Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
தாரைவார் (திருமணத்தில் மகளை அல்லது ஒரு பொருளைத் தானம் செய்யும்போது) கைகளில் நீரை வார்த்து ஒப்படைத்தல்offer
தாலாட்டு1(குழந்தையைத் தூங்கவைப்பதற்காக) தாலாட்டுப் பாடுதல்rock (a child) singing lullabies
தாலாட்டு2குழந்தையைத் தூங்கவைப்பதற்காக இனிய மெட்டுடன் பாடும் (நாட்டுப்புற அல்லது அந்தப் பாணியில் எழுதப்பட்ட) பாடல்lullaby (song)
தாலிப்பொட்டு தாலிச் சங்கிலியில் அல்லது கயிற்றில் கோக்கப்படும் மங்கல உருவம் பதிக்கப்பட்ட வட்டத் தகடுcoin shaped structure impressed with holy figures which is strung to the nuptial chain
தாலு(க்)கா மாவட்டத்தின் உட்பிரிவுsubdivision of a district
தாவங்கட்டை முகவாய்chin
தாவணி1(இளம் பெண்கள்) மார்பில் அணிந்துகொள்ளும் ஒரு சுற்றே வரக் கூடிய, சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடைupper garment (worn by young girls) over the skirt, lengthwise less than half a saree
தாவர உண்ணி தாவரங்களை உணவாக உண்ணும் உயிரினம்herbivore
தாவர எண்ணெய் தேங்காய், கடலை, எள் முதலியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்oil extracted from coconut, groundnut, etc
தாவரம் நிலத்தில் வேர்விட்டு அல்லது நீரில் மிதந்து தண்டோடும் இலைகளோடும் வளர்வதுplant
தாவரவியல் தாவரங்களைப்பற்றி விவரிக்கும் அறிவியல் துறைbotany
தாவரவியல் பூங்கா (அரிதாகக் காணப்படுபவை உட்பட) பல வகையான தாவரங்கள் காட்சிக்காக வளர்க்கப்பட்டுள்ள இடம்botanical garden
தாவா (பெரும்பாலும் நாடுகள், மாநிலங்கள் இவற்றிற்கு இடையில்) பிணக்குdispute (mostly between countries, states, etc.)
தாவு1(கீழிருந்து மேலாகவோ இருந்த இடத்திலிருந்து மற்றோரிடத்துக்கோ) உந்திப் பாய்தல்leap
தாவு2(ஒருவருடைய) பலம்strength
தாழ்1கீழ் நோக்கி வருதல்come down
தாழ்ந்த மோசமானlow
தாழ்ந்துபோ (ஒருவரின் அதிகாரம், பேச்சு முதலியவற்றுக்கு) பணிந்து நடத்தல்yield
தாழ்ப்பாள் (மூடிய கதவு திறந்துகொள்ளாமல் இருக்கும் வகையில்) கதவின் நிலையில், கதவில் உள்ள துளையினுள் அல்லது வளையத்தினுள் சென்று பொருந்தக் கூடிய விதத்தில் அமைந்திருக்கும் உலோகத் தண்டுடன் கூடிய சாதனம்latch
தாழ்மை (-ஆக, -ஆன) (ஏதேனும் ஒன்றைத் தெரிவிக்கையில்) பணிவுsaying sth. in a humble way
தாழ்வாரம் (வீடு, கட்டடம் முதலியவற்றின் முன்புறத்தில்) சாய்வாக நீட்டிக்கப்பட்ட கூரையின் கீழ் உள்ள பகுதிthe front of the building with a sloping roof and open to the street
தாழ்வு (-ஆக, -ஆன) குறைந்த உயரம்(of height) low
தாழ்வுணர்ச்சி/தாழ்வு மனப்பான்மை மற்றவர்களைவிடத் தான் தாழ்ந்தவன் என்ற எண்ணம்inferiority complex
தாழ தாழ்வாக(of height) low
தாழங்குடை (கவிழ்ந்த தட்டுப் போன்ற அமைப்பில்) தாழை மடல்களை இணைத்துக் கைப்பிடி செருகிய மடக்க முடியாத குடைumbrella made of screwpine leaves which cannot be folded
தாழம்பூ தாழையின் மணம் மிகுந்த வெளிர் மஞ்சள் நிற மடல்screwpine flower
தாழிடு (கதவை) தாழ்ப்பாள்மூலமாக அடைத்தல்latch (the door)
தாழை புதராகப் படர்ந்து வளரும் மணம் மிகுந்த நீண்ட மடல்கள் உள்ள ஒரு வகைத் தாவரம்fragrant screwpine
தாள்1(எழுதுதல், அச்சடித்தல் முதலியவற்றுக்கான) மரக் கூழ், கரும்புச் சக்கை முதலியவற்றிலிருந்து தயாரிக்கப்படுவதும் தக்க வடிவத்தில் வெட்டப்பட்ட பரப்புடையதுமான மெல்லிய பொருள்paper
தாள்2(நெல், கம்பு முதலிய) பயிர்களின் கதிர் தவிர்ந்த பாகம்stubble
தாள்3பாதம்feet
தாள்4தாழ்ப்பாள்latch
தாளக்கட்டு தாளத்தோடு சேர்ந்து ஆட வேண்டிய முறைchoreographic setting of rhythmic movement within the framework of a pattern or cycle of rhythm
தாளடி குறுவைக்குப் பிறகு பயிரிடப்படும் இரண்டாவது நெல் சாகுபடிthe second crop of paddy
தாளம் (இசை) அட்சரக் காலங்களைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொண்ட சேர்க்கைthe pattern in the beating of time
தாளம்போடு2(அடிப்படைத் தேவைக்கே) மிகவும் திண்டாடுதல்suffer greatly
தாளம்மை பொன்னுக்குவீங்கிmumps
தாள வாத்தியம் (தவில், மிருதங்கம் போன்ற) தட்டி வாசிக்கும் தோல் கருவிpercussion instrument
தாளாமல்/தாளாத தாங்க முடியாமல்/தாங்க முடியாதunable to bear/unbearable
தாளாளர் (தனியார் கல்வி நிறுவனங்களில்) கல்வி சாராத பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர்one who is in charge of non-academic, administrative work of a private educational institution
தாளி கொதிக்கும் எண்ணெய்யில் படபடவென்று பொரியும் கடுகு, உளுத்தம்பருப்பு முதலியவற்றை மணம் சேர்ப்பதற்காக (குழம்பு, சட்னி போன்றவற்றோடு) கலத்தல்season
தாளிதம் தாளித்தல்seasoning
தாறுமாறாக/தாறுமாறான முறையும் ஒழுங்கும் இல்லாமல்/முறையும் ஒழுங்கும் இல்லாதwithout any order or regularity/disorder
தான்தோன்றித்தனம் எந்த ஒரு கட்டுப்பாடும் ஒழுங்கும் இல்லாமல் தன் இஷ்டப்படி செயல்படும் விதம்irresponsibility
தானம்1(சேவை அல்லது நன்மை செய்யும் நோக்கத்தில்) தன்னிடம் இருப்பதை அல்லது தன்னால் முடிந்ததை எந்த விதப் பயனையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல்charity
தானியங்கி (இயந்திரம், கருவி முதலியவற்றைக் குறித்து வருகையில்) மனிதனால் தொடர்ந்து இயக்கப்படாமல் தானாக இயங்கக் கூடிய அல்லது குறிப்பிட்ட சில செயல்களை மட்டும் தானாகவே தொடர்ந்து நிகழ்த்தக் கூடியautomatic
தானியம் (உணவுப் பொருளாகப் பயன்படும்) நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்களின் மணிகள்grain
தானை படைarmy
தாஜாபண்ணு (இனிமையாகப் பேசி அல்லது மகிழ்விக்கும்படியான காரியங்கள் செய்து ஒருவரை) தன் வழிக்கு ஒத்துவரச்செய்தல்coax (by kind words or deeds)
திக்கற்ற பொருளாதார வசதியோ தன்னை ஆதரிப்பவரோ இல்லாத(of people) with nobody to support or nowhere to go
திக்கித்திணறு (ஒன்றைச் செய்வதில் அல்லது சிக்கலில் மாட்டிக்கொண்டு) அதிகச் சிரமப்படுதல்struggle
திக்கு1(பேச்சு உறுப்பின் குறைபாடு காரணமாக அல்லது துக்கம், அதிர்ச்சி முதலியவற்றின் காரணமாக) சொற்கள் தடைபடுதல்stammer (habitually or due to shock, sorrow, etc.)
திக்கு2திசை(point of) direction
திக்குமுக்காடு மிகவும் திணறுதல்struggle
திக்குவாய் திக்கிப் பேசும் குறைstammering
திக்கென் (எதிர்பாராத செய்தி, நிகழ்ச்சி முதலியவற்றால் அல்லது நிகழ்ச்சியின் பாதிப்பால்) திடீரென்று பயம் தோன்றுதல்get a fright
திக்பிரமை சுய உணர்வு முழுவதையும் இழந்துவிடும் வகையிலான நிலைshocked state
திகட்டு (ஒரு அளவுக்கு மேல் உண்ண முடியாதபடி) இனிப்புப் பொருளை எதிர்மறுக்கும் நிலை ஏற்படுதல்cloy
திகழ் (ஒன்று ஓர் இடத்தில்) பொலிவுடன் இருத்தல்glow with lustre
திகில் (பயம் நிறைந்த காட்சி பார்ப்பவரின் மனத்தில் எழுப்பும்) கலக்க உணர்வுfright
திகுதிகு-என்று (தீ) கடும் வெப்பத்துடன் வேகமாக/(புண்) கடும் வலியுடன்(of fire) rapidly with intense heat/(of sore that burns) without let up
திகை1மலைத்தல்be perplexed
திகை2(பெண்ணுக்கு வரன்) தகைதல்be suitably found
திகை3(எதிர்பாராமல் நிகழ்வதை அல்லது இயல்புக்கு மாறாக இருப்பதை) உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படமுடியாத நிலைக்கு உள்ளாதல்be astonished
திகைப்பு (ஒரு நிலைமையை) உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படமுடியாத நிலைdisbelief
திங்கள் சந்திரன் moon
திசு குறிப்பிட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்கான ஒத்த வடிவ உயிரணுக்களின் தொகுப்புtissue
திசை சூரியன் உதிப்பதையும் மறைவதையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் பக்கம்direction
திசைச்சொல் பண்டைத் தமிழகத்தை ஒட்டியிருந்த நிலப் பகுதிகளிலிருந்து வந்து வழங்கிய சொல்borrowings made in the past found in Tamil from adjacent lands
திசைமானி எப்போதும் வடக்குத் திசையையே காட்டும் முள்ளை உடைய (திசை அறிவதற்கான) கருவிcompass
திட்டக்குழு அரசு மேற்கொள்ள வேண்டிய சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை வகுத்துக் கொடுக்கக் கூடிய வல்லுநர்கள் அடங்கிய குழுa body of experts to advise the government in developmental policies and schemes
திட்டப்படுத்து உறுதிப்படுத்துதல்confirm
திட்டம் (தனி நபர்) ஒரு செயலை அல்லது (அரசு போன்றவை) சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பதற்கு உரிய வழிமுறைகளை ஆலோசித்துத் தயாரிக்கும் செயல்முறை அல்லது ஏற்பாடுplan
திட்டவட்டம்-ஆக/-ஆன உறுதியாகfirmly
திட்டிவாசல் (கோயில், கோட்டை முதலியவை அடைத்திருக்கும்போது ஆட்கள் உள்ளே சென்று வரும் வகையில்) பெரிய கதவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய திறப்பு அல்லது வாயில்wicket gate (in the door of a temple or fort)
திட்டு2மனத்தைப் புண்படுத்தும் பேச்சுscolding
திட்டு3சற்று மேடாகத் தெரியும் சிறிய பரப்புடைய பகுதிraised ground
திட்டை சிறு மேடுraised ground
திட்பம் வலிமைfirmness
திட உணவு (திரவமாக இல்லாமல் மென்று சாப்பிடக் கூடியதாக இருக்கும்) இட்லி, சாதம் போன்ற உணவுsolid food (as opposed to liquid food)
திடகாத்திரம் ஆரோக்கியம் நிறைந்த உடல் அமைப்பு(of health or body) robustness
திடப்படுத்து (மனத்தை) உறுதியான நிலையில் இருக்கச்செய்தல்brace (oneself)
திடப் பொருள் கெட்டித் தன்மையையும் ஒரு வடிவத்தையும் உடைய பொருள்solid
திடம் (-ஆக, -ஆன) (நம்பிக்கை, கருத்து முதலியவற்றைக் குறிப்பிடும்போது) நிலையானது(of belief, opinion, etc.) firmness
திடல் (விளையாட்டு, பொருட்காட்சி முதலியவை நடக்கும்) பரந்த வெளிopen space
திடீர் (எந்த வித) அறிவிப்பும் (நிகழ்வதற்கான) அறிகுறியும் இல்லாதsudden
திடீர்-என்று முன்னறிவிப்பு அல்லது அறிகுறி இல்லாமல்suddenly
திடுதிடு-என்று சத்தத்துடன் வேகமாக(noisily) fast
திடும்-என்று திடீரென்றுall on a sudden
திண்டாட்டம் (தேவையானது கிடைக்காத) தவிப்பு(இக்கட்டான சூழ்நிலையில்) அல்லல்அவதிstraits
திண்டாடு (தேவையானது கிடைக்காததாலோ இக்கட்டான சூழலிலோ) தவித்தல்struggle
திண்டு (சாய்ந்து உட்கார்வதற்குப் பயன்படுத்தும்) அரை வட்ட அல்லது நீள் உருண்டை வடிவத் தலையணைsemicircular or long cylindrical (cotton stuffed) pillow or cushion
திண்ணக்கம் திமிர்haughtiness
திண்ணம் (ஒன்றை வலியுறுத்திக் கூறுகையில்) நிச்சயம்certainty
திண்ணிய வலிமை செறிந்தstrong
திண்ணை (பழங்கால) வீடுகளில் நுழைவாயிலின் பக்கவாட்டில் இரு புறங்களிலும் உட்கார்வதற்கும் படுப்பதற்கும் ஏற்ற வகையில் கட்டப்பட்டிருக்கும் சற்று உயரமான மேடை போன்ற அமைப்புraised platform at the entrance of a house for the purpose of resting
திண்ணைக்குறடு திண்ணையை ஒட்டி அமைந்துள்ள படிstep adjacent to திண்ணை
திண்ணைப் பள்ளிக்கூடம் (முற்காலத்தில் ஆசிரியர் மாணவர்களை) வீட்டுத் திண்ணையில் அமர்த்திக் கல்வி கற்பித்த முறை(in olden days) school conducted (by a teacher) on a pial
திண்மம் (பெரும்பாலும் கலைச்சொல்லாக) திடத் தன்மை(mostly technically) solidity
திணறு தவித்தல்suffer
   Page 104 of 204    1 102 103 104 105 106 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil