Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
மூச்சுமுட்டு | மூச்சுத் தடைப்பட்டுத் திணறுதல் | suffocate |
மூச்சுவாங்கு | மூச்சு இரைத்தல் | gasp for breath |
மூச்சுவிடு1 | ஆசுவாசப்படுத்திக்கொள்ளுதல் | take or have a breather |
மூச்சுவிடு2 | (எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (சிறிதளவு) தெரிவித்தல் | make even a mention of |
மூசாப்பு | மேகமூட்டம் | (of sky) being overcast |
மூஞ்சி | முகம் | face |
மூஞ்சுறு | நீண்ட மூக்கும் வட்ட வடிவக் காதும், சிறிய கண்களும் உடைய எலி போன்ற ஒரு வகைப் பிராணி | shrew mouse |
மூட்டம் | (மேகம், புகை போன்றவை) பெருமளவில் திரண்டிருத்தல் | thick mass (of clouds, smoke, etc.) |
மூட்டு1 | (தீ) உண்டாக்குதல்/(அடுப்பில் நெருப்பு) பற்றவைத்தல் | make (fire)/kindle (fire in the hearth) |
மூட்டு2 | (சாக்கு, துணி முதலியவற்றில் இரு விளிம்புகள் இணையும்படி) சேர்த்தல் | bring closer |
மூட்டை1 | (தானியம் முதலியவை நிரப்பப்பட்டு) கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை | sack (holding grain, etc.) |
மூட்டைகட்டு | (படிப்பு, வியாபாரம் முதலியவற்றை) இனித் தொடர்வதில் பயன் இல்லை என்று நிறுத்துதல் | stop or discontinue (studies, business, etc.) |
மூட்டைப்பூச்சி | மனிதனைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி (இடுக்குகளில் வாழும்) சிறு பூச்சி | bedbug |
மூட்டைமுடிச்சு | (பெரும்பாலும் பன்மையில்) பயணத்திற்கான பொருள் | bag and baggage |
மூட | அறிவுக்கு ஒவ்வாத | absurd |
மூடநம்பிக்கை | பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளும், அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கை | superstitious belief |
மூடன் | அறிவில்லாதவன் | stupid man |
மூடி | ஒரு கொள்கலனின் திறப்பை மூடுவதற்கு அந்தத் திறப்பின் அளவே இருக்கும் தட்டுப் போன்ற பாகம் | anything that is designed for closing or covering a container |
மூடிமறை | நடந்துவிட்ட ஒன்றைப் பிறர் அறிந்துவிடாதவாறு செயல்படுதல் | cover up |
மூடு | (கதவு, ஜன்னல் போன்றவை ஒருவரோ ஒன்றோ) நுழைய முடியாத நிலைக்கு நகர்தல் அல்லது (கதவு, ஜன்னல் போன்றவற்றை) நுழைய முடியாத நிலைக்கு நகர்த்துதல் | (of doors, etc.) close |
மூடுபனி | (பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடியாதபடி) அடர்த்தியாகக் காற்றில் நிறைந்திருக்கும் பனி | fog |
மூடுமந்திரம் | (ஏதோ நடக்கிறது என்பது தெரிந்தாலும்) இன்னது நடக்கிறது என்பது தெளிவாகாத நிலை | veiled activity |
மூத்த | (உறவுமுறைச் சொற்களோடு வருகையில்) முதலில் பிறந்த/(குறிப்பிடப்படும் பலரில்) முதல் | (with kinship terms) born first |
மூத்தாள் | முதல் மனைவி | first wife |
மூத்திரம் | சிறுநீர் | urine |
மூதறிஞர் | வயது நிரம்பிய அறிஞர் | old wiseman |
மூதாட்டி | வயது முதிர்ந்த பெண் | (respectable) old woman |
மூதாதையர் | (ஒரு பரம்பரையில்) முன் வாழ்ந்தோர் | ancestors |
மூதுரை | காலம்காலமாக வழங்கிவருவதும் எடுத்துக்காட்டாகக் கூறப்படுவதுமான பெரியோர் வாக்கு | old (wise) saying |
மூதேவி | துரதிர்ஷ்டத்தை விளைவிப்பதாகக் கருதப்படும் பெண் தெய்வம் | a female deity who causes misfortune |
மூப்பு | முதுமை | old age |
மூர்க்கம் | கொடூரம் | cruelty |
மூர்ச்சி | நினைவு இழத்தல் | faint |
மூர்ச்சை | நினைவு இழப்பு | fainting |
மூர்த்தம் | திருவுருவம் | idol (of god) |
மூர்த்தி | கடவுள் | god |
மூலக்கூறு | ஒரு பொருளின் மிக நுண்ணிய கூறாக இருப்பதும் (தனித்த நிலையில்) பொருளின் தன்மைகள் அனைத்தையும் கொண்டிருப்பதுமான அணுத் தொகுப்பு | molecule |
மூலகம் | தனிமம் | element |
மூலதனம் | தொழில் துவங்கத் தேவைப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பணம் | capital |
மூலப்பொருள் | (ஒரு பொருள் தயாரிப்பதற்குத் தேவையான) தனித்தனியான அடிப்படைப் பொருள் | raw material |
மூலம்1 | குதத்தின் ஓரத்திலோ உட்பகுதியிலோ ஏற்படும் மிகுந்த வலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள் | piles |
மூலம்2 | (பிற ஒன்று) தோன்றுவதற்கு அடிப்படை | source |
மூலம்3 | இருபத்தேழு நட்சத்திரங்களுள் பத்தொன்பதாவது | the nineteenth of the twentyseven stars |
மூலவர் | (கோயிலில்) மந்திரபூர்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வம் | deity consecrated (in a temple) with sacred incantations |
மூலஸ்தானம் | (கோயிலில்) மூலவர் இருக்கும் பகுதி | the place where the consecrated idol is placed |
மூலாதாரம் | (ஒன்றை உற்பத்தி செய்ய அல்லது ஒரு தொழிலைச் செய்ய) அடிப்படையாகவும் ஆதாரமாகவும் அமைவது | resources |
மூலிகை | மருந்தாகப் பயன்படும் தாவரம் அல்லது தாவரத்தின் இலை, வேர் போன்ற பகுதி | medicinal plant or herb |
மூலைமுடுக்கு | (பொருள்களுக்கு இடையில் உள்ள) சிறு இடைவெளி | small gaps (between things) |
மூலைவிட்டம் | (சதுரம், செவ்வகம் போன்றவற்றின்) குறுக்களவு | diagonal |
மூழ்கு | (நீர்) பரப்பின் கீழ் அல்லது அடிக்குச் செல்லுதல் | submerge |
மூள் | (தீ) பற்றுதல் | (of fire) catch |
மூளி | (பெண்களைக்குறித்து வருகையில்) (மங்கலத் தோற்றத்துக்கு உரிய ஆபரணங்கள், குங்குமம் முதலியவை இல்லாத) வெறுமை | (of women) bareness |
மூளை | உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதும் தொடுதல் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிப்பதுமான, மண்டையோட்டினுள் அமைந்திருக்கும் உறுப்பு | brain |
மூளைக்காய்ச்சல் | மூளையில் ஏற்படும் அழற்சியினால் (பெரும்பாலும் குழந்தைகளுக்கு) உண்டாகும் காய்ச்சலோடு கூடிய நோய் | brain fever |
மூளைச்சலவைசெய் | சுயமாகச் சிந்தித்து முடிவுக்கு வரவிடாமல் ஒன்றைத் திரும்பத்திரும்பச் சொல்லி அல்லது உதாரணம் காட்டி அதை ஏற்கச்செய்தல் | brainwash |
மூன்று | இரண்டு என்ற எண்ணுக்கு அடுத்த எண் | (the number) three |
மெச்சு | பாராட்டுதல் | appreciate |
மெட்டி | (பெண்கள் திருமணமானதற்கு அடையாளமாகவோ அழகிற்காகவோ) கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணிந்துகொள்ளும் வெள்ளி வளையம் | silver ring worn on the second toe (by women either as a sign of married status or as cosmetic jewellery) |
மெட்டு1 | பாடலின் இசை வடிவம் | tune or melody |
மெட்டு2 | சில இசைக் கருவிகளில் தந்திகளுக்குக் கீழ் வைக்கப்படும் உலோகத் துண்டு | fret |
மெத்-என்று | மிருதுவாக | soft |
மெத்த | மிக | greatly |
மெத்தனம் | உரிய கவனமோ சிரத்தையோ செலுத்தாமல் விடுதல் | lack of seriousness |
மெத்தை1 | மென்மையான பஞ்சு போன்ற பொருளை உள்ளே வைத்துத் தைக்கப்பட்ட, படுத்துக்கொள்வதற்குப் பயன்படுகிற ஒரு சாதனம் | (mostly) cotton stuffed mattress (spread on the floor or on a cot) |
மெத்தை2 | மாடி | upper storey |
மெதுபக்கோடா | கடலை மாவை உருண்டைகளாக உருட்டிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம் | a kind of savoury made of chick-pea paste by cooking it soft in oil |
மெதுமை | மென்மை | softness |
மெதுவடை | உளுந்து மாவால் செய்யப்பட்ட வடை | a kind of வடை made of lentil paste |
மெய்1 | உண்மை | truth |
மெய்2 | உடம்பு | body |
மெய்க்காப்பாளர்/மெய்க்காவலர் | முக்கிய மனிதரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்படும் அல்லது தன் சொந்தப் பாதுகாப்புக்காக நியமித்துக்கொள்ளும் காவலர் | bodyguard |
மெய்க்கீர்த்தி | அரசனுடைய பரம்பரை, அடைந்த வெற்றி, ஆட்சிக் காலம் முதலியவற்றைப் பாடல் வடிவில் தெரிவிக்கும், கல்லில் பொறித்த வரலாற்றுச் செய்தி | the details relating to the genealogy, victories, etc of a king in the form of verse inscribed on stone |
மெய்சிலிர் | (வியப்பு, மகிழ்ச்சி முதலியவற்றால்) கிளர்ச்சி அடைதல் | be enthralled |
மெய்ஞானம் | உண்மையான அறிவு | true knowledge |
மெய்ப்பாடு1 | உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்ச்சிகளின் உடல் வழியான வெளிப்பாடு | physical manifestations of emotions |
மெய்ப்பாடு2 | உண்மை | truth |
மெய்ப்பி | நிரூபித்தல் | prove |
மெய்ப்பொருள் | உண்மையாக உள்ளதான தெய்வம் | god, the only reality |
மெய்(ம்)மற | (ஒன்றில் ஈடுபட்டு) எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற உணர்வை இழத்தல் | forget or lose oneself |
மெய்மை | மெய்யானது | that which is real |
மெய்யாலும் | உண்மையாகவே | truthfully |
மெய்யெழுத்து | மெய் | consonant |
மெருகு | (புதிய பொருளில் இருக்கும் அல்லது இருப்பது போன்ற) பளபளப்பு | brightness |
மெல் | (உணவுப் பொருள் முதலியவற்றை) பற்களால் கடித்து அரைத்தல் | chew |
மெல்ல | மெதுவாக | softly |
மெல்லிசு | (பருமனாகவோ தடித்ததாகவோ இல்லாமல்) மெல்லியதாக இருப்பது | thinness |
மெல்லிசை | (ரசனைக்குப் பயிற்சி வேண்டாத) எளிய இனிய இசை | popular music (as opposed to classical music) |
மெல்லிய | பருமனாகவோ தடித்ததாகவோ இல்லாத | thin |
மெல்லினம் | மெய்யெழுத்துகளின் மூன்று பிரிவுகளுள் மூக்கொலியான ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு எழுத்துகளை உள்ளடக்கிய பிரிவு | the six nasal consonants of the Tamil (tripartite) system |
மெலி | (முன்பு இருந்ததைக்காட்டிலும் இப்போது) பருமன் குறைதல் | become thin |
மெலிது | மெலிந்தது | that which is thin |
மெழுகு1 | (ஓர் இடத்தைச் சுத்தம்செய்யும் விதமாகச் சாணக் கரைசலால்) தேய்த்துப் பூசுதல் அல்லது (நீரால்) கழுவுதல் | wash |
மெழுகு2 | கொழுப்பிலிருந்து அல்லது எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படுவதும் எளிதில் உருகக் கூடியதுமான பொருள் | wax |
மெழுகுவர்த்தி | (விளக்கைப் போல் ஏற்றிவைக்க உதவும்) நடுவில் திரியை உடைய நீண்டு உருண்ட மெழுகுக் கட்டி | candle |
மென்மை | தொடுவதற்குப் பஞ்சு போன்று இருக்கும் தன்மை | softness |
மென்றுவிழுங்கு | சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லாமல் தயக்கத்தால் இடையில் விடுதல் | be hesitant in expressing sth. openly |
மென்னி | குரல்வளை | throat |
மெனக்கெடு | (குறிப்பிட்ட வேலைக்காக மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு) நேரத்தைச் செலவழித்தல் | spend time |
மேகச்சூடு | மேகவெட்டை | gonorrhea |
மேகநோய்/மேகப்புண் | ஆணின் பிறப்புறுப்பில் புண்களை உண்டாக்கும் ஒரு பால்வினை நோய் | syphilis |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
