Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
வெட்டு2வெட்டும் செயல்stroke
வெட்டுக்கிளி நீண்டு மடங்கிய பின்னங்கால்களை உடையதும் பச்சை நிறத்தில் காணப்படுவதுமான ஒரு வகைப் பூச்சி/மேற்குறிப்பிட்ட பூச்சியை விட அளவில் சிறியதும் பல நிறங்களில் காணப்படுவதும் பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பதுமான ஒரு பூச்சி(large) grasshopper/locust
வெடவெட (உடல்) அதிக அளவில் வேகத்துடன் நடுங்குதல்shiver (markedly)
வெடி2வெடிப்பதற்கான ரசாயனக் கலவை நிரப்பப்பட்ட குழாய் வடிவ அல்லது உருண்டை வடிவப் பொருள்explosive
வெடிப்பு (எரிமலை, குண்டு முதலியவை) வெடித்தல்(of volcano) eruption
வெடிமருந்து (பழங்காலத் துப்பாக்கிகள், வெடிகுண்டு முதலியவற்றில் இட்டு நிரப்பும்) வெடிக்கக் கூடிய தன்மை கொண்ட ரசாயனக் கலவைgunpowder
வெடிவை திட்டம்போட்டுக் கெடுத்தல்do everything to undermine
வெடுக்கு புலால் நாற்றம்foul odour
வெண் வெள்ளை நிறமுடையwhite
வெண்கலக் குரல்/வெண்கலத் தொண்டை கணீரென்ற ஒலியை உடைய குரல்resounding voice
வெண்கலம் தாமிரமும் தகரமும் கலந்த (தட்டினால் கணீரென்ற ஒலி எழுப்பும்) உலோகம்an alloy of copper and tin
வெண்குஷ்டம் தோலின் சில பகுதிகள் இயல்பான நிறம் இழந்து வெள்ளை நிறம் அடையும் நிலைleukoderma
வெண்டை நெளிநெளியான ஓரங்களுடன் நுனி பிளவுபட்ட இலைகளைக் கொண்ட ஒரு குத்துச் செடி/மேற்குறிப்பிட்ட செடியில் காய்க்கும், விரல் போன்ற காய்okra (the plant and the fruit)
வெண்ணிலா வெண்ணிற ஒளி தரும் நிலாmoon (with milk-white rays)
வெண்ணீறு திருநீறுsacred ash
வெண்ணெய் தயிரைக் கடையும்போது திரண்டுவரும் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட வெளிர்ப் பழுப்பு நிறப் பொருள்butter
வெண்பட்டு வெளிர்ப் பழுப்பு நிறப் பட்டுa silk of pearl white colour
வெண்பா நான்கு வகையான தமிழ்ச் செய்யுள்களுள் ஒன்றுone of the four major metres of Tamil prosody
வெண்பொங்கல் பருப்பு, மிளகு முதலியவை சேர்த்துப் பச்சரிசியில் தயாரிக்கப்படும் ஒரு வகை சாதம்a preparation of rice boiled with pulses and pepper
வெண்மை வெள்ளை (நிறம்)whiteness
வெண்மைப் புரட்சி நாட்டில் பெருமளவில் பால் உற்பத்தியைப் பெருக்கும் திட்டம்scheme for increasing milk production
வெதும்பு வாடுதல் be withered
வெதுவெதுப்பு (அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத) மிதமான சூடுneither hot nor cold
வெந்தயம் கசப்புச் சுவையுடைய பழுப்பு நிறச் சிறு விதைfenugreek
வெந்நீர் (கொதிக்கும் நிலைக்கு வராத) சூடுபடுத்தப்பட்ட நீர்hot water
வெப்பம் உடல் உணரும் உயர்நிலை உஷ்ணம்heat
வெப்பமானி (பாதரசம் விரிவடைவதன் அடிப்படையில்) வெப்ப அளவைக் கண்டறிய உதவும் கருவிthermometer
வெம்பல் (காய்கறியைக் குறிக்கையில்) வெப்பத்தால் பாதிக்கப்பட்டது(of vegetables) faded and shrivelled
வெம்பு (பயன்படுத்த முடியாத அளவுக்கு வெப்பத்தால்) பிஞ்சிலேயே பழுத்தல்(of plants, vegetables) become shrivelled
வெம்மை (எரியும் பொருளிலிருந்து வீசும்) வெப்பம்heat
வெயில் வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளிsunlight or sun rays
வெருட்டு பயமுறுத்துதல்frighten
வெருள் மிரளுதல்get frightened
வெருளி சோளக்கொல்லைப் பொம்மைscarecrow
வெல் (போர், போட்டி முதலியவற்றில்) வெற்றி அடைதல்conquer (in a battle)
வெல்லம் கரும்புச் சாற்றை அல்லது பதநீரைக் காய்ச்சித் தயாரிக்கப்படும் கட்டியான இனிப்புப் பொருள்jaggery
வெவ்வேறாக தனித்தனியாகseparately
வெவ்வேறான/வெவ்வேறு தனித்தனியாக உள்ளdifferent
வெள்ளக்காடு வெள்ளத்தால் எங்கும் நீர் நிறைந்திருக்கும் நிலைwide expanse of water due to inundation
வெள்ளம் (மழை முதலியவற்றால்) நீர்ப் பெருக்குflood
வெள்ளரி நீர்ச்சத்து மிகுந்த, சிறுசிறு விதைகளோடு கூடிய பச்சையாகத் தின்னக் கூடிய காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் கொடிcucumber (the fruit and the creeper)
வெள்ளாடு அடர்ந்த ரோமம் இல்லாத கரு நிறத் தோல் உடையதும் சிறு கொம்பு உடையதுமான ஒரு வகை ஆடுgoat
வெள்ளாமை வேளாண்மைcultivation
வெள்ளாவி (துணிகளை) சலவைச்சோடாக் கரைசலில் அல்லது உவர்மண் கரைசலில் நனைத்துப் பிழிந்து பின்னர் சலவை செய்வதற்கு அவிக்கும் முறைwashing clothes by steaming
வெள்ளி1(ஆபரணங்கள், பாத்திரங்கள் முதலியவை செய்யப் பயன்படும்) விலை உயர்ந்த பளபளப்பான வெண்ணிற உலோகம்silver
வெள்ளி2சூரியனிலிருந்து இரண்டாவதாக உள்ள கிரகம்venus
வெள்ளித்திரை (திரைப்படம் காட்டுவதற்கான) வெண்ணிறத் திரைsilver screen (for screening films)
வெள்ளிவிழா (கல்லூரி, நிறுவனம் போன்றவற்றின்) இருபத்தைந்து வருட நிறைவை அல்லது (திரைப்படம் போன்றவற்றின்) இருபத்தைந்தாம் வார நிறைவைக் கொண்டாடும் விழாsilver jubilee (in the case of a film, a run of twentyfive weeks)
வெள்ளீயம் பித்தளைப் பாத்திரங்களுக்கு முலாம் பூசப் பயன்படும் வெள்ளி நிற ஈயம்white lead
வெள்ளெழுத்து தூரப்பார்வைlongsightedness
வெள்ளென அதிகாலையில்early morning
வெள்ளை பால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம்white (colour)
வெள்ளை அறிக்கை ஒன்றைக்குறித்த அரசின் கொள்கை நிலையை விளக்கும் அறிக்கைwhite paper
வெள்ளைக் கரு (வேகவைத்தால் வெண்ணிறம் அடைந்து கெட்டித் தன்மை அடையும்) முட்டையினுள் மஞ்சள் கருவைச் சுற்றி அமைந்திருக்கும் நிறமற்ற திரவப் பொருள்white (of an egg)
வெள்ளைக்காரன் (பொதுவாக) மேல்நாடுகளைச் சேர்ந்தவன்(குறிப்பாக) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன்(generally) white man
வெள்ளைக்காரி வெள்ளைக்காரன் என்பதன் பெண்பால்feminine of வெள்ளைக்காரன்
வெள்ளையடி (கட்டடம், சுவர் முதலியவற்றுக்கு) சுண்ணாம்பு பூசுதல்whitewash (a house)
வெள்ளையணு இரத்தத்தில் துரிதமாக நகரக் கூடியதும் நோயை எதிர்க்கும் சக்தியைக் கொண்டதுமான வெள்ளை நிற உயிரணுwhite blood cell
வெள்ளையன் ஆங்கிலேயன்an Englishman
வெள்ளைவெளேர்-என்று மிகவும் வெண்மையாகbrilliantly white
வெள்ளோட்டம் (புதிய கப்பல் முதலியவற்றிற்கான) சோதனை ஓட்டம்trial run (of a newly built ship, etc.)
வெளி பரந்திருப்பதுthat which is expansive
வெளிக்கிடு புறப்படுதல்start
வெளிக்குப்போ மலம் கழித்தல்empty the bowels
வெளிக்கொண்டுவா வெளிப்படுத்துதல்bring out (the abilities, talent, etc.)
வெளிக்கொணர் தெரியச்செய்தல்bring out (what is hidden)
வெளிக்கோட்டுருவம் (ஒன்றின் வடிவம்) வெளிக்கோடுகளால் மட்டும் புலப்படுகிற தோற்றம்contour
வெளிச்சம் ஒளிlight
வெளிச்சம்போட்டுக் காட்டு பகிரங்கப்படுத்துதல்make public
வெளிச்சவீடு கலங்கரை விளக்கம்lighthouse
வெளிநடப்பு (ஓர் அவையில் உறுப்பினர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்து வெளியில் எழுந்துசெல்லுதல்walkout (in an assembly)
வெளிநபர் (ஒரு நிறுவனம், அமைப்பு முதலியவற்றோடு) தொடர்பு இல்லாதவர்outsider
வெளிப்பகட்டு பிறரைக் கவர்வதற்காக மேற்கொள்ளும் போலியான ஆடம்பர நடவடிக்கைகள்outward show
வெளிப்படு (பார்வையில் படும் வகையில்) வெளியே வருதல்/உணரக் கூடிய வகையில் தோன்றுதல்emerge/be revealed
வெளிப்படுத்து அறியக் கூடிய வகையில் வெளிப்படச்செய்தல்show
வெளிப்படை தெளிவாக அறியக் கூடிய வகையில் இருப்பதுopenness
வெளிப்பாடு (ஒன்று மற்றொன்றை) வெளிப்படுத்துவதாக இருப்பதுmanifestation
வெளிப்புறப் படப்பிடிப்பு (பெரும்பாலும்) திரைப்படம் தயாரிக்க வெளி இடங்களில் நடத்தப்படும் படப்பிடிப்புoutdoor shooting
வெளியாக்கு வெளிப்படுத்துதல்make public
வெளியாகு (திரைப்படம், தேர்தல் முடிவுகள் போன்றவை) வெளியிடப்படுதல்be released
வெளியாள் சம்பந்தமில்லாத நபர்a person who is not connected (with the affair)
வெளியிடு (தபால் தலை, திரைப்படம் முதலியவற்றை) பயன்பாட்டிற்குக் கிடைக்கச்செய்தல்release (stamps, film, etc.)
வெளியீட்டாளர் நூல்களைப் பதிப்பித்து வெளியிடுபவர்publisher
வெளியீடு (அச்சடிக்கப்பட்டு அல்லது தயாரிக்கப்பட்டுப் பொதுமக்களுக்காக) வெளியிடுதல்(the act of) publishing
வெளியுறவு ஒரு நாடு பிற நாடுகளுடன் அரசியல், கலாச்சாரம், வர்த்தகம் முதலிய துறைகளில் கொள்ளும் உறவுforeign affairs
வெளியே எல்லையைத் தாண்டிoutside
வெளியேற்று வெளிவரச்செய்தல்discharge
வெளிர் (நிறத்தில்) அடர்த்தி குறைந்தlight
வெளிவர்த்தகம் இரு பிரதேசங்களுக்கு இடையே நடைபெறும் வர்த்தகம்foreign trade
வெளிவா (புத்தகம், கட்டுரை, கதை முதலியவை பத்திரிகையில்) பிரசுரமாதல்/(திரைப்படம் முதன்முறையாக) திரையிடப்படுதல்(of books, etc.) be published/(of films, etc.) be released
வெளிவாங்கு (மழைக்கான கரு மேகங்கள் நீங்கி வானம் வெளிச்சம் ஏற்படுகிற வகையில்) தெளிவடைதல்(of sky) become clear
வெளிவேஷம் (பிறரை நம்பச்செய்வதற்கான) பொய்யான நடவடிக்கைpretence
வெளிறு (மேகங்கள் இல்லாமல் வானம்) தெளிவாக இருத்தல்(of sky) be clear
வெளு (துணிகளை அழுக்கு நீக்கி) சுத்தப்படுத்துதல்wash
வெளுத்துக்கட்டு (பலரும் பாராட்டும் வகையில் அல்லது வியக்கும் வகையில் ஒன்றை) சிறப்பாகச் செய்தல்do very well
வெளுப்பு (வெளுத்த துணியின்) வெண்மைwhiteness (of washed clothes)
வெற்றி (போர், போட்டி முதலியவற்றில் எதிர்ப்பவரை) தோற்கடித்துப் பெறும் உயர்வுvictory
வெற்றிடம் காலி இடம்vacant space
வெற்றிலை பாக்கு முதலியவற்றோடு சேர்த்து மெல்லுவதற்கு உரிய இலை/மேற்குறிப்பிட்ட இலையைத் தரும் கொடிbetel leaf and the creeper
வெற்றிலைச்செல்லம் (வெற்றிலை, பாக்கு முதலியவை வைப்பதற்கு ஏற்ற முறையில்) சிறுசிறு தடுப்புகள் கொண்டதாகச் செய்யப்படும் உலோகப் பெட்டிa small metal box (for keeping betel leaves, areca nut, etc.)
   Page 200 of 204    1 198 199 200 201 202 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil