Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
விற்பனையாளர் உற்பத்திசெய்யும் இடத்திலிருந்து அல்லது மொத்த வியாபாரியிடமிருந்து பொருளை வாங்கி விற்பவர்retailer
விற்றுவரவு (ஒரு வியாபாரத்தில்) பொருள் விற்பனை வகையிலான வரவுproceeds (of a sale)
விறகு மரத்திலிருந்து வெட்டப்பட்டு எரிப்பதற்குப் பயன்படுத்தும் கட்டைfirewood
விறகுவெட்டி எரிப்பதற்கு ஏற்ற துண்டுகளாக மரத்தைப் பிளந்து தரும் தொழிலாளிwoodcutter
விறாந்தை1பிடி ஆணைwarrant
விறாந்தை2வராந்தாveranda
விறுவிறு (உடம்பில்) பரபரப்பான உணர்வு ஏற்படுதல்be thrilled
விறுவிறு-என்று வேகமாகquickly
விறுவிறுப்பு (-ஆக, -ஆன) (ரசிப்பவரின் கவனத்தை) கவரும்படியான வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட தன்மைthe quality of being lively and exciting
விறைப்பு (கை, கால் முதலியவை) வளையாமல் இருக்கும் அல்லது வளைவு நீங்கியிருக்கும் நிலைstiffness
வினகிரி (சமையலில் பயன்படுத்தும்) காடிvinegar
வினயம் (பேச்சு, பதில் முதலியவற்றில் வெளிப்படுத்தும்) பணிவும் அடக்கமும் நிறைந்த தன்மைpoliteness
வினா கேள்விinterrogation
வினாடி நிமிடத்தில் அறுபதில் ஒரு பங்கு கொண்ட மிகக் குறைந்த கால அளவுsecond
வினாடிவினா பதில் அளிக்கச் சில வினாடிகளே அளித்துப் பொது அறிவைச் சோதிக்க நடத்தும் போட்டிquiz
வினியோகம் (தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருள் முதலியவற்றை) உரிய முறையில் பகிர்ந்தளித்தல் அல்லது விற்பனைசெய்தல்distribution
வினியோகஸ்தர் படத்தைத் திரையிட அல்லது பொருளை விற்கத் தயாரிப்பாளரிடமிருந்து உரிமை பெற்றவர்distributor
வினியோகி (தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருள்கள் முதலியவற்றை) உரிய முறையில் பகிர்ந்து அளித்தல்distribute
வினைத்திரிபு தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களையும் மூன்று காலங்களையும் காட்டுவதற்கு வினைச்சொல் அடையும் மாற்றம்conjugation of a verb
வினைத்தொகை மூன்று காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கும் தொகைச்சொல்a compound that can function or be operative in all the three tenses
வினைப்படுத்து வினைத் தன்மை தருதல்cause to function as a verb (by adding a verbalizer)
வினைமுற்று செயல் முடிவதைக் குறிப்பதாகவும் வாக்கியத்தில் பயனிலையாகவும் வரும் வினைச்சொல்finite verb
வினையடை வினைச்சொல்லுக்கு அடையாக வரும் சொல்verb qualifier
வினையெச்சம் வினைச்சொல்லைத் தன் பொருள் முடிவிற்கு வேண்டுவதும் வினைச்சொல்லிலிருந்து பெறப்படுவதுமான வடிவம்verbal participle requiring a verb to complete the sense
வினோதம் வழக்கமானதாகவோ இயற்கையானதாகவோ இல்லாமல் வியப்பைத் தோற்றுவிப்பதாக அமைவதுstrangeness
விஜயதசமி நவராத்திரி முடிந்த மறுநாள் கலைமகளை வழிபட்டுத் தொழில், படிப்பு முதலியவற்றின் துவக்கமாகக் கொண்டாடப்படும் விழாa festival on the day following நவராத்திரி worship is offered to a form of Sakti whose blessings are sought for any new enterprise or endeavour
விஜயம் (ஒருவரின்) வரவு(ஓர் இடத்திற்கு) வருகைதருதல்arrival
விஷ்ணு திருமால்vishnu, the god regarded as the preserver of the universe
விஷப்பரிட்சை மிகவும் ஆபத்தான முயற்சிrisky venture or course of action
விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருள்poison
விஷமம் தொந்தரவு ஏற்படுத்தக் கூடிய செயல்act of nuisance
விஷமி (பெரும்பாலும் பன்மையில்) சேதம் அல்லது கேடு விளைவிப்பவன்(often plural) miscreant
விஷயஞானம் ஒரு துறையைக்குறித்து ஒருவருக்கு இருக்கும் அறிவுthe quality of being well versed or well informed in a subject
விஷயம் தகவல், செய்தி, விவரம், கருத்து முதலியவற்றைக் குறிப்பிடும் பொதுச் சொல்a general term that covers information, news, matter, etc under discussion
விஷ ஜுரம் நுண்கிருமிகளால் ஏற்படும் ஒரு வகைக் காய்ச்சல்viral fever
விஸ்தரி (அளவில், பரப்பில்) அதிகப்படுத்துதல்expand (a team, etc.) extend (a building, etc.)
விஸ்தாரம் (இடம்குறித்து வருகையில்) விசாலம்spaciousness
விஸ்தீரணம் பரப்புarea
வீக்கம் (உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிபட்ட இடம்) வீங்கியிருக்கும் நிலைswelling
வீங்கு (உடல் உறுப்பு அல்லது அடிபட்ட இடம்) இயல்பான அளவைவிடப் பெருத்தல்swell
வீச்சம் நாற்றம்offensive smell
வீச்சு (ஒன்றில் விழும்படியாக அல்லது படும்படியாக ஒன்றை) வேகத்துடன் செலுத்தும் செயல்stroke
வீசம் ஒன்றின் பதினாறில் ஒரு பகுதியைக் குறிக்கும் பின்ன அளவுthe fraction 1/16
வீசு (ஒன்றில் விழும்படியாக அல்லது படும்படியாக) வேகத்துடன் காற்றின் ஊடாகச் செலுத்துதல்throw
வீசை (தற்போது வழக்கில் இல்லாத) ஆயிரத்து நானூறு கிராம் நிறை கொண்ட நிறுத்தலளவை(a former) measure of weight, roughly about 1400 grams
வீட்டார் (குறிப்பிடப்படும்) வீட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்members of the family (referred to)
வீட்டுக்காரர் (குடியிருக்கும்) வீட்டின் உரிமையாளர்the owner of a house
வீட்டுக்கு அனுப்பு வேலையிலிருந்து நீக்குதல்send
வீட்டுப்பாடம் (பள்ளி மாணவர்களுக்கு) வீட்டில் படித்து வருமாறு அல்லது எழுதிக்கொண்டு வருமாறு தரப்படும் பயிற்சிhomework (for students)
வீண் பயன் இல்லாததுuselessness
வீண்வம்பு அநாவசியமான தலையீடுunnecessary interference
வீணடி பயனற்றதாக ஆக்குதல்waste
வீணன் உபயோகம் இல்லாதவன்wastrel
வீணாகு பயனற்றதாதல்be wasted
வீணீர் வாயிலிருந்து ஒழுகும் எச்சில்saliva
வீணை நீண்ட தண்டுப் பகுதியில் ஏழு தந்திகளையும் அடிப்பகுதியில் குடம் போன்ற அமைப்பையும் உடைய ஓர் இசைக் கருவிa classical seven-stringed musical instrument with a gourd-like part, plucked with fingers or a plectrum
வீதம் விகிதம்rate
வீதாச்சாரம் விகிதாச்சாரம்ratio
வீதி (அகன்ற) தெரு(broad) street
வீதி நாடகம் பொதுமக்கள் கூடும் இடத்தில் மேடை போன்றவை இல்லாமலும் நடிப்பவர்களுக்கு அதிக ஒப்பனை போன்றவை இல்லாமலும் நடத்தப்படும் நாடகம்street play (without stage and make-up)
வீம்பு நன்மை பயக்காது, சரியில்லை என்று தெரிந்தும் கூறிவிட்டதற்காக ஒன்றை வலுக்கட்டாயமாகச் செய்யும் அல்லது செய்யாமலிருக்கும் போக்குadamant attitude
வீரம் (ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி) எதிர்த்துப் போராடும் மன வலிமைheroism
வீரர் (ஒரு கொள்கைக்காக) அஞ்சாமல் எதிர்க்கத் துணிந்தவர்one who fights (for a cause)
வீரன் படையில் பணி புரிபவன்soldier
வீராங்கனை வீரம் மிகுந்தவள்woman warrior
வீராதிவீரன் வீரர்களுள் சிறந்த வீரன்the bravest of the brave
வீராப்பு (உண்மையில் ஒரு காரியத்தைச் செய்யத் தைரியம் இல்லாமல்) வாயளவில் வீரமாகப் பேசும் பேச்சுboastful empty talk
வீராவேசம் வீரத்தை வெளிப்படுத்தும் வெறிfrenzy of heroism
வீரிடு திடீரென்று பலமாகக் கத்துதல்scream
வீரியம் (மருந்தின்) சக்திefficacy
வீரிய விதை இரு ரகங்கள் ஓர் இனமாக்கப்படுவதால் கிடைக்கும், அதிக மகசூல் தரும் விதைhybrid seed
வீழ் விழுதல்fall
வீழ்ச்சி (உற்பத்தி) குறைதல்(விலை) சரிவுfall (in production, price, etc.)
வீழ்த்து (மற்றொரு செயல்மூலம்) கீழே விழச்செய்தல்fell
வீற்றிரு உட்கார்ந்திருத்தல்occupy an exalted position
வீறு எழுச்சிsurging up
வெக்கறை கூச்சப்படுபவன்shy person
வெக்கை (சூரிய ஒளியிலிருந்தும் நெருப்பிலிருந்தும் வெளிப்படும்) வெப்பம் heat
வெகு (குறிப்பிடப்படும்) தன்மையின் மிகுதியைக் காட்டுவது/(வினையடையின் முன்) தன்மையை வலியுறுத்திக் கூறுவதுan intensifier
வெகுமதி/வெகுமானம் பரிசுreward
வெகுவாக மிகவும்very much
வெகுள் கடும் கோபம் கொள்ளுதல்be enraged
வெகுளி கள்ளம் கபடு இல்லாத நபர்frank and innocent person
வெகுஜன பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி உள்ள/பலரும் பங்குகொள்ளும்படி உள்ளpopular/public
வெங்காயம் உரிக்கஉரிக்கத் தனித்தனியாக வந்துவிடக் கூடிய தோல் அடுக்குகளால் ஆன, காரச் சுவை கொண்ட ஒரு வகைப் பூண்டுonion
வெங்காயவடகம் நறுக்கிய வெங்காயத்துடன் உளுத்தம் பருப்பு, கடுகு முதலியவை சேர்த்துச் சிறு உருண்டையாக உருட்டிக் காயவைத்து எடுத்துப் பொரித்துப் பயன்படுத்தும் துணை உணவுப் பொருள்a kind of onion preparation dried in the sun and fried before use
வெங்காயவெடி ஒரு பரப்பில் மோதும்படி எறிந்தால் வெடிக்கும் ஒரு வகை வெடிa kind of cracker which explodes when dashed against anything hard
வெங்காரம் (மருந்தாகப் பயன்படும்) இயற்கையாகக் கிடைக்கும் வெள்ளை நிற உப்புborax
வெஞ்சனம் காய்கறி, பருப்பு முதலியவற்றால் செய்யப்படும், உணவுடன் சேர்த்து உண்ணும் துணை உணவுside-dish of vegetables and dhal
வெட்கக்கேடு வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைdisgrace
வெட்கம் பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வுshyness
வெட்கு அவமானம் அடைதல்feel disgraced
வெட்டவெளி (மரம், கட்டடம் போன்றவற்றால் மறைக்கப்படாத) பரந்த இடம்open space
வெட்டவெளிச்சம் (-ஆக, -ஆன) வெளிப்படைbeing obvious or evident
வெட்டி1வீண்being useless
-வெட்டி2வேலை என்பதோடு இணைந்து வரும் சொல்a word which occurs in combination with வேலை
வெட்டிமுறி (இகழ்ச்சித் தொனியில் கூறுகையில்) பெரிதாகச் செய்தல்(ironically) do wonderful job
வெட்டியான் (சுடுகாட்டில்) பிணத்தை எரிக்கும் பணியைச் செய்பவன்one who is engaged by the local community or authority for burning corpses
வெட்டிவேர் (நீர்ப் பாங்கான இடங்களில் வளரும்) ஒரு வகைப் புல்லின் மணம் மிகுந்த வேர்cuscus grass
வெட்டு1(கத்தி, அரிவாள் போன்றவற்றால்) துண்டித்தல்cut
   Page 199 of 204    1 197 198 199 200 201 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil