Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
திரேகம் உடல்body
திரேதம் (புராணத்தில்) நான்கு யுகங்களுள் இரண்டாவது யுகம்(in purana) the second of the four aeons
திரை1(பால்) திரிதல்(of milk) turn sour
திரை2(கட்டியிருக்கும் ஆடையைத் தேவையான அளவுக்கு மடிப்புமடிப்பாக) சுருக்கி உயர்த்துதல்roll up
திரை3(ஜன்னல் முதலியவற்றில் மறைப்பாகவோ அறை முதலியவற்றில் தடுப்பாகவோ மாட்டப்படும் அல்லது தொங்க விடப்படும்) மடிப்புகள் கொண்டதாகத் தைக்கப்பட்ட துணிcurtain
திரைஅரங்கம் (பார்வையாளர்களுக்கு) திரைப்படம் காட்டப்படும் கட்டடம்movie theatre
திரைக்கதை திரைப்படமாகத் தயாரிக்கத் தகுந்த முறையில் காட்சிகளாகப் பிரித்து எழுதப்பட்ட கதைscreen play
திரைச்சீலை (கதவு, ஜன்னல் முதலியவற்றில்) தொங்கும் திரைcurtain (for door, windows)
திரைப்படம் (கதையின் அடிப்படையில் அமைந்த காட்சிகளைக் கலையம்சத்தோடு) புகைப்படச் சுருளில் பதிவுசெய்து திரையில் காட்டுவதுa film
திரைமறைவு (நேரடியாகத் தெரியாமல்) மறைமுகமாக அல்லது ரகசியமாக நடைபெறுவதுbehind the screen
திரையிடு (பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் திரைப்படத்தை) திரையில் விழச்செய்தல், திரையில் காட்டுதல்screen (a film)
தில்லானா (இசையில்) தில்லா அல்லது தில்லானா என்று முடியும் ஒரு வகை இசைப் பாடல்a musical composition ending with தில்லா or தில்லானா
தில்லுமுல்லு முறையற்ற வழியைப் பின்பற்றி ஒரு காரியத்தை முடிப்பதுwheeling and dealing
திலகம்1(நெற்றியில் இட்டுக்கொள்ளும்) பொட்டுmark on the forehead (of women)
திலகம்2தான் சார்ந்துள்ள துறையில் அல்லது தன் இனத்தில் திறமை வாய்ந்தவர், சிறந்தவர் என்பதைச் சிறப்பிக்கும் வகையில் சேர்க்கப்படும் பட்டம்a title given to a professional of excellence or to the best in a category of people
திவ்(வி)யம் தெய்வீகத் தன்மை divinity
திவசம் திதிdeath anniversary
திவலை (நீர்) துளிdrop (of water)
திவால் (ஒருவரோ ஒரு நிறுவனமோ) கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாது போகும் நிலைbankruptcy
திவான் அரசரால் நியமிக்கப்பட்டு சமஸ்தானத்தின் நிதி நிர்வாகப் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்ட பிரதான மந்திரிa chief administrative officer of an Indian princely state to look after its revenue administration
திளை (ஒன்றில் மூழ்கி) சுகம் அனுபவித்தல்enjoy oneself immensely (immersed in joy)
திற (கதவு போன்றவை) சாத்தியிருக்கும் நிலையிலிருந்து நுழைவதற்கு ஏற்ற நிலைக்கு நகர்தல் அல்லது (கதவு போன்றவற்றை) நுழைவதற்கு ஏற்ற நிலைக்கு நகர்த்துதல்(of doors, etc.) open
திறந்த மூடப்படாதopen
திறந்த மனம் விருப்புவெறுப்புகளின்படி நடக்காமல் எதையும் வரவேற்கிற பரந்த மனம்open mind
திறந்தவெளிச் சிறைச்சாலை கைதிகள் அறைகளில் அடைக்கப்படாமல் திறந்தவெளியில் இருக்குமாறு உள்ள சிறைச்சாலைopen air jail
திறந்தவெளிப் பல்கலைக்கழகம் கல்வி கற்பிப்பதற்கு வழக்கமாக எதிர்பார்க்கும் முன் தகுதிகள் இல்லாதவர்க்கும் வயதின் அடிப்படையில் கல்வி வழங்கும் பல்கலைக்கழகம்open University
திறந்துவை (புதிய கடை, கட்டடம் முதலியவற்றின்) செயல்பாட்டைத் தொடங்கிவைத்தல்/(புதிய சிலை முதலியவற்றை) காட்சிக்காக வெளிப்படுத்துதல்inaugurate
திறப்பு1(கதவு, தடுப்புப் போன்றவற்றில்) பார்க்கும்படியாகவும் ஒன்றை வாங்கும்படியாகவும் அமைந்திருக்கும் சிறு துளை அல்லது வழிsmall opening (in a door or at a counter)
திறப்பு2சாவிkey
திறப்பு விழா (கடை, சிலை போன்றவற்றை) திறந்துவைப்பதற்கான நிகழ்ச்சிinauguration
திறம்பட (ஒருவர் ஒன்றில் தன்னுடைய) திறமை முழுவதும் வெளிப்படும் வகையில்as best (one can)
திறமை (ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கிற வகையில்) தகுந்த வழிமுறைகளை வகுக்கும் நுட்பம்skill
திறவுகோல் சாவிkey
திறன் திறமைskill
திறனாய்வாளர் திறனாய்வு செய்பவர்(literary) critic
திறனாய்வு (கதை, கவிதை முதலியவற்றுக்கு) நெறிமுறைக்குட்பட்ட மதிப்பீடு(mostly literary) evaluation
திறை (பழங்காலத்தில்) ஒரு பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த சிற்றரசர்கள் பேரரசருக்குச் செலுத்திய வரிtribute (paid by the feudatories to the king)
திறைசேரி அரசுக் கருவூலம்(government) treasury
தின்பண்டம் (முக்கிய உணவாக இல்லாமல்) அவ்வப்போது உண்ணப்படும் முறுக்கு, (குழந்தைகளுக்கான) மிட்டாய் போன்ற உணவுeatables (such as savouries, sweets,etc.)
தினசரி1நாளிதழ்newspaper
தினசரி2ஒவ்வொரு நாளும், தினந்தோறும்/அன்றாடdaily
தினப்படி1அரசாங்க அல்லது நிறுவன ஊழியர்கள் அலுவலின் பொருட்டு வெளியிடங்களுக்குச் செல்லும்போது அந் நாளின் செலவுக்கென்று அனுமதிக்கப்படும் தொகைdaily allowance
தினப்படி2தினசரிdaily/day to day
தினம்1நாள்day
தினம்2/தினமும்ஒவ்வொரு நாளும்daily
தினவு (ஒன்றை அடைய அல்லது செய்ய வேண்டும் என்கிற) தீவிர உந்துதல்itch
தினுசு (குறிப்பிடப்படுவது) வேறுபடுத்தி அறியக் கூடிய வகையில் அமைவதுkind
தினை கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானிய வகைmillet (in general)
தீ1எரிக்கக் கூடிய தன்மையுடையதும் வெப்பத்தையும் ஒளியையும் தருவதுமான ஓர் இயற்கை சக்திfire
தீ2(பிற சொற்களோடு இணைந்து) தீய(in combined form) evil
தீக்காயம் (உடலில்) நெருப்புச் சுடுவதால் உண்டாகும் காயம்burns
தீக்குச்சி (சொரசொரப்பான பரப்பில் தேய்த்தால்) தீப்பற்றிக்கொள்ளக் கூடிய தன்மை கொண்ட ரசாயனப் பொருள் ஒரு முனையில் பூசப்பட்ட சிறிய மெல்லிய குச்சி(safety) match
தீக்குழி தீமிதிfire-walking (by devotees)
தீக்குளி (தற்கொலை செய்துகொள்ளும் அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கத்தோடு தன்னை) எரித்துக்கொள்ளுதல்immolate
தீங்கு (ஒருவருக்கு அல்லது ஒன்றின் இயல்பான தன்மைக்கு) கெடுதல் விளைவிக்கக் கூடியதுharm
தீச்சட்டி (பெரும்பாலும்) அம்மன் கோயிலுக்குப் பிரார்த்தனையாகக் கையில் எடுத்துச் செல்லும் நெருப்புள்ள மண்சட்டிfire pot carried with bare hands by devotees of mother-goddess in fulfilment of a vow
தீசல் (குழம்பு முதலியவற்றில்) மிகவும் தீய்ந்து அல்லது வற்றிப் போனது(in sauce, etc.) that which is charred or excessively heated
தீட்சண்யம் (புலன் சக்தியிலும் அறிவிலும்) கூர்மைkeenness (of observation, intellect, etc.)
தீட்சை தகுதியான குருவை அடைந்த ஒருவருக்கு குருவின் பார்வை, உபதேசம் முதலியவற்றால் உணர்த்தப்பட்டுத் தொடங்கிவைக்கப்படும் புதிய வாழ்க்கை நெறிthe vow to observe the path into which one was initiated by a guru with his glance, mystic words, etc
தீட்டு1(கத்தி, கத்தரிக்கோல் போன்றவற்றைச் சாணைக்கல்லில்) கூராக்குவதற்குத் தேய்த்தல்sharpen
தீட்டு2(பிரசவித்த அல்லது மாதவிலக்கில் உள்ள பெண்ணைத் தொடுவது அல்லது இறந்துபோன ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவது முதலியவற்றால் ஒருவருக்கு ஏற்படுவதாக நம்பப்படும்) தூய்மைக் குறைவுdefilement
தீண்டாமை (தீட்டு ஏற்படும் என்ற பழைய நம்பிக்கையில்) தொட்டுவிடாமல் விலகி இருக்கும் நிலைthe custom of keeping off people as untouchables
தீண்டு (பாம்பு, விஷப்பூச்சி போன்றவை) கடித்தல்(of snakes, poisonous insects, etc.) bite
தீது தீமையானதுthat which is harmful
தீப்பள்ளயம் தீமிதி விழாfire-walking festival
தீப்பெட்டி திறந்து எடுக்கக் கூடிய உள் அறையையும் வெளிப்பகுதியின் இரு பக்கங்களிலும் தீக்குச்சியை உரசுவதற்கான ரசாயனப் பரப்பையும் கொண்ட கையடக்கமான பெட்டிmatchbox
தீபகற்பம் மூன்று பக்கம் கடல் சூழ்ந்திருக்கும் நிலப் பகுதிpeninsula
தீபம் தாவர எண்ணெய், நெய் ஆகியவை ஊற்றி எரிக்கும் விளக்குlamp (burning with vegetable oil, ghee)
தீபஸ்தம்பம் அகன்ற வட்டமான அடிப்பாகமும் நீண்ட தண்டும் தண்டின் முனையில் ஐந்து தனித்தனித் திரிகளும் கொண்ட விளக்கு a circular oil lamp with five separate wicks borne by a stem standing on a circular base
தீபாராதனை கடவுள் விக்கிரகத்தின் அல்லது படத்தின் முன்பு தீபத்தை இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றிச் செய்யும் வழிபாடுwaving lighted lamps three times clockwise before an idol, while worshipping
தீபாவளி அதிகாலையில் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகிப் புத்தாடை உடுத்தி வெடி வெடித்துக் கொண்டாடும் பண்டிகைa festival celebrated (sometime in October-November) in the small hours by taking bath with oil, wearing new clothes and firing crackers
தீம் (பிற சொற்களோடு இணைந்து) இனிய(in combined form) sweet
தீமிதி (பெரும்பாலும் மாரியம்மன் கோயில்களில் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு) தணல் நிரப்பிய பரப்பில் நடந்துசெல்லும் சடங்குa ritual walking across a pit filled with live coals (in fulfilment of a vow)
தீமூட்டு (சிதைக்கு) தீ வைத்தல்light the funeral pyre
தீமை கேடு விளைவிப்பதுwrong (as opposed to right)
தீய்1(தீயினால் அல்லது அதிகப்படியான சூட்டினால்) எரிந்துபோதல்be burnt
தீய்2(தீயில் அல்லது அதிகச் சூட்டில்) கருக்குதல்get scorched by overroasting
தீய ஊறு விளைவிக்கக் கூடியinjurious
தீயணைப்புப்படை (தீ விபத்து ஏற்படும்போது) தீயை அணைப்பதற்காகப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட அமைப்புfire brigade
தீர்1(ஒரு பொருளை உபயோகத்துக்கு எடுத்துக்கொண்டே இருப்பதால்) இல்லாமல்போதல்be exhausted or be used up
தீர்2முதன்மை வினை குறிப்பிடும் செயலைத் தவறாமல் முடித்தல் என்பதைக் குறிப்பிடும் துணை வினைan auxiliary verb used to indicate that the action of the main verb is to be completed without fail
தீர்க்கசுமங்கலி (பெரும்பாலும் ஒருவரை வாழ்த்தும்போது) நீண்ட காலம் சுமங்கலியாக வாழ்பவள்(in blessing) woman with a long and happy married life
தீர்க்கதரிசனம் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன் உணர்ந்து சொல்லக் கூடிய அல்லது செயல்படக் கூடிய அறிவுprophesy
தீர்க்கதரிசி எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன் உணர்ந்து சொல்லக் கூடிய அல்லது செயல்படக் கூடிய அறிவு உடையவர்prophet
தீர்க்கம் (பேச்சு, கருத்து, முடிவு முதலியவை குறித்து வருகையில்) தெளிவுclarity
தீர்க்கரேகை (நில நடுக்கோட்டிலிருந்து தூரத்தைக் கணக்கிடும் முறையில்) பூமியின் மேற்பரப்பில் வடக்கிலிருந்து தெற்கில் செல்வதாக வரைந்துள்ள கோடுline of longitude
தீர்த்தங்கரர் (சமணத்தில்) அருகபதவி அடைந்த இருபத்து நான்கு பேர்(in Jainism) Arhats (saints), twentyfour in number
தீர்த்தத் தொட்டி (கோயிலில்) அபிஷேக நீர் தேங்குவதற்கான தொட்டிa tub-like construction in which the water used in bathing the idol (in temples) collects
தீர்த்தம் புனிதத் தலங்களிலுள்ள ஆறு, குளம் முதலிய நீர்நிலை அல்லது அவற்றின் நீர்water sources in sacred places or the water brought from sacred place
தீர்த்தயாத்திரை திருத்தலங்களில் அமைந்துள்ள நீர்நிலைகளில் நீராட பக்தர்கள் மேற்கொள்ளும் பயணம்pilgrimage to the water sources at sacred places or shrines
தீர்ப்பளி (இரு தரப்பு வாதங்களையும் கேட்டு விசாரித்து) சட்டபூர்வமாகத் தீர்ப்பு வழங்குதல்/நியாயம் கூறுதல்(in a court of law) pronounce judgement/(in a village gathering) give a binding decision
தீர்ப்பாணை ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைச் செயல்படுத்துமாறு நீதிமன்றத்தால் முறைப்படி இடப்படும் ஆணைdecree
தீர்ப்பாயம் (நீதிமன்றம் போல் செயல்படும்) குறிப்பிட்ட சில பிரச்சினைகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் படைத்த ஒருவர் அல்லது ஒரு குழு அடங்கிய தனியமைப்புtribunal
தீர்ப்புரை (ஒரு வழக்கின் தொடர்பாக) நீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம், சாட்சிகளின் வாக்குமூலம், சாட்சியங்கள் முதலியவற்றின் அடிப்படையில் வழங்கும் தீர்ப்புக்கான காரணங்கள், முடிவு ஆகியவற்றைக் கூறும் நீதிபதியின் உரை(text of the) judgement
தீர்மானம்1(ஒருவர் ஒன்றைக்குறித்துக் கொள்ளும்) உறுதியான கருத்து அல்லது முடிவுconclusion
தீர்மானம்2கோர்வைa phrase coming at the end of a sequence of ஸ்வரம் or சொற்கட்டு (with special reference to தாளம்)
தீர்மானி (ஒன்றை) முடிவுசெய்தல்take a decision
தீர்வு (ஒரு பிரச்சினை, சிக்கல் முதலியவற்றை) தீர்க்கும் அல்லது முடிவுசெய்யும் வகையில் அமையும் வழிமுறைsolution (to a problem, etc.)
தீர்வை வரிduty
தீர ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டுthoroughly
   Page 106 of 204    1 104 105 106 107 108 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil