Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| எட்டிப்போடு | (காலை நீட்டி நடப்பதன்மூலம் நடையை) வேகப்படுத்துதல் | quicken (the pace by long steps) |
| எட்டு2 | (நடக்கும்போதோ தாவும்போதோ) இரு காலுக்கு இடையில் உள்ள தூரம் | step |
| எட்டு3 | ஏழு என்னும் எண்ணுக்கு அடுத்த எண் | (the number) eight |
| எட்டுக்கால்பூச்சி | ஒரு வகைச் சிறிய சிலந்தி | a kind of spider small in size |
| எடுகோள் | கருதுகோள் | hypothesis |
| எடுத்த எடுப்பில் | தொடங்கியவுடன் | straight away |
| எடுத்தலளவை | நிறுத்தலளவை | measurement of weight |
| எடுத்தாள் | (சிறப்பாகக் கூறும்பொருட்டு உதாரணமாக, மேற்கோளாக) கையாளுதல் | employ (for the purpose of effectiveness, as an illustration) |
| எடுத்துக்காட்டு1 | (ஒன்று அடிப்படையாக அமைந்து) வெளிப்படுத்துதல் | show |
| எடுத்துக்காட்டு2 | உதாரணம் | example |
| எடுத்துக்கொள் | (தனக்கு) உரிமையாக்கிக்கொள்ளுதல் | take possession of |
| எடுத்துச்செல் | (கருத்தை, செய்தியை) பரப்புதல் | carry |
| எடுத்துவிடு | அதிகமாகச் சொல்லுதல் | give an exaggerated account |
| எடுத்தெறிந்து பேசு | (ஒருவரை) பொருட்படுத்தாமல் அல்லது அலட்சியப்படுத்தும் வகையில் பேசுதல் | talk back insolently |
| எடுப்பார்கைப்பிள்ளை | (மற்றவர்கள் சொல்வதைச் சரியென நம்பிச் செயல்படும்) சுய சிந்தனை அற்ற ஒருவர் | one who is incapable of acting on his own |
| எடுப்பு1 | ஒரு பாட்டு அதற்கு உரிய தாளத்தில் ஆரம்பிக்கும் இடம் | the starting point in the rendering of a composition set to a particular தாளம் |
| எடுப்பு2-ஆக/-ஆன | (உடலமைப்பில் அல்லது தோற்றத்தில்) கவர்ச்சியாக/கவர்ச்சியான | attractively/attractive |
| எடுப்புச்சாப்பாடு | உணவு விடுதியிலிருந்து (அடுக்குப் பாத்திரத்தில்) எடுத்துவரப்படும் உணவு | meal brought (to s |
| எடுபடு | (ஒரு குழுவினரிடையே) வரவேற்கப்படுதல் | gain acceptance |
| எடுபிடி | (மிகுந்த பொறுப்புடையதாக இல்லாத) சிறு பணி | petty errands |
| எடை | (ஒருவரை அல்லது ஒன்றை) நிறுத்துக் கணக்கிடப்படும் நிறை அளவு | weight (of a person or a thing) |
| எடைக்கல் | (நிறுப்பதற்குப் பயன்படுத்தும்) நிறை குறிக்கப்பட்ட உலோகக் கட்டி | a piece of metal of standard heaviness (for weighing) |
| எடைகட்டு | தராசில் வைக்கும் பாத்திரத்தின் எடைக்குச் சமமான எடைக்கற்களை வைத்தல் | offset the weight (of the container before weighing the contents) |
| எடைபோடு | எடையைக் கணக்கிடுதல் | weigh |
| எண்1 | (எத்தனை உள்ளன என்பதை) கணக்கிட்டுச் சொல்வதற்கு உதவும் 1, 2, 3 முதலிய கணிதக் குறியீடு | number |
| எண்கோணம் | எட்டு (சம) கோணமுடைய வடிவம் | octagon |
| எண்சுவடி | (பெருக்கல் முதலியவை அடங்கிய) வாய்பாட்டுப் புத்தகம் | multiplication tables |
| எண்சோதிடம் | (பிறந்த தேதி, மாதம், வருடம், பெயருக்கான மதிப்பு ஆகியவற்றைக் கூட்டி அதன் அடிப்படையில் ஒருவரின்) குணநலன்கள், எதிர்காலப் பலன்கள் முதலியவற்றைக் கணித்துக் கூறும் கலை | numerology |
| எண்ணக்கரு | கருத்தாக்கம் | concept |
| எண்ணம் | நினைப்பு | thinking |
| எண்ணி | (வழக்கமாக எதிர்பார்ப்பதற்கும்) குறைந்த அளவில் | far below (the normally expected number) |
| எண்ணிக்கை | எத்தனை அல்லது எவ்வளவு என்னும் கணக்கு | (total) number |
| எண்ணு1 | (வரிசையாக அல்லது முறைப்படி) எண்களைக் கூறுதல்/(எத்தனை இருக்கின்றன என்று) கணக்கிடுதல் | count |
| எண்ணு2 | (நினைவுக்குக் கொண்டுவந்து ஒன்றை) சிந்தித்தல் | think (of) |
| எண்ணெய் | தாவர வித்துகளிலிருந்தும் மிருகக் கொழுப்பிலிருந்தும் பெறப்படுவதும் உணவுப்பண்டங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுவதுமான திரவம் | oil (obtained from oil seeds, animal fats) |
| எண்ணெய்க்கிணறு | நிலத்தடியிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காகத் தோண்டப்படும் துளை | oil well |
| எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை | நிலத்தடியிலிருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யைச் சுத்தப்படுத்தி அதிலிருந்து மண்ணெண்ணெய் போன்றவற்றைத் தனியாகப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை | oil refinery |
| எண்ணெய்வித்து | எண்ணெய் எடுக்கப் பயன்படும் தாவரங்களின் விதை, பருப்பு முதலியன | oil seed(s) |
| எண்பது | பத்தின் எட்டு மடங்கைக் குறிக்கும் எண் | (the number) eighty |
| எண்பி | நிரூபித்தல் | prove |
| எத்தன் | துணிச்சலாக ஏமாற்றுபவன் | a cheat |
| எத்தனம் | முயற்சி | effort |
| எத்தனி | முயற்சிசெய்தல் | make an effort |
| எத்தனை | (எண்ணப்படக் கூடியதில்) எவ்வளவு | how many |
| எத்துணை | எவ்வளவு | how much |
| எதற்கெடுத்தாலும் | எடுத்ததற்கெல்லாம் | at the slightest provocation |
| எதார்த்தம் | (-ஆக, -ஆன) (எதையும் மறைக்காத) வெளிப்படை | realistic manner |
| எதிர்1 | (ஒருவரை, ஒரு போக்கை, ஒரு நிலையை) மறுத்து மாறான நிலை மேற்கொள்ளுதல் | oppose (a person, attitude, stand, etc.) |
| எதிர்2 | நேர் முன்னால் இருப்பது | (directly) opposite |
| எதிர்க்கட்சி | ஆளும் கட்சியை (கொள்கை அடிப்படையில்) எதிர்க்கும் கட்சி | party in opposition |
| எதிர்கொள் | (வருபவரை நோக்கி) சென்று சந்தித்தல் | approach and greet |
| எதிர்த்தரப்பு | ஒருவரை எதிர்த்துப் போட்டியிடுபவரின் பக்கம் அல்லது எதிரியின் பக்கம் | opposite (camp, party) |
| எதிர்த்தாற்போல் | எதிரே | in the opposite direction |
| எதிர்த்து | ஏற்றுக்கொள்ளாமல் மறுத்து | in protest of |
| எதிர்த்துப்பேசு | (மரியாதைக்கு உரியவர்களை) மதிக்காமல் மறுப்பாகப் பேசுதல் | talk back |
| எதிர்நீச்சல்போடு | (வாழ்க்கையில் ஏற்படும் தடை, தொல்லை முதலியவற்றை) எதிர்த்துப் போராடுதல் | surmount obstacles |
| எதிர்நோக்கு | எதிர்பார்த்துக் காத்திருத்தல்(ஒன்றை) அடைய அல்லது பெற வேண்டிய நிலையில் இருத்தல் | await |
| எதிர்ப்படு | (தற்செயலாக) எதிரில் வருதல் | run into |
| எதிர்ப்பாளர் | எதிர்த்தரப்பில் இருப்பவர் | one who is opposed to |
| எதிர்ப்பு | உடன்படவோ ஏற்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது மேற்கொள்ளும் எதிர்ச் செயல் | opposition |
| எதிர்பார் | (வர இருப்பதை அல்லது நிகழ இருப்பதை) முன்கூட்டியே பார்த்தல்(ஒன்று இவ்வாறு நடக்க வேண்டும் என்று) நினைத்தல் | expect |
| எதிர்பார்ப்பு | (விளைவை, வருகையை, நிகழ்ச்சியை) முன்கூட்டியே எண்ணிப்பார்ப்பது | expectations |
| எதிர்பார்ப்பு ஜாமீன் | காவல் துறையினரால் கைதுசெய்யப்பட நேர்ந்தால் ஜாமீனில் வருவதற்கு வழி செய்யும் வகையில் முன்கூட்டியே நீதிமன்றத்தில் விண்ணப்பித்துப் பெறப்படும் உத்தரவு | anticipatory bail |
| எதிர்மாறு | உடன்படாத நிலை | contrariety |
| எதிர்முகமாக | நேர் எதிராக அல்லது எதிர்ப்பக்கத்தில் | in front of |
| எதிர்வரும் | இனி வரும் | (in the days, months, etc.) to come |
| எதிர்விளைவு/எதிர்வினை | ஒரு செயலால் ஏற்படும் (பின்) விளைவு | reaction |
| எதிரணி | (விளையாட்டில், தேர்தலில்) எதிர்த்துப் போட்டியிடும் பிரிவு | rival camp |
| எதிராளி | எதிரி | enemy |
| எதிரி | பெரும் தீங்கு விளைவிப்பது | enemy |
| எதிரிடை | (கொள்கை, இயக்கம் முதலியவற்றிற்கு) நேர்மாறு | contrariness |
| எதிரில் | எதிர்ப்பக்கத்தில் | in front of |
| எதிரும்புதிருமாக | நேருக்கு நேர் பார்க்கும்படியாக | facing one another |
| எதிரொலி2 | (சுவர், மலை ஆகியவற்றில் பட்டு) மீண்டும் கேட்கும்படி திரும்பி வரும் ஒலி | echo |
| எதிரொளி1 | (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் படும்) ஒளி திரும்பி வருதல் | reflect |
| எதிரொளி2 | (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் பட்டு) திரும்ப ஒளிரும் ஒளி | reflection |
| எதிரோட்டம் | எதிர்த்து வரும் (நீரின்) போக்கு | cross current |
| எதுகை | செய்யுளின் அடிகளில் (அல்லது சீர்களில்) இரண்டாவது எழுத்து அதே எழுத்தாகவோ அல்லது அதன் இனமான எழுத்தாகவோ இருக்கும் ஒலி இயைபு | a rhyming technique in versification in which the second letters of the lines (or some metrical feet of the same line) are either the same or similar |
| எதுகைமோனை | (பேச்சில்) அலங்காரமான ஒலிநயம் | alliteration |
| எதேச்சாதிகாரம் | எல்லா உரிமைகளையும் தானே எடுத்துக்கொண்டு தன் விருப்பப்படி ஆளும் அல்லது நடந்துகொள்ளும் ஆதிக்கப் போக்கு | autocracy |
| எதேச்சாதிகாரி | தன் விருப்பப்படி ஆளுபவர் அல்லது நடந்துகொள்பவர் | autocrat |
| எதேச்சை | தன் விருப்பப்படி செயல்படுவது | acting wilfully |
| எதேச்சையாக | தற்செயலாக | unintentionally |
| எதேஷ்டம் | தேவைக்கு அதிகம் | more than enough |
| எப்படி | எந்த விதமாக | in what way |
| எப்படிப்பட்ட/எப்பேர்ப்பட்ட | (ஒருவரின் அல்லது ஒன்றின் தன்மையைக் குறிக்கையில்) எந்த விதமான | whatever |
| எப்பொழுது/எப்போது | எந்த நேரத்தில் | when |
| எம் | எங்கள் | our (exclusive plural) |
| எம்பு | (உயரத்தில் இருப்பதை எடுப்பதற்கு அல்லது வேகமாகக் குதிப்பதற்கு) காலை உந்தி உடலை உயர்த்துதல் | stand on tiptoe |
| எமகண்டம் | ஒவ்வொரு நாளிலும் யமனுக்கு உரியதாகக் கருதப்படுகிற, நற்காரியங்கள் செய்வதற்கு உரியதல்லாத (மூன்று நாழிகை) பொழுது | inauspicious period (of 1?? hours) in the course of a day said to be presided over by Yama |
| எமகாதகன் | மிகச் சிரமமான காரியத்தையும் முடிக்கும் ஆற்றல் உடையவன் | one who has the ability to carry out any difficult job |
| எமகிங்கரன் | (தலையில் கொம்பு உடையவனாகக் காட்டப்படும்) யமனின் சேவகன் | servant of யமன் (with horns on his head) |
| எய் | (வில்லில் அம்பைப் பொருத்தி இழுத்து) விரைந்துசெல்லும்படி விடுதல் | shoot (an arrow) |
| எய்து | (ஒரு நிலை, உணர்ச்சி முதலியவற்றை) அடைதல் | attain or reach (a state, condition) |
| எயிறு | ஈறு | gum (of teeth) |
| எரி1 | (தீ) சுவாலையுடன் மேல் எழுதல் | (of fire) burn |
| எரி2 | (ஒன்றை) தீயினால் அழித்தல் | let |
| எரி உலை | (தொழிற்சாலைகளில் உலோகம் முதலியவற்றை உருக்குவதற்குப் பயன்படுத்தப்படும்) அதிக வெப்பச் சக்தியுடன் எரியும் அடுப்பு | furnace |
| எரிச்சல் | (பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும்) கோப உணர்வு | irritation |
| எரிசக்தி | நிலக்கரி, மண்ணெண்ணெய் முதலிய பொருள்களை எரிப்பதால் கிடைக்கும் சக்தி | heat energy (obtained by burning fossil fuel) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.