Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பாறை | பெரும் பரப்பு உடைய ஒரே கல் | rock |
| பாறைஉப்பு | பாறைகளிலிருந்து கிடைக்கும் சமையல் உப்பு | rock-salt |
| பான்மை | பாங்கு | manner |
| பானகம் | நீரில் வெல்லத்தைக் கரைத்துச் சுக்கு முதலியவை கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்புப் பானம் | jaggery water with a dash of dried ginger, cardamom etc |
| பானம் | (சுவையூட்டும் பொருள்களைக் கலந்து தயாரிக்கப்படும்) குடிப்பதற்கான திரவம் | (any) drink |
| பானை | அரைக் கோள வடிவ அடிப்பகுதியும் அகன்ற வாயும் உடைய பாத்திரம் | pot |
| பாஷ்யம் | (தத்துவ, இலக்கண நூல்களுக்கு எழுதப்பட்ட) விரிவான உரை | elaborate commentary (mostly on philosophical, grammatical treatises) |
| பாஷாணம் | விஷம் | poison |
| பாஷை | மொழி | language |
| பிக்கல்பிடுங்கல் | (பணத் தேவை, கடன், நிறைவேற்ற வேண்டிய பணி போன்றவை ஏற்படுத்தும்) தொந்தரவு | (minor) vexations |
| பிக்கு | (பௌத்த) துறவி | (Buddhist) monk |
| பிகு | (ஒரு செயலைச் செய்வதற்கு) பிறர் தன்னை மிகவும் வேண்டிக்கொள்ள வைக்கும் முறை | superior air |
| பிங்கான் | (உணவு சாப்பிடுவதற்கு உரிய) தட்டு | plate |
| பிச்சி1 | சற்று நீண்ட காம்பில் வெண்மையான இதழ்களுடைய மணம் மிகுந்த மல்லிகை | a kind of jasmine |
| பிச்சி2 | பித்துப்பிடித்தவள் | crazy woman |
| பிச்சுவா | (ஆயுதமாகப் பயன்படும்) இரு பக்கங்களிலும் வெட்டும் பதத்தையும் வளைந்த கூர்மையான முன்பகுதியையும் உடைய கத்தி | dagger with a curved point |
| பிச்சை | ஊதியமாக இல்லாமல் பிறரின் கருணையால் பெறுவது | alms |
| பிச்சைக்காசு | மிகச் சிறிய அளவு | pittance |
| பிச்சைக்காரன் | பிச்சை வாங்கிப் பிழைப்பவன் | beggar |
| பிச்சைக்காரி | பிச்சைக்காரன் என்பதன் பெண்பால் | feminine of பிச்சைக்காரன் |
| பிச்சையெடு | (பிழைப்பிற்காக உணவையோ பணத்தையோ) கெஞ்சிப் பெறுதல் | beg |
| பிசகு1 | (கால், கை போன்ற உறுப்பு) சுளுக்குதல் | get sprained |
| பிசகு2 | தவறு | mistake |
| பிசறு | (ஒரு பொருளுடன் இன்னொரு பொருளைக் கலப்பதற்காகக் கையால்) கிளறுதல் | mix |
| பிசாசு | ஒருவரைப் பற்றிக்கொண்டு தான் நினைத்ததை அவரைக் கொண்டு செய்விப்பதாகவும் அவரை ஆட்டிப்படைப்பதாகவும் நம்பப்படும் தீய சக்தி அல்லது கெட்ட ஆவி | devil |
| பிசானம் | தாளடி | second crop of paddy |
| பிசிர் | (துணி, மரத் துண்டு முதலியவற்றிலிருந்து) தனித்துத் தெரியும் அளவுக்கு ஒழுங்கற்று உதிரிஉதிரியாக நீட்டிக்கொண்டிருக்கும் மெல்லிய பகுதி | frayed end |
| பிசின் | (சில வகை மரங்களிலிருந்து வடியும்) ஒட்டும் தன்மையுள்ள கெட்டியான திரவம் | gum |
| பிசினாறி | (கீழ்த்தரமான) கஞ்சன் | (lowly) miser |
| பிசுக்கு | (எண்ணெய்) படிந்து ஏற்பட்ட பிசுபிசுப்பு | grease |
| பிசுபிசு1 | பசைத் தன்மையை அல்லது ஒட்டுவதை உணர்தல் | feel sticky |
| பிசுபிசு2 | (மழை) அடித்துப் பெய்யாமல் சிறு தூறலாக விழுதல் | drizzle |
| பிசுபிசுப்பு | தொட்டால் ஒட்டிக்கொள்ளக் கூடிய தன்மை | stickiness |
| பிசை | (கையால்) அழுத்திப் புரட்டி உருட்டுதல் | knead |
| பிஞ்சில்பழு | இளம் வயதில் மூத்த வயதினரின் விரும்பத்தகாத செயல் அல்லது நடத்தை படிதல் | (of a child) develop precocious interests |
| பிஞ்சு | (தாவரங்களில்) பூவிலிருந்து தோன்றிய நிலையில் இருக்கும் இளங்காய்/முற்றலாக இல்லாத காய் | (green) fruit/tender unripe fruit |
| பிட்டம் | ஆசனவாயை ஒட்டியிருக்கும் திரண்ட சதைப் பகுதி | (of persons) bottom |
| பிட்டி | இடுப்பெலும்பைச் சுற்றியுள்ள பகுதி | hip-joint |
| பிட்டு | இனிப்போ காரமோ சேர்த்து வேகவைத்த, அரிசி மாவாலான சிற்றுண்டி | steamed rice flour sweetened or spiced, served as a dish |
| பிட்டுவை | (மறைத்து வைக்கப்பட்டிருப்பதை) வெளிப்படையாக அல்லது விளக்கமாகச் சொல்லுதல் | expose |
| பிடாரன் | பாம்பாட்டி | snake-charmer |
| பிடாரி | கையில் சூலமும் முன் தள்ளிய நாக்குமாகத் தோற்றம் தரும் கிராமக் காவல் (பெண்) தெய்வம் | a village (female) deity with protruding tongue and a trident in the hand |
| பிடி1 | (ஒரு கைக்குள் அல்லது இரு கைகளுக்குள்) இருக்கும்படிசெய்தல் | catch |
| பிடி2 | (நான்காம் வேற்றுமையோடு) விரும்புதல்(மனம் ஒன்றில்) நாட்டம் கொள்ளுதல் | like |
| பிடி4 | கைக்குள் இருக்கும் நிலை | hold |
| பிடி5 | பெண் யானை | she-elephant |
| பிடி6 | இசைக் கலைஞரின் திறமையை வெளிப்படுத்தும் புதுமையான ஸ்வர அமைப்பு | an original way of ordering and rendering of ஸ்வரம் |
| பிடி ஆணை | குற்றம்சாட்டப்பட்டவரை அல்லது விசாரணைக்கு நீதிமன்றம் வர மறுப்பவரைக் கைதுசெய்து அழைத்து வருமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு | warrant of arrest |
| பிடித்தம்1 | (ஒருவருக்குச் சேர வேண்டிய தொகையில் அல்லது ஒன்றிற்கு ஏற்படுத்தப்பட்ட விலையில் குறிப்பிட்ட காரணங்களுக்காக) கழிக்கப்படுவது | deduction (effected in a sum at the time of payment) |
| பிடித்தம்2 | விருப்பம் | liking |
| பிடித்து | (தொடர்ந்து நிகழும் செயலைக் குறிக்கையில்) முதல் | (starting) from (a given moment) |
| பிடிப்பு | ஒரு நிலையில் நிலைக்க ஆதரவாக அமைவது | hold or support |
| பிடிபடு | (சட்ட விரோதமான பொருள்களோ குற்றம் செய்தவரோ உரியோரின்) வசத்தில் மாட்டுதல் | be seized |
| பிடிமானம் | பிடிப்பு | hold |
| பிடில் | வில்லால் வாசிக்கக் கூடிய வகையில் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட தந்திகளை உடைய இசைக் கருவி | fiddle |
| பிடிவாதம் | சிறிதும் விட்டுக்கொடுக்காத (பிறருக்குச் சங்கடம் ஏற்படுத்துகிற) உறுதி | obstinacy |
| பிடுங்கு | (ஓர் இடத்தில் பதிந்திருப்பதை அல்லது ஒருவர் வைத்திருப்பதை) விசையுடன் அகற்றுதல் அல்லது எடுத்துக்கொள்ளுதல் | pull out |
| பிண்டம் | வடிவம் இல்லாத சதைத் திரள் | formless mass of flesh |
| பிண்ணாக்கு | நிலக்கடலை, எள் முதலிய எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய் எடுத்த பின் மிஞ்சும் சக்கை | oilcake |
| பிணக்கம்/பிணக்கு | உறவை அல்லது தொடர்பை முறிக்கும் வகையிலான தகராறு | strife |
| பிணங்கு | (ஒருவரோடு) மாறுபாடுகொள்ளுதல் | be at variance |
| பிணம் | (பெரும்பாலும் மனிதர்களின்) உயிர்போன உடல் | corpse |
| பிணவறை | சவக்கிடங்கு | mortuary |
| பிணி1 | சேர்த்துக் கட்டுதல் | hold (together) |
| பிணி2 | நோய் | disease |
| பிணியாளி | நோயாளி | sick person |
| பிணை1 | (ஒன்றோடு ஒன்று) நெருக்கமாக இணைதல் | intertwine |
| பிணை2 | கட்டுதல்(முறுக்கியோ முடிச்சு போட்டோ) இணைத்தல் | fasten |
| பிணை3 | உத்தரவாதம் | guarantee |
| பிணைக்கைதி | பணயக்கைதி | hostage |
| பிணைச்சல் | கதவை நிலையோடு பொருத்த உதவும் இரும்புப் பட்டை | hinge |
| பிணைத்தொகை | பணயக்கைதியை விடுவிப்பதற்குக் கேட்கும் தொகை | ransom |
| பிணைப்பணம் | ஜாமீன் தொகை | money given as security |
| பிணைப்பு | (நட்பால்) நெருக்கம்(உறவு, அன்பு முதலியவற்றால் ஏற்படும்) நெருங்கிய தொடர்பு | closeness |
| பிணையத்தொகை | ஒன்றுக்கு உறுதிகூறிக் கையெழுத்திட்டு, உறுதி கூறியவாறு நடக்காது போகுமானால் தான் பொறுப்பேற்றுக் கட்டுவதாக ஒப்புக்கொண்ட தொகை | amount named in a bond of surety or security |
| பிணையல் | பரப்பிய கதிர் மீது ஓட்டுவதற்காக மாடுகளைப் பிணைத்தல் | the tying of oxen one to the other for treading on sheaths of paddy |
| பிணையாளி | பணயக்கைதி | hostage |
| பித்தநீர் | கல்லீரலில் சுரந்து பித்தப்பையில் சேகரிக்கப்பட்டுக் கொழுப்புப் பொருளைச் செரிக்க உதவும் திரவம் | bile |
| பித்தப்பை | பித்த நீர் சேர்வதற்காகக் கல்லீரலோடு இணைந்து அமைந்திருக்கும் பை போன்ற உறுப்பு | gall bladder |
| பித்தம் | உடலில் ஏற்படுகிற வேதியியல் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கும் சுரப்பு | bile which is said to be the cause of chemical reactions in the body |
| பித்தலாட்டம் | உண்மையை மறைக்கும் அல்லது திரிக்கும் செயல் | deception |
| பித்தவெடிப்பு | (பெரும்பாலும்) குதிகாலின் பின்புறத்தில் அல்லது கால்விரல்களின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் பிளவு | fissures (of the sole and toes) |
| பித்தளை | செம்பும் துத்தநாகமும் கலந்த மஞ்சள் நிற உலோகம் | brass |
| பித்தன் | பைத்தியக்காரன் | madman |
| பித்தான் | (சட்டை, பை முதலியவற்றில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன்) பொருத்துவதற்காகத் தட்டையாகவும் வட்ட வடிவமாகவும் துளையுடன் செய்யப்படும் பொருள் | button |
| பித்து | பைத்தியம் | madness |
| பித்துக்குளி | பைத்தியம் பிடித்தவன் | mad person |
| பிதற்றல் | அர்த்தம் இல்லாத பேச்சு | nonsense |
| பிதற்று | அர்த்தம் இல்லாமல் பேசுதல் | talk nonsense |
| பிதா | தந்தை | father |
| பிதாமகன் | தந்தையின் தந்தை | paternal grandfather |
| பிதிர் | மூதாதையர் | ancestor |
| பிதிரார்ஜிதம் | தந்தை வழி முன்னோரின் சொத்து | ancestral property, esp |
| பிதுங்கு | அழுத்தப்படுவதால் வெளிவருதல் அல்லது வெளியே தள்ளப்படுதல் | get squeezed out |
| பிந்தி | நேரம் கழித்து | late (in time) |
| பிந்திய | அடுத்து வருகிற | later |
| பிந்து | (ஒருவருக்கு அல்லது ஒன்றிற்கு) இணைந்த நிலையில் இல்லாமல் பின்னால் அமைதல் | lag behind |
| பிந்தைய | (காலத்தில்) பிந்திய | later (in time) |
| பிம்பம் | (நீர், கண்ணாடி போன்றவற்றில்) பிரதிபலிக்கும் உருவம்(ஒன்றிலிருந்து வரும் ஒளி, ஆடியை ஊடுருவி) மறுபுறத்தில் ஏற்படுத்தும் வடிவம் | image formed by reflection |
| பிய்1 | (இணைந்திருக்கும் நல்ல நிலையிலிருந்து) பிரிந்து வருதல் | be torn |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.