Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| முச்சந்தி | மூன்று சாலைகள் கூடும் இடம் | junction of three streets |
| முசுக்கட்டை1 | கம்பளிப்பூச்சி | hairy caterpillar |
| முசுக்கட்டை2 | ரம்பத்தின் பற்களைப் போன்ற இலைகளையும் கம்பளிப்பூச்சி போன்ற பழங்களையும் உடைய ஒரு வகைக் குத்துச்செடி | mulberry |
| முசுடு1 | சிடுமூஞ்சி | irritable person |
| முசுடு2 | (மரங்களில் அதிகமாக இருக்கும்) பழுப்பு நிறப் பெரிய எறும்பு | a kind of big brown ant |
| முசுப்பாத்தி | வேடிக்கை | amusement |
| முட்ட | நிறைந்து காணும்படி | filling up the entire space |
| முட்டாள் | (பெரும்பாலும் வசைச் சொல்லாக) அறிவைப் பயன்படுத்தத் தெரியாததால் பிறரால் குறைவாக மதிப்பிடப்படும் நபர் | fool |
| முட்டி2 | (பெரும்பாலும் கள் இறக்குவதற்குப் பயன்படுத்தும்) கலயம் | an earthen pot with a narrow mouth (used mostly for collecting toddy from palm trees) |
| முட்டிக்கால் | முழங்கால் | knee |
| முட்டிக்கொள் | (ஒருவர் செய்ய இருக்கும் செயலால் நல்ல பயன் கிடைக்காது என்பது தெரியும்போது அதைக் கைவிட) வற்புறுத்திச் சொல்லுதல் | make strong and repeated (but futile) pleas |
| முட்டிபோடு | (தண்டனையாக) மண்டிபோடுதல் | kneel down (as punishment) |
| முட்டிமோது | அலைமோதுதல் | surge up |
| முட்டு2 | (ஒன்று விழாமல்) தாங்கும் அல்லது (நகராமல்) தடுக்கும் கட்டை முதலியவை | prop |
| முட்டுக்கட்டை | முட்டாகக் கொடுக்கும் கட்டை | post used as a prop |
| முட்டுச்சந்து | மேற்கொண்டு செல்ல முடியாமல் முடிந்துவிடுகிற சந்து | blind alley |
| முட்டுப்பாடு | தடை | trouble |
| முட்டை1 | (பறவைகளில், ஊர்வனவற்றில் பெண்ணினம் இடும்) குஞ்சு வளர்வதற்கான கருவைக் கொண்ட நீள் கோள அல்லது உருண்டை வடிவப் பொருள்/(குறிப்பாக உண்பதற்குப் பயன்படுத்தும்) கோழி முட்டை | egg/(esp |
| முட்டை2 | வறட்டி | dried cow dung (used as fuel) |
| முட்டைக்கோஸ் | வெளிர்ப் பச்சை நிற இலைகளை அடுக்கடுக்காகக் கொண்ட உருண்டையான ஒரு காய்கறி | cabbage |
| முடக்கம் | தடை ஏற்பட்ட அல்லது தடுக்கப்பட்ட நிலை | stoppage |
| முடக்குவாதம் | பக்கவாதம் | paralysis |
| முடங்கு | (செயல்பாடு தொடராதபடி) தடைப்படுதல் | be hindered |
| முடம் | கை அல்லது கால் செயல்பட முடியாத நிலை | crippled condition of leg or arm |
| முடவன் | காலில் குறைபாடு உள்ளவன் | lame (person) |
| முடி6 | உடம்பில் (குறிப்பாகத் தலையில்) வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய இழை | hair |
| முடி7 | முடிச்சு | knot |
| முடிச்சு1 | அவிழவோ பிரிந்துவரவோ முடியாதபடி ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து அல்லது ஒன்றைச் சுற்றிப் போடப்பட்டிருப்பது | knot |
| -முடிச்சு2 | மூட்டை என்பதோடு இணைந்து வரும் சொல் | a word which occurs in combination with மூட்டை |
| முடிசூட்டுவிழா | (அரசப் பரம்பரையில் வந்த ஒருவர்) ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு அடையாளமாக அவருக்கு கிரீடம் சூட்டும் நிகழ்ச்சி | coronation |
| முடிசூடு | (முடி தரித்து) அரசாட்சியை ஏற்றல் | crown |
| முடிதிருத்தகம் | முடியைக் குறைத்து அல்லது திருத்தி அழகுபடுத்தும் கடை | hairdressing salon |
| முடிப்பு | (பணம், நகை முதலியவற்றைத் தொகுத்து) துணி போன்றவற்றில் கட்டி வைத்திருப்பது | (money, pieces of jewellery) wrapped (in a cloth) or tied up |
| முடியரசு/முடியாட்சி | அரசரால் அல்லது அரசியால் நடத்தப்படும் ஆட்சி | monarchy |
| முடிவு | தொடங்கியதற்கு இறுதி | end |
| முடிவுசெய் | முடிவுகட்டுதல் | decide |
| முடிவுரை | முடித்துவைக்கும் முறையில் பேசும் பேச்சு அல்லது எழுதும் எழுத்து | concluding speech or remark |
| முடிவெட்டு | தலைமுடியைக் கத்தரித்துச் சீர்செய்தல் | have or do a haircut |
| முடுக்கிவிடு | (மேலும்) தீவிரமாக அல்லது வேகமாகச் செயல்படும்படி இயக்குதல் | gear up |
| முடுக்கு1 | (பொம்மை, இயந்திரம் முதலியவற்றில் இயக்குவதற்காக) திருகுதல் | set in motion |
| முடுக்கு2 | அகலக் குறைவான வழி | narrow path |
| முடை1 | (பாய், கூடை முதலியவை) பின்னுதல் | plait (a basket) |
| முடை2 | நெருக்கடி | (financial) straits |
| முடைநாற்றம் | (கெட்டுப்போன இறைச்சி, புளித்த மோர் முதலியவற்றிலிருந்து வருவது போன்ற) ஒரு வகை துர்நாற்றம் | foul smell (of meat, sour milk, etc.) |
| முடையிருப்பு | (எதிர்காலத்தில் நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்கான) தானியச் சேமிப்பு | reserve (of food grains) |
| முண்டா | தோள்பட்டைக்குக் கீழாகவும் முழங்கைக்கு மேலாகவும் அமைந்துள்ள திரண்ட சதையுடன் கூடிய பகுதி | upper arm |
| முண்டாசு | (பாரத்தைச் சுமக்க, வெயிலுக்குப் பாதுகாப்பாக) தலையைச் சுற்றிக் கட்டப்பட்ட துணி | a headgear of cloth |
| முண்டா பனியன் | முண்டா தெரியும்படியான பனியன் | sleeveless vest |
| முண்டியடி | (கூட்டத்தில் முன்னேற ஒருவரையொருவர்) நெருக்கித் தள்ளுதல் | jostle against |
| முண்டு1 | சண்டை செய்யும் முனைப்போடு இருத்தல் | be aggressive |
| முண்டு2 | முடிச்சுப் போன்றது | knotted part |
| முண்டுகொடு | முட்டுக்கொடுத்தல் | give a support or prop |
| முணுக்கென்றால் | சின்ன விஷயத்தில் சிறிது கடுமையை வெளிப்படுத்தினாலும் | at the slightest provocation |
| முணுமுணுப்பு | (வெறுப்பு, அதிருப்தி முதலியவற்றை வெளிப்படுத்தும் வகையில்) முணுமுணுத்தல் | grumbling |
| முத்தடுப்பு ஊசி | தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், தசைவிறைப்பு ஜன்னி ஆகிய மூன்று நோய்களுக்குமான தடுப்பு மருந்து | triple antigen |
| முத்தம் | (அன்பு, காதல் முதலியவற்றின் வெளிப்பாடாக மற்றொருவர் கன்னம், உதடு முதலிய பகுதிகளில்) உதட்டைப் பதித்தல் | kiss |
| முத்தமிழ் | இயல், இசை, நாடகம் என்னும் மூவகையான (இலக்கியங்களுடைய) தமிழ் | the three kinds of (Tamil) literature, viz |
| முத்தாய்ப்பு | தொடர்ந்து நிகழ்ந்தவற்றின் சிறப்பான, கச்சிதமான முடிவு | effective or precise end |
| முத்தி | உலகோடு ஆன்மாவுக்கு உள்ள தொடர்பு அவசியமற்றது என்பதை உணரும் நிலை | self-realization |
| முத்திரைத்தாள் | (உயில் முதலியவற்றை அதிகாரபூர்வமாக எழுதப் பயன்படும்) குறிப்பிட்ட விலை மதிப்பு உடைய அரசாங்க முத்திரை அச்சிடப்பட்ட தாள் | stamp-paper (for writing deeds) |
| முத்து1 | முத்தம் தருதல் | kiss |
| முத்து2 | சிப்பியிலிருந்து எடுக்கப்படும் விலை மதிப்பு உடைய உருண்டை வடிவ வெண்ணிறப் பொருள் | pearl |
| முத்துக்குளி | முத்துச் சிப்பிகளைச் சேகரிக்கக் கடலின் அடிக்குச் செல்லுதல் | dive for pearl oysters |
| முதல்1 | மூலதனம் | capital |
| முதல்2 | (எல்லோருக்கும்) முன்பு/(ஒன்றன் பின் ஒன்றாக அமைந்திருப்பவற்றில் அல்லது அடுத்தடுத்து நிகழ்பவற்றில்) முந்தியதாக இருப்பது | first |
| முதல் தகவல் அறிக்கை | (காவல்நிலையத்தில் முதன்முதலில் பெறப்பட்ட) குற்றச் சம்பவத்தைப்பற்றிய விபரங்கள் அடங்கிய தகவல் அல்லது குறிப்பு | information of an offence first received and recorded by the police (abbreviated to F |
| முதல் நூல் | சிறந்த அறிவுடையவரால் இயற்றப்பட்டு அதன் வழியில் பல நூல்கள் எழுதப்படுவதற்கான அடிப்படை நூல் | a fundamental work of eternal value |
| முதல்வர் | முதலமைச்சர் | chief Minister |
| முதலமைச்சர் | (இந்தியாவில்) மாநிலத்தை அல்லது மத்திய அரசின் நேரடிப் பார்வைக்குக் கீழ்வரும் பகுதியை நிர்வகிக்கும், அமைச்சரவையில் முதன்மைப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் | (In India) Chief Minister (of a state, etc.) |
| முதலாளி | ஆட்களை வேலைக்கு அமர்த்திச் சொந்தத் தொழிலோ வியாபாரமோ செய்பவர் | one who invests in and runs a business, industry, etc |
| முதலாளித்துவம் | நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் உற்பத்திச் சாதனங்கள் பெருமளவில் தனியார் உடைமையாக இருக்கும் அமைப்பு | capitalism |
| முதலிய | (ஒரு தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை) தொடக்கமாக ஏனைய பிற | and the rest |
| முதலிரவு | மணமக்கள் முதன்முதலில் தாம்பத்திய உறவுகொள்ளும் இரவு | the night fixed for consummation of marriage |
| முதலில் | ஆரம்பிப்பதற்கு முன் | at first |
| முதலீடு | (மேலும் பெருக்கும் பொருட்டு) தொழில், வியாபாரம் முதலியவற்றில் பங்காகவும் வங்கி போன்றவற்றில் சேமிப்பாகவும் போடப்படும் பணம் | capital |
| முதலுதவி | காயமுற்றவருக்கு அல்லது திடீரென நோயுற்றவருக்கு மருத்துவரிடம் காட்டும்வரை பயனளிக்கக் கூடியதாக அளிக்கப்படும் உடனடி மருத்துவம் | first aid |
| முதலை | குட்டையான கால்களும் நீண்ட தாடைகளும் கூரிய பற்களும் நீண்ட உடலும் உடைய நீர்வாழ் பிராணி | crocodile |
| முதலைக்கண்ணீர் | (அனுதாபத்திற்கு உரிய ஒரு விஷயத்தில்) மனப்பூர்வமான வருத்தம் இல்லாமல் வருந்துவதாகக் காட்டி வெளிப்படுத்தும் போலிக் கண்ணீர் அல்லது செய்கை | crocodile tears |
| முதற்கண் | முதலில் | at first |
| முதற்கொண்டு | (குறிப்பிடப்படுவது) தொடங்கி வரிசையாக அல்லது தொடர்ச்சியாக | from |
| முதற்பொருள் | கடவுள் | god (the first cause) |
| முதன்முதல்-ஆக/-இல் | (இதற்கு முன் இல்லாமல்) முதல் முறையாக | at first |
| முதன்மை | (-ஆக, -ஆன) முன்னுரிமை பெற்று முதலிடம் வகிப்பது அல்லது குறிப்பிடத்தக்கதாக அமைவது | primary importance |
| முதன்மை வினை | தொடர்நிலையிலும் பொருள்நிலையிலும் தனித்து இயங்கக் கூடியதும் வினையடையையும் துணை வினையையும் ஏற்கக் கூடியதுமான வினைச்சொல் | main verb |
| முதிய | வயதான | aged |
| முதியோர் | வயதில் மூத்தவர் | senior citizen |
| முதிர் | (மரம், காய் முதலியவை) முற்றுதல் | (of trees, fruits, etc.) become ripe or full-grown |
| முதிர்ச்சி | அனுபவ நிறைவு | maturity |
| முதுகலை | (பல்கலைக்கழகத்தில்) இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் படிக்கும் மேல் பட்டப் படிப்பு | master of Arts |
| முதுகில்குத்து | (நயவஞ்சமாக) துரோகம் செய்தல் | stab s |
| முதுகு | (மனித உடலில்) பின்கழுத்திலிருந்து இடுப்புவரை உள்ள பக்கம்(விலங்கின் உடலில்) கழுத்திலிருந்து வால்வரை உள்ள மேல்பகுதி | back (of human beings or animals) |
| முதுகுத்தண்டு | தண்டுவடம் | spinal cord |
| முதுகெலும்பு | (முதுகின் நடுவில் அமைந்திருப்பதும், உடலைத் தாங்கி நிற்பதுமான) ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசையாக முள்ளெலும்புகளால் ஆன நீண்ட உறுதியான எலும்பு | backbone |
| முதுசம் | பாரம்பரியச் சொத்து | inherited property |
| முதுநிலை | (பல நிலைகளைக் கொண்ட பதவி வரிசையில்) உயர்நிலை | senior grade |
| முதுமக்கள் தாழி | (முற்காலத்தில்) இறந்தவரை அடக்கம் செய்யப் பயன்படுத்திய மட்பாண்டம் | (formerly) burial urn |
| முதுமாணி | (கல்லூரிப் பட்டப் படிப்பில்) முதுகலை | postgraduate |
| முதுமை | வயதாகி உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் இழந்த கட்டம் | old age |
| முதுமொழி | பெரியோர் வாக்கு | words of wisdom |
| முந்தாநாள் | நேற்றைக்கு முன் தினம் | day before yesterday |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.