Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
திணிப்பு | விருப்பத்துக்கு மாறாகத் திட்டம், முடிவு போன்றவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும் செயல்(ஒன்றை) ஏற்கச்செய்யும் பலவந்தம் | imposition |
திணை | மனிதர்களையும் விலங்குகளையும் பொருள்களையும் பிரிக்கும் பகுப்பு | class (of nouns based on human, non-human distinction) |
திணைக்களம் | (அரசு) துறை | (government) department |
தித்தி | இனித்தல் | taste sweet |
தித்திப்பு | இனிப்பு | sweetness |
திதி | அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்குப் பின் வரும் காலத்தைப் பதினைந்தாகப் பிரித்த பிரிவுகளில் ஒன்று | lunar day |
திப்பி | (மோரில்) கொழுப்புச் சத்தின் துணுக்கு(பழச்சாற்றில்) சதைப் பகுதியின் துண்டு | bits of matter (which float on butter milk, fruit juice) |
திப்பிலி | (நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும்) கறுப்பாகவும் சொரசொரப்பாகவும் இருக்கும் ஒரு வகை நீண்ட கொடி | long pepper (as a medicinal plant) |
திமிங்கலம் | கடலில் வாழும், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த, மீனைப் போன்ற உருவம் உடைய பெரிய விலங்கு | whale |
திமிசு/திமிசுக்கட்டை | (தரையைச் சமப்படுத்திக் கெட்டியாக்க) நீண்ட கம்பின் அடிப்பகுதியில் கனமான கட்டையைப் பொருத்திச் செய்த கருவி | heavy wooden block with a long handle used as a rammer |
திமிர் | பிறரை மதிக்காத போக்கு | haughtiness |
திமில் | (காளையின் அல்லது ஒட்டகத்தின்) முதுகில் கழுத்தை அடுத்து உயர்ந்து காணப்படும் பகுதி | hump |
திமிலோகப்படு | பெரும் பரபரப்பு அடைதல் | be in commotion |
திமுதிமு-என்று | (கூட்டமாகப் பலர் வருவதை அல்லது ஓடுவதைக் குறிக்கையில்) பலத்த காலடி ஓசையுடன் | (of group of people) with heavy footsteps |
தியாகம் | பிறருடைய நலனுக்காகத் தன் சொந்த நலனை அல்லது தன்னை இழக்கத் துணியும் செயல் | sacrifice |
தியாகி | தியாகம் புரிந்தவர் | one who sacrifices (for a public cause) |
தியாலம் | (குறிப்பிடப்படும் மணி) நேரம் | hour (that is specified) |
தியானம் | மனத்தை அலைபாயவிடாமல் ஒருமுகப்படுத்துவது | meditation |
தியானி | (கடவுளின் மீது அல்லது ஒன்றின் மீது) மனத்தை ஒருமுகப்படுத்துதல் | meditate |
திரட்சி | (உள்ளீட்டின் செறிவால்) உருண்டையாகவும் சதைப்பற்றோடும் இருப்பது | plumpness |
திரட்டு1 | (பலரிடமிருந்து, பல இடங்களிலிருந்து) பெற்று ஒன்றாக்குதல் | collect (money, information, etc.) |
திரட்டு2 | (பாடல், கட்டுரை முதலியவற்றின்) தொகுப்பு | anthology |
திரட்டுப்பால் | பாலைச் சுண்டக் காய்ச்சிச் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம் | a kind of milk sweet |
திரண்ட | மொத்த | vast |
திரவ உணவு | (மென்று உண்ண வேண்டிய திடப் பொருளாக இல்லாமல் அப்படியே விழுங்கக் கூடிய) கஞ்சி, பழச்சாறு, பால் போன்ற உணவு | food in liquid state (as opposed to solid food) |
திரவம் | வழிந்தோடுதல், வெப்பத்தால் ஆவியாதல் முதலிய தன்மைகளைக் கொண்ட, தனக்கென்று நிலையான வடிவம் இல்லாத பொருள் | liquid |
திரள்1 | (மக்கள்) பெருமளவில் சேர்தல் | (of people) gather |
திரள்2 | (பெண்) பருவ வயது அடைதல் | (of girls) come of age |
திரள்3 | (-ஆக, -ஆன) (பலர்) ஒன்று கூடிய நிலை | (of people) gathering |
திராட்சை | புளிப்புக் கலந்த இனிப்புச் சுவையுடைய கறுப்பு அல்லது வெளிர்ப் பச்சை நிறமுடைய உருண்டையான பழம்/மேற்கூறிய பழம் காய்க்கும் கொடி | grape/grapevine |
திராட்டில்விடு | (வழிநடத்துவதாக அல்லது உதவி செய்வதாகச் சொல்லிவிட்டு அவ்வாறு செய்யாமல்) நடுவில் கைவிடுதல் | leave |
திராணி | (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சக்தி | (physical) strength |
திராபை | (எந்த விதத்திலும்) மதிப்பற்றது | worthless (stuff) |
திராவகம் | உடல் வெந்துபோகும் அளவுக்கு வீரியமுள்ள அமிலம் | concentrated acid |
திராவிடம் | தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைப் பேசும் மக்கள் அதிகமாக வாழும் நிலப் பகுதி | land where Tamil, Telugu, Kannada, Malayalam, etc are spoken |
திரி1 | (விலங்குகள்) சுற்றிவருதல்/(குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல்) இடங்களுக்குப் போய்வருதல் | roam/follow |
திரி2 | (பால் முதலியவற்றில் உள்ள சத்துப் பொருள் திட்டுத்திட்டாக மிதக்கிற நிலையில்) பிரிதல் | (of milk, etc.) get spoiled |
திரி3 | முதன்மை வினை குறிப்பிடும் செயல் ஒருவரால் பல முறை செய்யப்படுவதை அல்லது அவ்வாறு செய்யப்படுவதன்மூலம் பரப்பப்படுவதைப் பேசுபவர் விரும்பவில்லை என்பதைக் காட்டும் ஒரு துணை வினை | an auxiliary verb which, when added to certain verbs, indicates the disapproval of the speaker of the way in which sth. is being spread or circulated |
திரி5 | (குத்துவிளக்கு முதலியவற்றில் நெருப்புப் பற்ற வைப்பதற்கான) பட்டையாகவோ குழல் வடிவிலோ திரிக்கப்பட்ட பஞ்சு அல்லது துணி | wick (either a roll of cotton or cloth) |
திரிகாலம் | (கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய) மூன்று காலம் | time in three divisions (viz |
திரிகை | எந்திரம் | quern |
திரிசங்கு நிலை | இரு பக்க வாய்ப்பையும் இழந்து இடையில் மாட்டிக்கொண்ட நிலை | the state of being left in the middle having lost both options |
திரிசமன் | கையாடுதல், அபகரித்தல் போன்ற தகாத செயல் | misdeed (such as swindling) |
திரிசூரணம் | (வைணவ சமயக் குறியான நாமத்தில்) சிவப்பு நிறக் கோடு போடப் பயன்படுத்தும் பொடி | the powder for the red middle line of the Vaishnava religious mark |
திரிசூலம் | மூன்று முனைகளை உடைய உலோகத்தாலான நீண்ட ஆயுதம் | trident |
திரித்துவம் | பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருமித்த கடவுள் | (Holy) Trinity |
திரு2 | இறைவனோடு தொடர்புடைய அல்லது மங்கலமான சொற்களுக்கு முன் இடப்படும் அடை | a prefix added to holy or auspicious objects, etc திருக்கோயில்/ திருவடி/ திருமாங்கல்யம் |
திருக்கண்ணமுது | பாயசம் | a kind of liquid pudding |
திருக்கல்யாணம் | (கோயில்களில்) தெய்வங்களுக்கு நடத்திவைக்கப்படும் திருமண உற்சவம் | (in temples) a wedding festival conducted for the deities |
திருக்காப்பு | கோயில் கதவு | door of a temple |
திருக்கை | முட்கள் அடர்ந்த நீண்ட கூரிய வாலை உடைய தட்டையான கடல் மீன் | sting ray |
திருகாணி | பிளவுபட்டதைப் போன்ற தலைப் பகுதியையும் மரையோடு கூடிய கீழ்ப்பகுதியையும் கொண்ட, திருகி உள்ளே செலுத்தக் கூடிய ஆணி | screw |
திருகு1 | (திருகாணி முதலியவற்றை) சுற்றி உட்செலுத்துதல் | turn |
திருகுதாளம் | மாறுபட்ட பேச்சு அல்லது புரட்டுச் செயல் | trick |
திருச்சபை | அமைப்பு ரீதியில் செயல்படும் கிறித்தவச் சமூகம் | the Church |
திருட்டு1 | தனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை உரியோரின் அனுமதி இல்லாமல் எடுக்கும் முறையற்ற செயல் | theft |
திருட்டுப்போ | (பணம், பொருள் முதலியன) திருடப்படுதல் | be stolen |
திருடன் | திருடுபவன் | thief |
திருடி | திருடன் என்பதன் பெண்பால் | feminine of திருடன் |
திருடு1 | தனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை உரியோரின் அனுமதி இல்லாமல் எடுத்தல் | steal |
திருடு2 | களவு | theft |
திருத்தம் | (எழுதப்பட்டவற்றில் அல்லது அச்சிடப்பட்டவற்றில் உள்ள) தவறுகளை நீக்கி ஒழுங்குபடுத்தித் தரும் முறை | correction (in a written or printed text) |
திருத்தமாக/திருத்தமான | தவறு இல்லாமல் | correctly |
திருத்தியமை | (ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டம், போடப்பட்ட திட்டம் முதலியவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்கி) ஒழுங்குபடுத்தி அமைத்தல் | amend |
திருந்த | திருத்தமாக | correctly |
திருந்து | தவறான பழக்கவழக்கங்களிலிருந்து விலகுதல் | be reformed |
திருநாள் | பண்டிகை நாள் | festival |
திருநீறு | சைவர்கள் உடலில் பூசிக்கொள்வதற்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட சாம்பல் | sacred ash (of the Saivites) |
திருப்தி | (ஒன்று) நிறைவேறியதால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் அமைதி | satisfaction |
திருப்பணி | கோயில், கோபுரம் முதலியவை கட்டுதல், கோயிலைப் பழுதுபார்த்துப் புதுப்பித்தல் முதலிய வேலை | work connected with construction, renovation, etc of a temple |
திருப்பம் | (பாதை, சாலை ஆகியவை) திரும்பும் இடம் | turn |
திருப்பள்ளியெழுச்சி | (கோயில்களில்) இறைவனைத் துயில் எழுப்பும் முறையில் பாடப்படும் பாடல் | song for waking up the deity (in temples) |
திருப்பி | முதலில் எங்கிருந்ததோ யாரிடமிருந்ததோ அங்கே அல்லது அவரிடமே சேருமாறு | back (to the place or person of origin) |
திருப்பு | இருக்கும் அல்லது செல்லும் திசையிலிருந்து மாற்றுதல் | turn |
திருப்பு முனை | குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவது | turning point |
திரும்ப | நிகழ்ந்ததன் மறுவரவாக | again |
திரும்பப்பெறு | (சமர்ப்பித்த பொருள், தீர்மானம் முதலியவற்றை) மீண்டும் வாங்கிக் கொள்ளுதல் | withdraw (what was submitted) |
திரும்பு | புறப்பட்ட இடத்திற்கோ பழைய நிலைக்கோ வருதல் அல்லது செல்லுதல் | return |
திருமகள் | செல்வத்திற்கான தெய்வம் | goddess of wealth |
திருமஞ்சனம் | குறிப்பிட்ட இடத்திலிருந்து நீரைக் கொண்டுவந்து மந்திரம் சொல்லி வழிபாட்டிற்கான விக்கிரகத்தை நீராட்டுதல் | a ritual bathing of the deity of a temple in water brought from an appointed place |
திருமண் | (வைணவர்கள்) நாமம் இட்டுக்கொள்ளப் பயன்படுத்தும் வெள்ளை நிறக் கட்டி | chalk-like white earth used for drawing நாமம் (by Vaishnavites) |
திருமணம் | ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் நிகழ்ச்சி அல்லது சடங்கு | marriage |
திருமதி | மதிப்புத் தரும் முறையில் திருமணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் இடப்படும் அடை | a title for a married woman |
திருமால் | காத்தல் தொழிலுக்கு உரிய இறைவன் | vishnu, the deity who sustains the Universe |
திருமுறை | (சைவத்தில்) நாயன்மார்களும் அடியார்களும் சிவன் மீது பாடிய பாடல்களைப் பன்னிரண்டு பிரிவுகளாகப் பிரித்துத் தொகுத்திருக்கும் தொகுப்பு | saiva canonical literature (12 in numbers) |
திருமேனி | (கோவில்களில்) கடவுள் சிலை | (sacred) image of the deity |
திருவாட்சி | கோயிலில் கடவுள் விக்கிரகம் இருக்கும் பீடத்தின் மேல் அமைந்திருக்கும், வேலைப்பாட்டுடன் கூடிய அரைவட்ட அலங்கார உலோக அமைப்பு | ornamental arch fitted behind the pedestal of an idol |
திருவாதிரை | இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஆறாவது | sixth of the twentyseven stars |
திருவாய்மலர் | (ஞானி, முனிவர் போன்றோர்) சொற்களால் வெளிப்படுத்துதல்(அரிய கருத்துகளை) எடுத்துரைத்தல்உபதேசித்தல் | (of saints, sages) utter |
திருவாழத்தான் | எந்த ஒரு வேலையையும் முறைப்படி செய்யாமல் கெடுத்துவிடுபவன் | one who spoils the work by his clumsy handling |
திருவாளர் | மதிப்புத் தரும் முறையில் ஓர் ஆணின் பெயருக்கு முன்னால் இடப்படும் அடை | mister (Mr |
திருவாளர்கள் | திருவாளர் என்பதன் பன்மை வடிவம் | plural of Mister |
திருவிழா | (கோயில்) உற்சவம் | festival (in a temple) |
திருவுருவம் | (வழிபாட்டிற்கான) இறைவனின் உருவம் | image of god |
திருவுளச்சீட்டு | முடிவு செய்வதற்காகத் தெய்வத்தின் முன்பாகக் குலுக்கிப் போட்டு எடுக்கும் சீட்டு | lots drawn to obtain divine guidance while taking a decision |
திருவோடு | (துறவி போன்றோர்) பிச்சைப்பாத்திரமாகப் பயன்படுத்தும் (ஒரு வகை மரத்தில்) காய்க்கும் காயின் காய்ந்த ஓடு | shell of a fruit used as begging bowl |
திருவோணம் | இருபத்தேழு நட்சத்திரங்களுள் இருபத்திரண்டாவது | the twentysecond of the twentyseven stars |
திருஷ்டி | கெடுதல் விளைவிக்கக் கூடிய பார்வை | evil eye (cast on others) |
திருஷ்டி கழி | திருஷ்டியை நீக்கும் பொருட்டுச் சடங்குசெய்தல் | dispel the effects of the evil eye (by some ceremony) |
திருஷ்டிப் பரிகாரம் | திருஷ்டி படுவதால் உண்டாகும் தீங்கை நீக்குவதற்குச் செய்யும் மாற்று | remedy for removing the effects of the evil eye |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
