Spoken Tamil classes online - Book a demo

Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
வைத்து (ஒருவரை) கருவியாக அல்லது (ஒன்றை) காரணமாகப் பயன்படுத்திusing (the services of one)
வைத்துக்கொள்1(வாதம் முதலியவற்றுக்காக ஒன்றை) ஏற்றல்suppose (for the sake of argument)
வைதிகம்/வைதீகம் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் நெறிமுறைstrict adherence to the prescribed rites
வைதீகன் வேத நெறிப்பட்ட ஆசாரத்தை மேற்கொண்டவன்follower of Vedic precepts
வைப்பாட்டி/வைப்பு ஆசைநாயகிconcubine
வைப்புத்தொகை இருப்பு நிதிdeposit (in a bank or paid to an agency, etc.)
வைப்புநிதி (வங்கி, நிறுவனம் போன்றவை) வைத்திருக்கும் அல்லது (குறிப்பிட்ட காரணத்திற்காக) ஒதுக்கியிருக்கும் தொகைreserves (of money in a bank)
வைபவம் (சடங்கு முறையில் நிகழ்த்தும்) கொண்டாட்டம்celebration
வையகம் உலகம்the world (of mortals)
வைரம்1ஒளியைப் பல திசைகளில் பிரதிபலிக்கும் விலை உயர்ந்த வெண்ணிறக் கல்diamond
வைரம்2(முற்றிய மரத்தின்) உறுதியான பழுப்பு நிற நடுப் பகுதிhard core (of a tree)
வைரவிழா (கல்விக்கூடம், நிறுவனம் முதலியவற்றின்) அறுபது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழாdiamond jubilee
வைரி1(மரத்தில்) வைரம்பாய்தல்(of a tree) be hardened at the core
வைரி2(எந்தக் காலத்திலும் ஒத்துப்போக முடியாத) எதிரிinveterate foe
வௌவால் விலங்கு போல் குட்டிபோடுவதும் பறவை போல் பறப்பதும் இரவில் இரை தேடுவதுமான ஒரு பிராணிbat
ஜகத்குரு சங்கரர் பெயரில் நிறுவப்பட்ட மடங்களின் தலைவருக்கான பட்டப்பெயர்title of the head of the Mutt established in the name of Sankara
ஜகம் உலகம்world
ஜக(ஜ்)ஜோதி (உலகத்திற்கே ஒளி தருவது போன்ற) மிகுந்த பிரகாசம்brilliant light
ஜட்கா குதிரை வண்டிhorse drawn cart (as a mode of conveyance)
ஜட்டி இடுப்பில் அணிந்துகொள்ளும் சிறிய உள்ளாடைbrief
ஜடம் உயிரற்ற பொருள்lifeless matter
ஜடாமுடி ஒன்றோடு ஒன்று சேர்ந்து கற்றையாக இருக்கும் முடிmatted hair
ஜடைபில்லை பெண்கள் முடியில் திருகி அணிந்துகொள்ளும் கற்கள் பதிக்கப்பட்ட வட்ட வடிவ ஆபரணம்a gemmed, round ornament which can be fixed to the plaited hair
ஜண்டவரிசை (இசை கற்பவர்களுக்குச் சரளிவரிசைக்குப் பின் கற்றுத் தரப்படும்) ஒவ்வொரு ஸ்வரத்தையும் இரு முறைக்கு மேல் வரிசைப்படுத்திப் பாடும் முறைthe repetition of the ordered sequence of ஸ்வரம்
ஜதி சொற்கட்டுthe way of rendering drum syllables in a dance movement
ஜதிஸ்வரம் ஸ்வரங்களால் ஆன உருப்படிக்கு ஆடப்படும் நாட்டியம்a dance primarily by foot movements to musical notes set to a particular ராகம் and தாளம்
ஜதை இரட்டைpair
ஜந்து (பொதுவாக) உயிரினம்(குறிப்பாக) ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினம்(generally) creature
ஜப்தி கடன் கொடுத்தவர் ஏமாற்றப்படாமல் இருக்க, கடன் வாங்கியவரின் சொத்துகளைச் சட்டப்படி கைப்பற்றுதல்attachment of property
ஜபம் மந்திரத்தை வாய்க்குள்ளாகச் சொல்லிச் செய்யும் வழிபாடுsilent recitation of mantras
ஜம்-என்று பிரமாதமாகin a classy or fine manner
ஜம்பம் (-ஆக, -ஆன) தற்பெருமைoverweening pride
ஜம்பர் ரவிக்கைbodice
ஜமா (ஒரு நிகழ்ச்சிக்கு ஒன்று சேர்ந்த) குழுparty
ஜமாபந்தி கிராமக் கணக்குகளைச் சரிபார்க்கவும் நிலத் தீர்வைகுறித்த பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கவும் அந்தந்தப் பகுதிகளிலேயே சம்பந்தப்பட்ட மக்களோடு மாவட்ட வருவாய் அதிகாரிகளால் நடத்தப்படும் கூட்டம்annual meeting of the revenue officials with the concerned cultivators
ஜமாய் பிரமாதமாகச் செய்தல் அல்லது அனுபவித்தல்do in a grand style
ஜமீன் (முன்னர் வழக்கில் இருந்த) நிர்ணயித்த வரியை முதலில் செலுத்திவிட்டுப் பிறகு குடியானவர்களிடமிருந்து வசூலித்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட அரசு நிலம்an estate assigned by the government to one on condition that he pays the assessed land revenue first and then collects it from the cultivators for which he was given the authority (as practised formerly)
ஜமீன்தார் அரசிடமிருந்து ஜமீனைப் பெற்று நிர்வகித்த நிலச்சுவான்தார்a landlord who was entrusted with a ஜமீன்
ஜமுக்காளம் (படுப்பதற்கு அல்லது உட்கார்வதற்குப் பயன்படும்) கனமாக நெய்த செவ்வக வடிவத் துணிthickly woven carpet-like fabric (to sleep or sit on)
ஜரிகை மெல்லிய வெள்ளித் தகடு சுற்றப்பட்டதும் அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டதுமான பட்டு நூல்silk thread coated with silver and then gilded
ஜரூர் (ஒரு செயலை முடிப்பதில்) விரைவுbriskness
ஜல்லி சிறுசிறு துண்டுகளாக உடைக்கப்பட்ட கருங்கல் அல்லது செங்கல்road metal
ஜல்லிக்கட்டு (பொதுவாகக் கிராமப்புறங்களில் நடைபெறும்) முரட்டுக் காளையைத் துரத்திப் பிடிக்கும் விளையாட்டுa sport in which participants try to gain control of wild bull
ஜலசந்தி இரு கடல்கள் சேரும் குறுகிய நீர்வழிstrait
ஜலதரங்கம் குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள கிண்ணங்களில் வெவ்வேறு அளவில் நீர் ஊற்றிக் குச்சியால் தட்டி வாசிக்கும் இசைக் கருவிa set of cups, each containing water of varying quantity and played as a musical instrument with a stick
ஜலதாரை சாக்கடைsewer gutter
ஜலதோஷம் மூக்கிலிருந்து சளியும் நீரும் வெளியேறும் வகையில் அடிக்கடி தும்ம வைக்கும் சாதாரண உடல்நலக் குறைவு(common) cold
ஜலம் நீர்water
ஜவ்வரிசி மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து மிகச் சிறிய மணி வடிவில் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருள்sago
ஜவ்வாது ஒரு வகைப் பூனை சுரக்கும் திரவத்திலிருந்து தயாரிக்கப்படும் மணம் உடைய பொருள்a kind of scent from the glands of civet
ஜவ்வாதுப்பூனை புனுகுப்பூனைpalm civet
ஜவ்வுமிட்டாய் வெல்லப் பாகில் செய்யப்படும் ஓர் இனிப்புப் பண்டம்a sticky and elastic sweetmeat prepared with sugar
ஜவாப் பதில்answer
ஜவாப்தாரி பொறுப்பாளிperson who is responsible
ஜவான் ராணுவத்தைச் சேர்ந்த அல்லது குறிப்பிட்ட விசேஷக் காவல் படையைச் சேர்ந்த வீரர்soldier
ஜவுளி வேட்டி, சேலை முதலிய துணி வகைகள்cloth
ஜன்னல் கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக் கூடியதாகச் சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்புwindow
ஜன்னி காய்ச்சல் அதிகமாவதால் உடல் விறைத்து வலிப்புக்கு உள்ளாகும் நிலைfits accompanied by high fever
ஜனங்கள் மக்கள்people
ஜனதா விலை மலிவாகவும் பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடியதாகவும் இருப்பதுthat which the common man can afford
ஜனநாயகம் மக்களாட்சி (முறை)democracy
ஜனம் மக்கள்people
ஜனனம் பிறப்புbirth
ஜனாதிபதி குடியரசுத் தலைவர்president of a republic
ஜனி பிறத்தல்be born
ஜாக்கிரதை (-ஆக) (தேவையான) கவனம்carefulness
ஜாகை குடியிருக்கும் இடம்residence
ஜாங்கிரி உளுத்தம் மாவை முறுக்குப் போல எண்ணெய்யில் பொரித்து எடுத்துச் சீனிப் பாகில் போட்டுத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்a sweetmeat made by twisting lentil paste into oil and dipped in sugar treacle
ஜாடி அகன்ற வாய்ப்பகுதியும் நீள் உருண்டை வடிவ நடுப்பகுதியும் கொண்ட, பீங்கான் முதலியவற்றால் ஆன பாத்திரம்jar (usually made of white clay)
ஜாடை (-ஆக, -ஆன) (முகபாவம், சைகை முதலியவற்றால்) குறிப்பாகத் தெரிவித்தல்(significant) gesture
ஜாடைமாடையாக (வெளிப்படையாக இல்லாமல்) குறிப்பாகby hints
ஜாதகம் (ஒருவருடைய வாழ்நாளில் நடக்கும் நல்ல, தீய பலன்களை) ஒருவர் பிறந்த நேரத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் குறிப்புhoroscope
ஜாதி (இந்து சமூகத்தில்) சில பழக்கவழக்கங்களைப் பொதுவாகக் கொண்டிருப்பதும் ஒருவருடைய குடும்பத்தினர், உறவினர் சார்ந்திருப்பதும் பல படி நிலைகளில் அமைக்கப்பட்டதுமான பிரிவுcaste
ஜாபிதா பட்டியல்list
ஜாம்பவான் (ஒரு துறையில்) அதிக அனுபவமும் மிகுந்த தேர்ச்சியும் உடையவர்one who has long experience and is much respected (in a field)
ஜாமீன் கைதாகிக் காவலில் இருப்பவரை நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டும் உத்தரவாதம் தந்தும் விடுவித்துக்கொண்டுவரும் முறை/மேற்குறிப்பிட்ட முறையில் உத்தரவாதமாகச் செலுத்த வேண்டிய தொகைbail/surety deposit
ஜாலக்கு ஜாலம்pretence
ஜாலம் புலன்களைக் கவர்ந்து இழுத்து மயங்கவைக்கும் தன்மையுடையதுsplendour
ஜாலரா (பாடலுக்கு ஏற்ற வகையில் தாளம் போடப் பயன்படுத்தும்) ஒன்றோடு ஒன்று தட்டி வாசிக்கப்படும் இரு பகுதிகளாக உள்ள வெண்கலக் கருவிhand cymbals (used for keeping time in music)
ஜாலராப்போடு உயர் நிலையிலிருப்பவர் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக ஒப்புக்கொண்டு ஆமோதித்தல்toady
ஜானவாசம் மாப்பிள்ளை அழைப்புceremonial arrival of the bridegroom
ஜாஸ்தி அதிகம்more
ஜிகினா (மாலை முதலியவற்றில் அழகுபடுத்துவதற்காகச் சுற்றப்படும்) பளபளப்பான தகர இழைtinsel
ஜிப்பா கழுத்து வழியாக அணிந்துகொள்ளும் இறுக்கம் இல்லாத சட்டைa kind of loose-fitting shirt that is pulled over the head
ஜிமிக்கி (காதில் உள்ள தோடு போன்றவற்றுடன் இணைத்துத் தொங்கும்படியாக மாட்டிக்கொள்ளும்) சிறு குடை வடிவத்தில் இருக்கும் ஒரு காதணிbell-shaped pendant attached to an ear-ring
ஜியோமிதி வடிவகணிதம்geometry
ஜில்லா மாவட்டம்district
ஜிலேபி மைதா மாவை முறுக்குப் போல எண்ணெய்யில் பொரித்து எடுத்துச் சீனிப் பாகில் போட்டுத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்a sweetmeat made by twisting maize flour paste into oil and dipped in sugar treacle
ஜீயர் வைணவ மடத்தின் தலைவருக்கான பெயர்title of the head of Vaishnava mutt
ஜீரணம் செரித்தல்digestion
ஜீரணி (உணவுப் பொருள்கள்) செரித்தல்digest
ஜீரா சீனிப் பாகுsyrup made by boiling sugar with water
ஜீவகாருண்யம் உயிரினங்களிடம் காட்டும் இரக்கம்compassion for all living creatures
ஜீவநதி நீர் வற்றாத நதிperennial river
ஜீவராசி உயிரினம்living creatures
ஜீவன் உயிர்sign of life
ஜீவன்முக்தி மற்றொரு பிறவி என்பதே இல்லாமல் இந்தப் பிறவியிலேயே மோட்சம் அடைவதுattaining liberation while alive or in this birth itself
ஜீவனம் பிழைப்புliving
ஜீவனாம்சம் மனைவி, சிறு வயதில் உள்ள குழந்தைகள், இயலாத நிலையில் உள்ள பெற்றோர் ஆகியோரைப் பராமரிக்க மறுக்கும் ஒருவர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜீவனத்திற்காகக் கொடுக்க வேண்டிய தொகைmaintenance (allowance)
ஜீவனோபாயம் பிழைப்பு நடத்த வழிmeans of living
   Page 202 of 204    1 200 201 202 203 204