அல்லது உலோகக் கலம்(earthen or metal) pot (for drawing and carrying water)
தோண்டு (கையால் அல்லது கருவியால்) மண்ணை (பள்ளம் ஏற்படும்படி) அகற்றுதல்dig (the earth so as to make a hole or pit)
தோணி துடுப்பால் தள்ளப்படும் படகு(rowing) boat
தோது (ஒன்றைச் செய்வதற்கு ஏற்ற) வசதிconvenience
   Page 102 of 204    1 … 100 101 102 103 104 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil