Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
முறுவல் | புன்முறுவல் | smile |
முறுவலி | புன்முறுவல்செய்தல் | smile |
முறை1 | (கோபம், எரிச்சல் முதலியவற்றால்) முகத்தைக் கடுமையாக்கிக்கொள்ளுதல் | glower |
முறை2 | இப்படி, இந்தத் தன்மையில் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு | proper (manner) |
முறைகேடு | சட்டம், விதிமுறை ஆகியவற்றுக்குப் புறம்பான செயல் | act contrary to rules and regulations |
முறைசாரா | பல்கலைக்கழகத்திலும் பள்ளிக்கூடத்திலும் கற்பிக்கும் முறையிலிருந்து வேறுபட்ட | non-formal |
முறைத்து | கடுமையாக | severely |
முறைத்துக்கொள் | பகைத்தல் | make an enemy of |
முறைப்படுத்து | வரிசைப்படுத்துதல் | arrange |
முறைப்பு | கடுமை நிறைந்த பார்வை | stern look |
முறைப் பெண் | தான் திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ள நெருங்கிய உறவுடைய பெண் | a girl on whom a boy has a customary claim to marry |
முறை மாப்பிள்ளை | தான் திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ள நெருங்கிய உறவுடைய ஆண் | a boy on whom a girl has a customary claim to marry |
முறைமை | முறை2 (என்பதன் மூன்றாவது, ஐந்தாவது பொருள் தவிர்த்துப் பிற எல்லாப் பொருள்களிலும்) | see முறை2 (except senses 3 and 5) |
முறையிடு | உரியவர்களிடம் கூறிக் கவனிக்க வேண்டுதல் | appeal (to the authorities) |
முறையீடு | குறை தீர்க்கக் கோரிக்கை | appeal |
முறையே | சொல்லப்பட்டிருக்கும் வரிசையில் தனித்தனியாக | respectively |
முறைவாசல் | பல குடித்தனங்கள் இருக்கிற ஒரு வீட்டில் வாசல் தெளித்துக் கூட்டும் வேலையைக் குறிப்பிட்ட நாளைக்குக் குறிப்பிட்ட குடித்தனக்காரர் செய்ய வேண்டும் என்கிற முறை | the turn (duty) of each resident to keep the common area clean |
முன்1 | (இடத்தைக்குறித்து வருகையில்) முகத்தை நோக்கி இருப்பது | before |
முன்2 | முன்னால் | forward |
முன்3 | முன்னால் | before |
முன்கூட்டியே | முன்பே | in advance |
முன்கோபம் | விரைவாகத் தோன்றும் கோபம் | short temper |
முன்கோபி | விரைவில் கோபப்படக் கூடிய நபர் | person with a short temper |
முன்சீப் | (உரிமையியல்) துணை நீதிமன்றத்தின் நீதிபதி | judge of a subordinate civil court (of the first instance) |
முன்தள்ளு | (ஒரு வரிசையிலிருந்து, ஒழுங்கிலிருந்து) முன் பக்கமாக நீண்டிருத்தல் | stick out/project |
முன்நில் | முதன்மைப் பொறுப்பு வகித்தல் | take the initiative |
முன்நிறுத்து | (ஒருவரை அல்லது ஒன்றை) முதன்மைப்படுத்துதல் | bring to the fore |
முன்பணம் | முன்கூட்டியே உறுதித்தொகையாகப் பெறப்படும் பணம் | (caution) deposit |
முன்பதிவுசெய் | (திரைஅரங்கு, ரயில் முதலியவற்றில்) முன்கூட்டியே இருக்கைகளைப் பதிவுசெய்தல் | reserve (seats, etc in a cinema, train, etc.) |
முன்பின் தெரியாத | பழக்கம் இல்லாத | unfamiliar |
முன்பின் யோசிக்காமல் | விளைவுகளை எண்ணிப்பார்க்காமல் | thoughtlessly |
முன்பு1 | முன்1 | see முன்1 |
முன்பு2 | முற்காலத்தில் | previously |
முன்மாதிரி | நிர்மாணிப்பதற்கு அடிப்படையாக முதலில் எடுத்துக்கொள்ளப்படுவது அல்லது சிறு அளவில் உருவாக்கப்படுவது | model |
முன்யோசனை | விளைவுகுறித்து அல்லது நடக்கப்போவதுகுறித்துத் தயாராக இருப்பதற்கு ஏற்ற வகையில் முன்னரே செய்யும் சிந்தனை | forethought |
முன்வா | (ஒன்றைச் செய்ய) உடன்பட்டு ஆர்வத்துடன் தயாராக இருத்தல் | come forward |
முன்வை | (பிரேரணை, திட்டம் முதலியவற்றை) பரிசீலனைக்காகத் தக்க முறையில் சமர்ப்பித்தல் | propose |
முன்வைப்புத்தொகை | (ஏலம், ஒப்பந்தப்புள்ளி முதலியவற்றுக்காக ஒருவர்) கட்ட வேண்டிய முன்பணம் | earnest money deposit |
முன்னங்கால் | (விலங்கினத்தில்) கழுத்தை ஒட்டி அமைந்திருக்கும் கால் | (of animals) foreleg |
முன்னங்கை | விரல்கள் இருக்கிற கைப் பகுதி | hand |
முன்னணி | (விளையாட்டு, தேர்தல் முதலியவற்றில்) வெற்றி அடையும் வாய்ப்புடன் இருக்கும் நிலை | position ahead (of others) |
முன்னதாக | (குறிப்பிடப்படும் நேரத்திற்கு அல்லது குறிப்பிடப்படுவதற்கு) முன்பு | before |
முன்னது | (வரிசையில், ஒழுங்கில்) முன் இருப்பது அல்லது முதலில் வருவது | the former |
முன்னர் | முன்பு | before |
முன்னறிவிப்பு | முன்கூட்டியே தெரிவிக்கும் நடவடிக்கை | forewarning |
முன்னால்1 | முன்பக்கமாக | forward |
முன்னால்2 | முன்பக்கத்தில் | before |
முன்னாள் | (பொறுப்பு, பதவி முதலியவை குறித்து வருகையில்) கடந்த காலத்தில் இருந்த | former |
முன்னிட்டு | (ஒரு காரணத்தை) முன்வைத்து | advancing or offering (any reason) |
முன்னிலை | (விளையாட்டு, தேர்தல் முதலியவற்றில் வெற்றி பெறுவதற்கு உரிய) முதல் இடம் | leading position (in a race, etc.) |
முன்னிலைப்படுத்து | (தன்னை) முதன்மை நிலையில் வைத்தல் | project (oneself) |
முன்னிலையில் | (நிகழ்ச்சி, கூட்டம் முதலியவை குறித்து வருகையில்) ஒருவர் அல்லது பலர் முன்னின்று பொறுப்பேற்ற நிலையில் | in the presence of |
முன்னுக்கு | (இடத்தில்) முன்பாக | forward |
முன்னுக்குக்கொண்டு வா | (வாழ்க்கையில்) உயர்ந்த நிலைக்கு வரச்செய்தல் | cause to come up |
முன்னுக்குப் பின் முரணாக | முரண்பாடான முறையில் | in a self-contradicting way |
முன்னுக்கு வா | (வாழ்க்கையில்) உயர்ந்த நிலைக்கு வருதல் | come up |
முன்னுரிமை | (பலவற்றுள் சிலவற்றிற்கு) முக்கியம் கருதி அளிக்கும் முதன்மை இடம் | priority |
முன்னுரை | நூலாசிரியரால் நூல்குறித்த கருத்துகள் அடங்கிய அல்லது நூலுக்கு அறிமுகமாக அமையும் கட்டுரை | preface (in a book) |
முன்னெச்சரிக்கை | (அபாயம், கலவரம் முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் அவை) நிகழாமல் தடுக்கும் ஏற்பாடு | precaution |
முன்னே1 | முன்னால் | ago |
முன்னே2 | முன்னால் | before |
முன்னேற்பாடு | ஆயத்தப் பணி | preparatory work |
முன்னேற்றம் | உயர்நிலை | progress |
முன்னேற்று | உயர்நிலையை அடையச்செய்தல் | advance |
முன்னேறு | தடையைக் கடந்து முன் செல்லுதல் | make headway against |
முன்னைய | முந்திய | previous |
முன்னொட்டு | ஒரு சொல்லாகத் தனித்து வராமல் ஒரு சொல்லுக்கு முன்னால் இணைக்கப்படும் இடைச்சொல் | prefix |
முன்னோக்கி/முன்னோக்கிய | முன்பக்கமாக/முன்பக்கமாக இருக்கும் | thrusting forward/forward |
முன்னோட்டம் | பின்னர் முறையாக நடக்கவிருப்பது எப்படியிருக்கும் என்று தெரிவிக்கும் வகையிலான கணிப்பு | trial |
முன்னோடி | இன்றைய விரிவான வளர்ச்சிக்கு அன்று அடிப்படையாக இருந்தது | pioneer |
முன்னோர் | (மனித குலத்தில்) முன் வாழ்ந்தோர்(ஒரு பரம்பரையின்) மூதாதையர் | forefathers |
முனகல் | மெல்லிய குரலில் வெளிப்படுத்தும் ஒலி | groan |
முனிவர் | உலகப் பற்றைத் துறந்து தவம்புரிந்து சக்திகள் பெற்றவர் | ascetic |
முனை1 | (செயலில்) கவனத்துடன் ஈடுபடுதல் | be busy doing |
முனை2 | (முள், ஊசி முதலியவற்றில்) கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம் | tip |
முனை3 | (குறிப்பிடப்படும்) செயல்பாடு நிகழும் ஓர் இடம் | front (as the place of action) |
முனைப்பு | (ஒரு செயல், பணி முதலியவற்றைச் செய்வதில் காட்டும்) தீவிரம் | determination |
முனையம் | (விமான நிலையத்தைக் குறிப்பிடும்போது) ஒரே சமயத்தில் பல விமானங்கள் இறங்கத் தள வசதி கொண்ட நிலையம் | (airport) terminal |
முனைவர் | (குறிப்பிட்ட துறையில்) ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரை அளித்துப் பெறும் உயர்ந்த பட்டம் | doctor of Philosophy |
முஷ்டி | விரல்களை இறுக்கி மூடிய கை | fist |
முஸ்தீபு | ஆயத்தம் | preparation |
முஸ்லிம் | இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று நடப்பவர் | muslim |
மூ2 | மூன்று என்னும் எண்ணின் பெயரடை | the adjectival form of மூன்று |
மூக்கணாங்கயிறு | மாட்டின் மூக்கில் நுழைத்துத் தலையைச் சுற்றிக் கட்டியிருக்கும் கயிறு | rope or string drawn through the bridge of the nose of a bullock (as a bridle) |
மூக்கறு1 | மூக்கறுபடுதல் | get snubbed |
மூக்கறு2 | (ஒரு சூழ்நிலையில் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றை வெளிப்படுத்துவதன் மூலம் ஒருவரை) அவமானப்படுத்துதல் | humiliate |
மூக்கறுபடு | அவமானப்படுதல் | get snubbed |
மூக்கில்விரலைவை | ஆச்சரியப்படுதல் | be pleasantly surprised |
மூக்கில்வேர் | ஒருவர் பிறருக்குத் தெரிந்திருக்காது என்று நினைக்கிற விஷயத்தை மற்றொருவர் எப்படியோ தெரிந்திருத்தல் | sense instinctively |
மூக்கு | சுவாசிப்பதற்கும் வாசனையை அறிவதற்கும் பயன்படுகிற உடல் உறுப்பு | nose |
மூக்குக்கண்ணாடி | கண்ணில் அணியும் கண்ணாடி | pair of spectacles |
மூக்குத்தி | (பெண்கள்) மூக்கு நுனியின் பக்கவாட்டுப் பகுதியில் துளையிட்டு அணிந்துகொள்ளும் சிறிய அணி | ornament worn on the nose |
மூக்கும்முழியுமாக | முக அழகோடு | with well-pronounced features |
மூக்கைச்சிந்து | (ஒன்றை நினைத்த மாத்திரத்தில்) கண்ணீர் விடுதல் | shed tears |
மூக்கைத்துளை | (வாசனை, நாற்றம்) பலமாக மூக்கைப் பாதித்தல் | (of fragrance or flavour) excite the sense of smell |
மூங்கில் | உள்ளீடற்ற குழாய் போன்ற தண்டுப் பகுதியில் கணுக்களைக் கொண்டதும் நீண்டு வளர்வதுமான ஒரு வகைத் தாவரம் | bamboo |
மூச்சடை | மூச்சுத் திணறுதல் | suffocate |
மூச்சு | (உயிர் வாழ்வதற்கு) நுரையீரலுக்குள் இழுத்து வெளிவிடும் காற்று | breath |
மூச்சுக்குழல் | தொண்டையிலிருந்து நுரையீரல்வரை அமைந்திருக்கும் மூச்சுப் போகும் குழல் போன்ற பாதை | windpipe |
மூச்சுத்திணறல் | சீராகச் சுவாசிக்க முடியாத அளவில் மூச்சுத் தடைப்படும் நிலை | suffocation in breathing |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
