Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| முந்தானை | (புடவையில்) மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி | free end (of a saree) |
| முந்தி2 | (காலத்தில்) முன்பு | (of time) earlier |
| முந்திய | (காலத்தில்) முற்பட்ட | previous |
| முந்திரிக் கொட்டை | முந்திரிப் பழத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து வெளியே நீண்டு அமைந்திருக்கும் கொட்டை | cashew nut which protrudes from the fleshy part of the stalk |
| முந்திரிப் பருப்பு | முந்திரிக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் பருப்பு | cashew kernel |
| முப்பட்டகம் | கண்ணாடி போன்றவற்றால் முக்கோண வடிவில் செய்யப்பட்டதும் தன்னுள் பாயும் ஒளியை நிறமாலையாகப் பிரிக்கக் கூடிய தன்மை உடையதுமான பொருள் | prism |
| முப்படை | (ஒரு நாட்டின்) தரைப்படை, கப்பல்படை, விமானப்படை ஆகிய மூன்று படை | the armed forces (comprising of army, navy and air force) |
| முப்பது | பத்தின் மூன்று மடங்கைக் குறிக்கும் எண் | (the number) thirty |
| முப்புரிநூல் | பூணூல் | thread with three strands (worn by men of certain castes) |
| மும்முரம் | (செயல் செய்தல், செயல் நடைபெறுதல் முதலியவற்றில்) வேகம், கவனம் ஆகியவற்றுடன் கூடிய தீவிரம் | excitement |
| மும்முறை குதித்துத்தாண்டுதல் | ஓடி வந்து காலால் உந்தி மூன்று முறை தாண்டிக் குதித்து முடிக்கும் ஒரு விளையாட்டுப் போட்டி | triple jump |
| முயங்கு | புணர்தல் | copulate |
| முயல்1 | விடாமல் ஊக்கத்தோடு செய்தல் | try hard |
| முயல்2 | நீண்ட காதுகளையுடையதும் வேகமாக ஓடக் கூடியதும் கிழங்கு முதலியவற்றை உண்டு வாழ்வதுமான சிறு விலங்கு | hare |
| முயற்சி1 | முயலுதல் | try hard |
| முயற்சி2 | (ஒன்றிற்காக மேற்கொள்ளும்) உழைப்பும் செயல்பாடும் | effort |
| முரசு1 | (முற்காலத்தில் அரசர் ஆணையை மக்களுக்கு அறிவிக்கப் பயன்படுத்திய) அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் ஒரு தோல் கருவி | a kind of drum (formerly used for royal proclamations, etc.) |
| முரசு2 | பல் ஈறு | gum |
| முரடன் | மென்மையும் நளினமும் இல்லாமல் கடுமையாக நடந்துகொள்பவன் | one who is rough and tough |
| முரண் | (ஒன்றிற்கு) எதிரானதாகவோ மாறுபட்டதாகவோ அமைவது | contradiction |
| முரண்டு1 | முரண்டுசெய்தல் | give stiff resistance |
| முரண்டு2 | (பெரும்பாலும் பிறர் கூறும் அல்லது எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்ய) எதிர்ப்புக்காட்டுவது | stubbornness |
| முரண்படு | எதிராக இருத்தல் | contradict |
| முரண்பாடு | முரண் | contradiction |
| முருகன் | கையில் வேலுடனும் மயில் வாகனத்துடனும் இளமைத் தோற்றத்துடனும் இருக்கும் கடவுள் | a God youthful in appearance who holds a spear in his hand and has a peacock as his mount |
| முருகியல் | அழகியல் | aesthetics |
| முருங்கை | உணவில் பயன்படுத்தும் இலைகளையும் காய்களையும் உடைய, எளிதில் ஒடியக் கூடிய ஒரு மரம் | horse-radish tree |
| முருங்கைக்காய் | குச்சி போன்று நீண்டதும் உட்பகுதியில் சதைப்பற்றுள்ளதுமான, முருங்கை மரத்தின் காய் | fruit of the horse-radish tree which looks like a small stick |
| முல்லா | தொழுகையை முன்னின்று நடத்துபவர் | one who leads and conducts the prayer in a mosque |
| முல்லை | பச்சை நிறக் காம்பில் சிறிய வெண்ணிற இதழ்களைக் கொண்ட வாசனை மிகுந்த பூ | a kind of jasmine |
| முலாம்பழம் | சந்தன நிறத் தோலையும் நீர்ச் சத்து மிகுந்த சதைப் பகுதியையும் உடைய, அளவில் சிறிய பூசணி போன்ற பழம் | musk-melon |
| முழக்கம் | (இடி முதலியவை எழுப்பும் அல்லது பல ஒலிகள் ஒருசேர ஒலிப்பதால் எழும்) பேரொலி | rumble |
| முழக்கு | பேரொலி எழுப்புதல் | roar |
| முழங்கால் | தொடைக்குக் கீழே காலை மடக்கி நீட்டக் கூடிய மூட்டு அமைந்திருக்கும் பகுதி/(சில வட்டாரங்களில்) மேற்குறிப்பிட்ட மூட்டிலிருந்து கணுக்கால்வரையில் உள்ள பகுதி | knee/part of the leg from knee to ankle |
| முழங்காலிடு | மண்டியிடுதல் | kneel down |
| முழங்கு | (இடி, பீரங்கி போன்றவை அல்லது வாத்தியங்கள்) பேரொலி எழுப்புதல் | (of thunder, cannon, etc.) roar |
| முழங்கை | கையை மடக்கி நீட்டுவதற்கு உரிய மூட்டு அமைந்திருக்கும் பகுதி/மேற்குறிப்பிட்ட மூட்டிலிருந்து கீழே மணிக்கட்டுவரை உள்ள பகுதி | elbow/forearm |
| முழம் | நீட்டிய நிலையில் நடுவிரலின் நுனியிலிருந்து முழங்கைவரையிலான அளவு | the length from the elbow to the tip of the middle finger |
| முழம்போடு | முழத்தில் அளத்தல் | measure |
| முழவு | முரசு | drum |
| முழு | பிரிக்கப்படாத, குறைக்கப்படாத நிலையில் உள்ள | whole |
| முழுக்க | முழுவதும் | whole of |
| முழுக்கமுழுக்க | (வேறு யாரையும் எதையும் சார்ந்திருக்காமல்) முழு அளவில் | entirely |
| முழுக்காட்டு | குளிக்கச்செய்தல் | bathe |
| முழுக்கு | நீரில் தலை அமிழக் குளித்தல் | bathing in a river, etc immersing oneself |
| முழுகாமல் இரு | கருத்தரித்தல் | be pregnant |
| முழுகு | நீர்ப்பரப்பின் உட்செல்லுதல் | go in |
| முழுது | முழுமை | entirety |
| முழுநீள | (கதை, திரைப்படம் முதலியவை குறித்து வருகையில்) வழக்கமாக எதிர்பார்க்கப்படும் நீளத்திலும் குறிப்பிடப்படும் தன்மையிலும் உள்ள | (of story, film, etc.) full length |
| முழுநேர | ஒரு நாளில் ஒரு பணிக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் கால அளவிற்குக் குறையாத | (of a job) full time |
| முழுமனத்தோடு | தயக்கமோ அதிருப்தியோ இல்லாமல் முழு விருப்பத்தோடு | wholeheartedly |
| முழுமனதாக/முழுமனதான | முழுமனத்தோடு | wholeheartedly/wholehearted |
| முழுமுதல் | இறைவன் | god (the sole cause) |
| முழுமை | குறைகளோ தடங்கலோ இல்லாத இயல்பான இறுதி | completion |
| முழுவதற்கும் | மொத்த அளவிற்கும் | to the whole or entire |
| முழுவதும் | (இடத்தின்) எல்லாப் பகுதியிலும்(காலத்தின்) விட்டுப்போகாத மொத்த அளவிலும் | (of place) entire |
| முழுவீச்சில் | (ஒரு செயல்) வேகமாகவும் தீவிரமாகவும் | in full swing |
| முள் | (தாவரத்தின் தண்டு, இலை, கிளை முதலிய பகுதியில்) மெல்லியதாகக் கூரிய முனையுடன் சற்று நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி | thorn |
| முள் கரண்டி | (உணவுப்பொருளைக் குத்தி எடுத்துச் சாப்பிடுவதற்குப் பயன்படக் கூடிய வகையில்) முன் பகுதியில் கூரிய முனைகளை உடைய சாதனம் | fork |
| முள்வாங்கி | (கால் முதலியவற்றில் தைத்த முள்ளை) பிடித்து இழுப்பதற்கான இரு கூரிய முனைகளை உடைய கருவி | thorn pincers |
| முள்வேலி | முள் நிறைந்த கிளைகளால் ஏற்படுத்திய தடுப்பு | fence made of thorny branches of trees |
| முள்ளங்கி | (சமையலில் பயன்படுத்தும்) வெள்ளை நிறத்தில் அல்லது வெளிர்ச் சிவப்பு நிறத்தில் கூம்பு போன்ற வடிவத்தில் உள்ள ஒரு காய் | a kind of radish |
| முள்ளந்தண்டு | முதுகெலும்பு | backbone |
| முள்ளம்பன்றி | (தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்றவாறு) உடலின் மேல்பகுதி முழுதும் முள் போன்ற கூர்மையான மயிர்கள் நிறைந்ததும் குட்டையான கால்களை உடையதுமான ஒரு சிறிய காட்டுவிலங்கு | porcupine |
| முள்ளெலும்பு | (முதுகுத்தண்டு ஊடாகச் செல்லும்) நடுவில் துளை உடையதும் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி அமைந்திருப்பதுமான வளைய வடிவிலான எலும்பு | vertebra |
| முளை1 | (தாவரம்) புதிதாகக் கிளம்பி வெளி வருதல்(தாவரத்தில்) இலைகள் தோன்றுதல் | (of plants) grow |
| முளை2 | புதிதாகக் கிளம்பி மேலே வரும் தாவரப் பகுதி | (tender) shoot |
| முளை3 | கூர்மையான நுனி உடைய சிறிய மரத் துண்டு | peg stump |
| முளைக்கீரை | இளம் சிவப்பு நிறக் காம்புடைய சிறுசிறு இலைகளைக் கொண்ட கீரை வகை | a kind of greens |
| முளைகட்டு | (ஊறவைத்த விதையை நீரில்லாமல் மூடிவைத்து) முளைவரும்படி செய்தல் | process pulses by making them sprout |
| முளைப்பாரி/முளைப்பாலிகை | (திருமணம் போன்ற சடங்குகளில் வைக்கப்படும்) முளைவிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மட்பாண்டம் | pot in which nine kinds of sprouted seeds are kept (used in wedding rituals) |
| முளைப்பு | விதைகள் முளைக்கும் செயல் | (of plants, seeds) germination |
| முளைவிடு | (விதை போன்றவற்றிலிருந்து) முளை கிளம்புதல் | germinate |
| முற்பகல் | நண்பகலுக்கு முன் உள்ள காலம் | forenoon |
| முற்பட்ட | (காலத்தில்) முந்திய | prior (in time) |
| முற்பட்ட வகுப்பு | கல்விக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் அரசின் விசேஷக் கவனம் தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்ட இனம் | the communities not included in the list of backward communities, scheduled castes and tribes |
| முற்படு | (ஒரு செயலைச் செய்ய) முயலுதல் அல்லது தொடங்குதல் | attempt or begin |
| முற்பிறப்பு/முற்பிறவி | (இந்து மத நம்பிக்கையின்படி) தற்போதைய பிறவிக்கு முந்தைய பிறவி | previous birth |
| முற்போக்கு | முன்னேற்றத்திற்குத் தேவையான மாற்றங்களை ஏற்கத் தயங்காத போக்கு | being progressive |
| முற்றம் | (வீட்டின் முன்பகுதியில் வாசலை ஒட்டிய) திறந்த வெளிப்பகுதி | open courtyard (inside the house) |
| முற்றல் | (காய்கறியைக் குறிப்பிடும்போது) அதிகமாக முற்றியது | (of vegetables) overripe |
| முற்றாக | முற்றிலும் | entirely |
| முற்றிலும் | முழுவதும் | entirely |
| முற்றுப்புள்ளி | பொருள் நிறைவான வாக்கியத்தின் இறுதியில் இடப்படும் புள்ளி | (in punctuation) full stop |
| முற்றுப்பெறு | முடிவடைதல் | be completed |
| முற்றும்1 | எல்லாம் | all |
| முற்றும்2 | முற்றிலும் | entirely |
| முற்றுவினை | வினைமுற்று | finite verb |
| முறம் | (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம் | wide-mouthed winnowing pan |
| முறி1 | (மரம், குச்சி, எலும்பு முதலியவை) ஒடிதல் | break |
| முறி2 | தன்மை மாறுதல் | change |
| முறி4 | தன்மையை மாற்றுதல் | act as an antidote |
| முறியடி | (சதி, திட்டம் முதலியவற்றை) தோல்வியடையச் செய்தல் | outmanoeuvre |
| முறிவு | (எலும்பு) உடைதல் | (bone) fracture |
| முறுக்கு1 | (துணி முதலியவற்றை) சுருளும்படி திருப்புதல் | wring (clothes) |
| முறுக்கு2 | முறுக்கப்பட்ட நிலை | twisted state |
| முறுக்கு3 | மாவைப் பிசைந்து நெளிவு வரும்படி கையால் சுற்றிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம் | a kind of snack prepared from rice dough twisted by hand to form a ring and fried in oil |
| முறுக்கு நூல் | இரு இழைகளைச் சேர்த்து முறுக்கி உண்டாக்கிய நூல் | twisted yarn |
| முறுகல் | (தோசை போன்ற சில உணவுப் பொருள்கள்) சூட்டால் அடையும் நீர்த்தன்மை அற்ற மொரமொரப்பு | the condition of being roasted crisp |
| முறுகு | (பாகு சூட்டால்) நீர்த்தன்மை குறைந்து இறுகுதல் | (of treacle, etc.) become thick (when over heated) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.