Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பிய்த்துக்கொண்டு | (பெரும்பாலும் வா, கிளம்பு போன்ற வினைகளுடன்) மிகுந்த வேகத்துடன் | with vehemence |
| பிய்த்துக்கொள் | (தனக்கு விருப்பம் இல்லாத அல்லது தான் விரும்பாத சூழ்நிலையிலிருந்து) விலகிக்கொள்ளுதல் | run away (from s |
| பிர்க்கா | தாலுக்காவைவிடக் குறைந்த அளவில் கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பிரிவு | a division consisting of some villages |
| பிரக்ஞை | சுய உணர்வு | consciousness |
| பிரகடனம் | பலரும் அறியும்படியான அதிகாரபூர்வமான அறிவிப்பு | public announcement |
| பிரகஸ்பதி | (புராணத்தில்) தேவர்களின் குரு | (in purana) priest of the celestial beings (devas) |
| பிரகாசம் | (ஒளியின் அல்லது ஒளியினால் ஏற்படும்) மிகுதியான வெளிச்சம் | brightness |
| பிரகாசி | ஒளிவீசுதல்(ஒளிவீசி) மினுங்குதல் | (of moon, sun, etc.) shine |
| பிரகாரம்1 | (கோவிலில்) கருவறைக்கும் மதில் சுவருக்கும் இடையில் சுற்றி வருவதற்காக அமைக்கப்பட்ட வழி | paved way around the sanctum sanctorum |
| பிரச்சாரகர் | பிரச்சாரம் செய்பவர் | propagandist |
| பிரச்சாரம் | ஆதரவு தேடி அல்லது மனமாற்றம் ஏற்படுத்த ஒரு கருத்தை அல்லது கொள்கையைப் பரப்புதல் | (political) propaganda |
| பிரச்சினை | இயல்பான போக்குக்குத் தடை ஏற்படுத்துவதாகவும் தீர்வு வேண்டி நிற்பதாகவும் இருப்பது | problem |
| பிரசங்கம் | (பெரும்பாலும் சமய அல்லது அரசியல் தொடர்பான) சொற்பொழிவு | discourse (mostly on religion or politics) |
| பிரசங்கி | பிரசங்கம் செய்தல் | preach |
| பிரசங்கியார் | (கிறித்தவ மதத்தைப் பரப்பும் வகையில்) பிரசங்கம் செய்பவர் | preacher of Christian religion |
| பிரசவம் | குழந்தையைப் பெற்றெடுக்கும் நிகழ்வு | confinement |
| பிரசவம்பார் | குழந்தை பெற்றெடுப்பதற்கு உதவுதல் | attend or assist in childbirth |
| பிரசவமாகு | குழந்தையைப் பெற்றெடுத்தல் | give birth to a child |
| பிரசவ விடுதி | தாய்சேய் நல விடுதி | maternity hospital |
| பிரசவி | (குழந்தை) பெறுதல் | give birth (to a child) |
| பிரசன்னம் | (புலன்களால் உணரக் கூடிய) இருப்பு(ஓர் இடத்தில்) காட்சி அளிக்கும் தோற்றம் | presence |
| பிரசாதம் | (கோயிலில், வீட்டில்) கடவுளின் முன்வைத்துப் பூஜை செய்து தரப்படும் பொருள் | sacred offering to deity (distributed to devotees) |
| பிரசித்தம் | எல்லோருக்கும் தெரிந்தது | well-known |
| பிரசித்தி | பெயரும் புகழும் | fame |
| பிரசுரம் | (புத்தக) வெளியீடு | publication |
| பிரசுராலயம் | (புத்தக) வெளியீட்டு நிறுவனம் | publishing house |
| பிரசுரி | (பத்திரிகை போன்றவற்றில் கட்டுரை, கதை முதலியவற்றை) வெளியிடுதல்(புத்தகம் போன்றவை) வெளியிடுதல்பதிப்பித்தல் | publish (an article, a book, etc.) |
| பிரண்டை | (சித்த வைத்தியத்தில் பயன்படும்) தடித்த சிறு கிளைகளையும் கணுக்களுடன் கூடிய செவ்வக வடிவத் தண்டையும் உடைய ஒரு வகைக் கொடி | square-stalked vine |
| பிரத்தியட்சம் | கண்ணுக்குத் தெரிவது | that which is seen by the eyes |
| பிரத்தியேகம் | (-ஆக, -ஆன) பொதுவானதிலிருந்து அல்லது வழக்கமானதிலிருந்து வேறுபட்டது | special |
| பிரதட்சிணம் | (வழிபடும் முறையாக) இடமிருந்து வலமாகச் சுற்றி வருதல் | going round from left to right (as a mode of worship) |
| பிரதம | (நிர்வாக அமைப்பில்) தலைமைப் பொறுப்பில் இருக்கிற | chief (in rank) |
| பிரதம மந்திரி/பிரதமர் | ஒரு நாட்டை நிர்வகிக்கும் அமைச்சரவையில் முதன்மைப் பொறுப்பு வகிப்பவர் | prime Minister |
| பிரதமை | அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்கு அடுத்த நாள் | first day after new moon and also after full moon |
| பிரதாபம் | (வீரத்தைக் காட்டி நிகழ்த்திய) பெரும் சாதனை | (heroic) deeds |
| பிரதானம் | (-ஆக, -ஆன) முதன்மை | that which is important |
| பிரதி1 | (புத்தகம், பத்திரிகை, இசைத்தட்டு முதலியவை குறித்து வருகையில்) குறிப்பிட்ட ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டு ஒரே மாதிரியாக வெளியிடப்படும் பலவற்றுள் ஒன்று | copy (of a book, music record, etc.) |
| பிரதி2 | பதில் | return (in gratitude for help received) |
| பிரதி3 | (கிழமை, மாதம், வருடம் முதலியவற்றுடன் வருகையில்) (குறிப்பிடப்படும்) ஒவ்வொரு | (of day, month, year) every |
| பிரதிக்ஞை | செய்துகொண்ட ஒப்பந்தம் | resolve |
| பிரதிகூலம் | தீமை | disadvantage |
| பிரதிநிதி | (அரசின், ஒரு குழுவின், தனிப்பட்ட நபரின்) சார்பாகச் செயல்பட அல்லது கருத்தைத் தெரிவிக்க நியமிக்கப்பட்டவர் அல்லது தேர்வு செய்யப்பட்டவர் | one who represents (a government, etc or a person) |
| பிரதிநிதித்துவம் | (ஓர் அவையில் தங்கள் கருத்து, கோரிக்கை போன்றவற்றை) பிரதிநிதிமூலமாக முன்வைக்கும் உரிமை | representation |
| பிரதிபலன் | ஒரு செயலைச் செய்வதன் விளைவாகக் கிடைக்கும் பலன் | benefit in return (for help rendered) |
| பிரதிபலி | (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் படும் ஒளி அல்லது உருவம்) திரும்பி வருதல் அல்லது தோன்றுதல்/(ஒளியை அல்லது உருவத்தை) திரும்ப வெளியிடுதல் அல்லது வெளிக்காட்டுதல் | (of light, image) reflect/reflect (light, image, etc.) |
| பிரதிபலிப்பு | (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் பட்டு) திரும்பிவரும் ஒளி | reflection (of light, image) |
| பிரதிபிம்பம் | (கண்ணாடி முதலியவற்றில்) பிரதிபலிக்கும் உருவம் | reflected image |
| பிரதிமை | உருவச் சிலை | image |
| பிரதியுபகாரம் | கைமாறு | what is done in return (for help received, etc.) |
| பிரதிவாதம் | ஒரு வாதத்துக்கு மாறாக அல்லது எதிராக அமையும் வாதம் | counter argument |
| பிரதிவாதி | (உரிமையியல் வழக்கில்) வாதியால் வழக்குத் தொடுக்கப்பட்டவர் | defendant |
| பிரதிஷ்டை | ஆகம முறைப்படியும் கோயில் கட்டடக் கலை அடிப்படையிலும் சடங்குகள் நிகழ்த்தித் தெய்வத்தை நிரந்தரமாகக் கோயிலில் தங்கவைத்தல் | installation of the deity in a temple by performing the rites prescribed in the ஆகமம் |
| பிரதேசம் | (பொதுவாக) நிலப்பகுதி(தட்பவெப்பநிலை, புவியியல் அமைப்பு முதலியவற்றின் அடிப்படையில்) பிரிக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதி | region |
| பிரபஞ்சம் | (நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் முதலிய அனைத்தையும் உள்ளடக்கி) எல்லை காண முடியாத வகையில் பரந்து விரிந்திருக்கும் பெருவெளி | universe |
| பிரபந்தம் | உள்ளடக்கத்தின் அடிப்படையிலும் செய்யுள் வடிவ அடிப்படையிலும் பாகுபடுத்தப்பட்ட இலக்கிய வகை | minor literary genre |
| பிரபலம் | (-ஆக, -ஆன) புகழ் பெற்ற நிலை | renown |
| பிரம்பு | (கூடை, நாற்காலி முதலியவை பின்னப் பயன்படும்) நீர்நிலைகளின் ஓரங்களில் வளரும் எளிதில் வளையும் தன்மை படைத்த ஒரு வகைக் கொடியின் உறுதியான தண்டு | rattan |
| பிரமகத்தி | விடாது தொடரும் கொலைப் பாவம் | the sin of a murder which hounds one |
| பிரம(ச்)சரியம் | திருமணம் செய்துகொள்வது இல்லை என்று உறுதிபூண்ட நிலை | absolute celibacy |
| பிரம(ச்)சாரி | திருமணம் செய்துகொள்ளாதவன் | unmarried man |
| பிரமப்பிரயத்தனம் | (ஒரு செயலை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்கிற முறையில் மேற்கொள்ளும்) கடும் முயற்சி | untiring effort |
| பிரமரகசியம் | பரம ரகசியம் | closely guarded secret |
| பிரமவித்தை | (அறிந்துகொள்வதற்கு அல்லது அறிந்துகொண்டு செய்வதற்கு) மிகவும் கடினமானது | unattainable expertise |
| பிரமன்/பிரமா | (இந்து மதத்தில்) படைத்தல் தொழிலுக்கு உரிய இறைவன் | (in Hinduism) Brahma, the Creator |
| பிரமாண்டம் | (அளவு குறித்து வருகையில்) (பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில்) மிகப் பெரியது அல்லது விரிவானது | that which is huge or gigantic |
| பிரமாணம் | உண்மை என்று நிறுவ ஆதாரம் | evidence |
| பிரமாண வாக்குமூலம் | தான் கூறுவது உண்மைதான் என்று பிரமாணம் செய்து எழுத்து வடிவில் ஒருவர் நீதிமன்றத்தில் அளிக்கும் பத்திரம் | affidavit |
| பிரமாதப்படுத்து | பெரிதுபடுத்துதல் | blow |
| பிரமி | வியப்பு நிலைக்கு உள்ளாதல் | be astonished or amazed |
| பிரமிப்பு | (-ஆன) வியப்புற்ற நிலை | astonishment |
| பிரமுகர் | பலராலும் அறியப்பட்டு மதிக்கப்படுபவர் | eminent person |
| பிரமை | இல்லாதது இருப்பது போலவும் நிகழாதது நிகழ்வது போலவும் புலன் உணரும் மயக்க உணர்வு | (optical) illusion |
| பிரமைபிடி | தான் செய்யும் காரியங்களில் நினைவு இல்லாமல் அல்லது ஆர்வம் இல்லாமல் வெறித்த பார்வையுடன் இருத்தல் | be listless |
| பிரமோற்சவம் | (கோயிலில்) ஆண்டுக்கு ஒரு முறை (ஏழு நாட்களுக்கு அல்லது அதற்கும் மேற்பட்டு) நடக்கும் திருவிழா | annual festival (in a temple that lasts for seven or more days) |
| பிரயத்தனம் | (ஒன்றைச் செய்வதற்காக) சிரமப்பட்டு மேற்கொள்ளும் முயற்சி | effort |
| பிரயாசம்/பிரயாசை | (முயற்சிக்கு வேண்டிய) உழைப்பு | exertion |
| பிரயாணம் | பயணம் | travel |
| பிரயாணி | பயணி | traveller |
| பிரயோகம் | பயன்படுத்துதல் | use |
| பிரயோகி | பிரயோகம்செய்தல் | use |
| பிரலாபி | குறை கூறிப் புலம்புதல் | complain |
| பிரவகி | பெருக்கெடுத்தல் | be in spate |
| பிரவாகம் | நீர்ப்பெருக்கு | flood |
| பிரவேசம் | (கட்டடம் போன்றவற்றுள் அல்லது ஒரு துறையில்) நுழையும் செயல் | entry |
| பிரவேசி | (உள்ளே) வருதல் | enter |
| பிரளயம் | (உலகத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்ற) பெரும் அழிவு | deluge |
| பிரஜை | குடிமகன் | citizen |
| பிரஸ்தாபம் | (ஒரு செய்தி, நிகழ்ச்சி முதலியவற்றை ஒருவரிடம்) குறிப்பிடுவது அல்லது சொல்வது | reference |
| பிரஸ்தாபி | குறிப்பிட்டுக் கூறுதல் அல்லது சொல்லுதல் | make a mention of or reference to |
| பிராகிருதம் | சமஸ்கிருத மொழியுடன் தொடர்புகொண்டதும், மக்களின் பேச்சு வழக்கில் இருந்ததுமான வட இந்திய மொழி | the Prakrit, a provincial or vernacular dialect akin to Sanskrit language |
| பிராட்டி | தேவி | goddess |
| பிராணவாயு | உயிரினங்கள் உயிர்வாழத் தேவையானதும் காற்றில் கலந்திருப்பதும் நிறம், மணம், சுவை அற்றதுமான வாயு | oxygen |
| பிராணன் | உயிர் | life |
| பிராணாயாமம் | (குறிப்பிட்ட முறையில்) மூச்சை இழுத்து அடக்கி வெளிவிடும் யோக முறை | breathing exercise in yoga |
| பிராணி | இடம் விட்டு இடம் செல்லக் கூடியதும் புலனுணர்வுகளைப் பெற்றிருப்பதுமான உயிரினம் | animal |
| பிராது | புகார் | complaint |
| பிராந்தியம் | (நாட்டின்) வரையறுக்கப்பட்ட நிலப் பகுதி | region |
| பிராப்தம்/பிராப்தி | அதிர்ஷ்டம் | luck |
| பிராமி | இன்றைய இந்திய மொழிகள் பலவற்றின் வரிவடிவங்களுக்கு மூலமாக அமைந்த (இந்தியாவின் வடமேற்குப் பகுதியைத் தவிர்த்த ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட) தொன்மையான வரிவடிவம் | the ancient script Brahmi from which scripts for Indian languages evolved |
| பிராயம் | வயது | age |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.