Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
வெற்று (ஒன்றில் இருக்க வேண்டியது) எதுவும் இல்லாதempty
வெறி1வெறுமையுடன் உற்று நோக்குதல்stare blankly
வெறி2(இடம் ஆட்கள் இல்லாமல்) வெறுமையாக இருத்தல்(of a place) be empty (without any sign of activities)
வெறி3(நாய், யானை போன்ற சில விலங்குகள் நோய் காரணமாக அல்லது இனப்பெருக்க விழைவின் காரணமாக) மூர்க்கமாகச் செயல்படும் நிலை(of animals) wild and mad behaviour
வெறிச்-என்று நடமாட்டம் இல்லாமல்wearing a desolate look
வெறிச்சோடு (ஓர் இடம்) ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருத்தல்wear a desolate look
வெறியாட்டம் வன்முறைச் செயல்rampageous conduct
வெறுங்காவல் (குற்றவாளியை) கடுமையான முறையில் வேலை செய்ய விதிக்காமல் சிறையில் இருக்க வழங்கும் தண்டனைsimple imprisonment
வெறுப்பு விருப்பம் இன்மையால் சகித்துக்கொள்ள முடியாத உணர்வுdislike
வெறுமை எதுவும் இல்லாதது போன்ற உணர்வுfeeling of emptiness
வே (உண்பதற்கு ஏற்ற வகையில்) (காய்கறி முதலியவை) கொதிக்கும் நீரில் போடப்பட்டோ நீராவியாலோ மென்மையாதல்/(சில உணவுப் பொருள்கள் கொதிக்கும் எண்ணெய்யில் போடப்பட்டோ சூடான கல்லில் ஊற்றப்பட்டோ) மாவுத் தன்மை நீங்கித் திட நிலை அடைதல்(of vegetables, etc.) boil (in water)
வேக்காடு (அரிசி, காய்கறி முதலியவை) வெந்திருக்கும் நிலைboiled state
வேகத்தடுப்பு/வேகத்தடை (வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்காகச் சாலையில்) குறுக்கே சற்று மேடாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்புspeed-breaker
வேகப்பந்து வீச்சு (கிரிக்கெட் விளையாட்டில்) மிகுந்த வேகத்தில் பந்து வீசப்படுதல்(in cricket) fast bowling
வேகம்1(பொதுவாக இயக்கம்குறித்து வருகையில்) குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு தூரம் அல்லது இத்தனை முறை என்ற விதத்தில் கணக்கிடப்படும் அளவுspeed
வேகம்2நாற்றம்(strong) smell
வேங்கை நீண்ட உடல்வாகு கொண்ட புலிtiger
வேசி விபசாரிprostitute
வேட்கை (ஒன்றை) அடைந்துவிட வேண்டும் என்ற விருப்பம்strong desire
வேட்டி (ஆண்கள்) இடுப்பில் சுற்றி அணியும், கணுக்கால்வரை நீளமுள்ள ஆடைunstitched garment for men that hangs from waist to ankle
வேட்டு வெடிcracker
வேட்டைநாய் கூர்மையான மோப்ப சக்தி உடையதும் வேட்டைக்குச் செல்வதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டதுமான நாய்hunting dog
வேட்டைப்பல் கோரைப்பல்canine tooth
வேட்டையாடு (விலங்கு, பறவை ஆகியவற்றை) தேடித் துரத்திக் கொல்லுதல் அல்லது பிடித்தல்hunt
வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுபவர்candidate (for election to an office)
வேட்புமனு தகவல்களை நிரப்பிக் கையெழுத்திட்டு முன்வைப்புத் தொகையுடன் (தேர்தல் அதிகாரியிடம்) அளிக்கும் படிவம்nomination papers
வேடதாரி (கூத்து, நாடகம் முதலியவற்றில் நடிப்பதற்காக) வேடம் தரித்தவர்one who plays a role in a drama
வேடம் (நடிப்பவர்) பாத்திரத்திற்கு ஏற்பச் செய்துகொள்ளும் ஒப்பனைcostume due to a part in a drama
வேடன் வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டவன்hunter
வேடிக்கை பார்ப்பதற்கு, கேட்பதற்கு வினோதமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் சிரிப்பை விளைவிக்கக் கூடியதாகவும் அமைவதுfun
வேடிக்கை பார் (காண்பது) வினோதமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருப்பதாகக் கவனித்தல்enjoy the scenes
வேண்டாவெறுப்பாக செய்ய வேண்டி இருக்கிறதே என்ற வெறுப்போடுreluctantly
வேண்டிய தேவையானnecessary
வேண்டியிரு தவிர்க்க முடியாத அல்லது செய்தே தீர வேண்டிய நிலையில் இருத்தல்be necessary
வேண்டு பணிவோடு நயமாகக் கேட்டல்ask politely
வேண்டுகோள் ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல்request
வேண்டுதல் பிரார்த்தனைvow made to a particular deity
வேண்டும்2ஒருவர் மற்றொருவருக்கு இன்ன உறவு முறையில் இருக்கிறார் என்பதைத் தெரிவிக்கும் வினைமுற்று வடிவம்a verb form used to state relationship of one to another
வேதக்காரர் கிறித்தவர்christian
வேதம் இந்து சமயத்திற்கு ஆதாரமான நெறிமுறைகளைக் கூறுவதாகவும் புராதன காலத்தில் தோன்றியதாகவும் புனிதமானதாகவும் கருதப்படும் நூல் அல்லது நூல்களின் தொகுப்புthe Vedas
வேதவாக்கு (வேதம் போன்று) மதிக்கத் தகுந்த வாக்கியம் அல்லது சொல்gospel truth
வேதனை வருத்தும் துன்பம்agony
வேதாந்தி அத்துவைதக் கொள்கையைப் பின்பற்றுபவர்follower of the Advaita system
வேதாளம் (மரத்தில் வசிப்பதாகவும் கிளைகளில் தொங்குவதாகவும் கூறப்படும்) ஒரு வகைப் பேய்demon (said to be living in trees and hanging down from branches)
வேதி ரசாயனchemical
வேதிகை பலி பீடம்altar for oblations
வேதியியல் பொருள்களின் மூலக்கூறுகளையும் அந்த மூலக்கூறுகள் எந்தச் சூழ்நிலையில் எவ்வாறு ஒன்றோடு ஒன்று வினை புரிகின்றன என்பதையும் விவரிக்கும் அறிவியல் துறைchemistry
வேதுபிடி ஆவிபிடித்தல்inhale (hot vapour)
வேந்தன் அரசன்king
வேப்பங்காய் (கசப்புச் சுவை உடைய) வேப்ப மரத்தின் காய்(the bitter) fruit of the neem tree
வேப்பமரம் கூர்மையான முனை உடைய சிறிய இலைகளைக் கொண்ட (நிழலுக்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் வளர்க்கப்படும்) ஒரு வகை மரம்neem
வேப்பிலைக்கட்டி (உணவில் தொட்டுக்கொள்ளப் பயன்படும்) நாரத்தை அல்லது எலுமிச்சை இலையோடு புளி, மிளகாய், பெருங்காயம் முதலியவற்றைச் சேர்த்து இடித்து எடுக்கும் பொடி போன்ற பண்டம்powdered lemon leaves mixed with tamarind, chillies, etc (added to cooked rice to give a mild flavour)
வேப்பெண்ணெய் வேப்பங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் கசப்புச் சுவையுடைய எண்ணெய்oil extracted from neem seeds
வேய் (ஓலை, ஓடு முதலியவற்றை) சாய்வாகக் கட்டப்பட்ட மரச் சட்டங்களுக்கு மேல் கட்டுதல்/கூரை அமைத்தல்cover the roof (with tiles)/thatch (the roof)
வேர்2சத்தையும் நீரையும் பெறும்பொருட்டு அடிப்பாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் தாவரத்தின் பாகம்root
வேர்க்குரு கோடைக் காலத்தில் தோலில் தோன்றும் சிவப்பு நிறச் சிறு பருprickly heat
வேர்க்கொம்பு சுக்குdried ginger
வேரூன்று உறுதியாக நிலைத்தல்strike root
வேல்1(முற்காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய) மேல்பகுதியில் இலை வடிவக் கூரிய உலோக முனையைக் கொண்ட ஆயுதம்a long staff with a leaf-like metal edge used as a weapon
வேல மரம் (கலப்பை போன்ற விவசாயக் கருவிகள் செய்யப் பயன்படுத்தும்) இரு வரிசையாகப் பிரிந்த சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகை முள் மரம்babul
வேலி1ஒரு பகுதியின் எல்லையில் பாதுகாப்பு கருதி முள், கம்பி போன்றவற்றால் எழுப்பப்படும் அமைப்புfence
வேலி2(நில அளவையில்) இருபது மா கொண்ட அளவுa land measure of twenty மா (equal to 6
வேலை (பொதுவாக) செயல்work
வேலைசெய் (இயந்திரம் முதலியவை) இயங்குதல்(machine, etc.) function
வேலைநிறுத்தம் (ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவோ ஒன்றிற்கான எதிர்ப்பாகவோ) வேலைக்குப் போகாமல் இருத்தல்strike
வேலைப்பாடு (கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில்) அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலைcraftsmanship
வேலைபார் பணி புரிதல்do work
வேலைபோட்டுக்கொடு (ஒருவருக்கு) வேலை கிடைக்க ஏற்பாடு செய்தல்help
வேலையில்லாத் திண்டாட்டம் வேலை கிடைக்காத நிலைunemployment
வேலையைக்காட்டு விஷமம்செய்தல்play dirty tricks
வேலைவாங்கு வேலை செய்யவைத்தல்extract work
வேலைவை வீணாக மறுபடியும் வேலை செய்யும்படி ஆக்குதல்leave a work half done (so that the successor has to do more work)
வேவு (ரகசியத்தையோ நடைமுறையையோ) பிறர் அறியாத வகையில் தெரிந்துகொள்ளும் முறைspying
வேள்வி யாகம்sacrifice
வேளாண்மை பயிர்த்தொழில் agriculture
வேளாவேளைக்கு (குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை என்ற வகையில்) உரிய நேரத்தில்at the proper or appointed time
வேளை நேரம்time
வேற்றுமை மாறுபடும் தன்மைdifference
வேற்றுமை உருபு வேற்றுமைப் பொருண்மையை உணர்த்துவதற்கு அடையாளமாகப் பெயருக்கு இறுதியில் சேர்க்கும் உருபுcase marker or suffix
வேற்றுமை மயக்கம் ஒரு வேற்றுமை உருபு வேறொரு வேற்றுமைப் பொருளில் வழங்கும் நிலை மாற்றம்use of one case for another
வேறு தனித்து அறியப்படுவதுdifferent
வேறுபடு ஒன்று போல் இல்லாமலிருத்தல்differ
வேறுபடுத்து (ஒன்றல்ல) வேறுவேறு எனக் காட்டுதல்distinguish
வேறுபாடு வேற்றுமைdifference
வேனல் கட்டி (கோடைக் காலத்தில் உடலில் உண்டாகும்) பழுத்துச் சீழ் வெளிவரக் கூடிய கட்டிboil on the body caused by heat in summer
வேனில் கோடைsummer
வேஷம்கட்டு (நாடகம் முதலியவற்றில்) பாத்திரம் ஏற்று நடித்தல்play roles (in drama, etc.)
வை3திட்டுதல்scold
வைக்கோல் மணிகள் நீக்கப்பட்டு உலர்த்திய நெற்பயிரின் தாள்straw of paddy
வைகறை விடியத் தொடங்குகிற நேரம்dawn
வைகாசி இரண்டாவது தமிழ் மாதத்தின் பெயர்the name of the second Tamil month, i
வைகுண்டம் (வைணவர் வழக்கில்) திருமால் இருக்கும் உலகம்the sacred abode of Vishnu
வைசூரி பெரியம்மைsmallpox
வைடூர்யம் விலைமதிப்புடைய வெளிர் நீலக் கல்a precious stone
வைணவம் திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் இந்து மதப் பிரிவு(a sect of) Hindu religion which regards Vishnu as the Supreme God
வைணிகர் வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்maestro of வீணை
வைத்த கண் வாங்காமல் (பார் என்ற வினையுடன்) ஒருவரின் அல்லது ஒன்றின் மீது பதித்த பார்வையைச் சிறிதும் விலக்காமல்gazing fixedly at
வைத்தியம் மருத்துவம்system of medicine
வைத்தியர் மருத்துவர்doctor
வைத்திரு (ஒன்றை) உடையதாக இருத்தல்have
   Page 201 of 204    1 199 200 201 202 203 204