Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
ஒட்டில் ஓரத்தில்on the edge
ஒட்டு2( கிழிந்த இடத்தின் மேல் அல்லது துவாரம் உள்ள இடத்தின் மேல் வைக்கும்) பொத்தல் மறைப்புpatch (on the torn part of clothes, or on the hole in a rubber tube)
ஒட்டு3பேன் குஞ்சுlouse
ஒட்டுக்குடித்தனம் ஒரே வரிசையில் சிறுசிறு பகுதிகளாகக் கட்டப்பட்ட இடத்தில் அல்லது தனித்தனியாகத் தடுக்கப்பட்ட வீட்டின் சிறு பகுதியில் வாடகைக்கு இருக்கும் குடும்பம்living in a tenement house
ஒட்டுக்கேள் மற்றவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்டல்overhear (intentionally what others are talking)
ஒட்டுண்ணி (மனிதனின்) உடம்பில் அல்லது (விலங்கு, தாவரம் ஆகியவற்றின்) மேல்புறம் ஒட்டிக்கொண்டு உயிர்ச்சத்துகளை உறிஞ்சி வாழ்கிற உயிரினம்parasite
ஒட்டுத்திண்ணை (வீட்டின்) முன்வாசலை ஒட்டி அமைக்கப்படும் சிறிய திண்ணைa small narrow platform-like structure attached to the outer wall of a house (to sit on and relax)
ஒட்டுத்துணி உடல் மறைக்கும்படியான சிறு ஆடை அல்லது துண்டுத் துணிragged cloth
ஒட்டுதல் அன்பால் ஈர்க்கப்படுதல்attachment
ஒட்டுப்பலகை தகடு போன்ற மெல்லிய பலகைகளை ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டிச் செய்யப்பட்ட வலிமையான பலகைplywood
ஒட்டுமீசை (திரைப்படம், நாடகம் போன்றவற்றில் நடிகர் வைத்துக்கொள்ளும் அல்லது விளையாட்டுப் பொருளாக விற்கப்படும்) செயற்கை முடியால் தயாரிக்கப்பட்ட மீசைa false moustache (used by actors, etc.)
ஒட்டுமொத்தம் பலவற்றின் தொகுப்புcollective
ஒட்டுவாரொட்டி தொற்றுநோய்contagious disease
ஒட்டுவேலை கட்டடங்களில் மேல்தளம் போட ஜல்லியும் சிமிண்டும் கலந்த கலவையைப் பரப்பிப் பூசி மூடும் வேலைroof plastering
ஒட்டுறவு பாசத்தோடு கூடிய தொடர்புcordial relationship
ஒடி1(கழி, எலும்பு போன்ற உறுதித் தன்மை உடைய பொருள்கள்) இரண்டாகப் பிரிதல்(of long solid objects such as stick, bone, etc.) break
ஒடி2(கழி, எலும்பு போன்ற உறுதித் தன்மை உடைய பொருள்களை) இரண்டாகுமாறு செய்தல்(மரக் கிளை போன்றவற்றை மூல) இணைப்பிலிருந்து பிரித்தல்முறித்தல்break (long solid objects such as stick, etc or a branch of a tree)
ஒடிசல் (உடல் தோற்றத்தில்) ஒல்லி(of a figure) thin
ஒடியல் உலரவைத்த பனங்கிழங்குdried palmyra root
ஒடுக்கம் (-ஆன) (அளவு, பரப்பு முதலியவற்றைக் குறிப்பிடும்போது) குறுகல்narrow
ஒடுக்கு1(கலகம் செய்வோரை அல்லது போராட்டம் முதலியவற்றை) அடக்குதல்(உரிமைகளைப் பறித்து) கட்டுப்படுத்துதல்put down
ஒடுக்கு2(பாத்திரத்தில் ஏற்படும்) நெளிவுdent (in a vessel)
ஒடுக்குமுறை அடக்குமுறைrepressive measure(s)
ஒடுங்கிய குறுகியnarrow
ஒடுங்கு (அதிகமாக அல்லது முனைப்பாக இருந்த நிலையிலிருந்து) குறைதல்(உயிர், மூச்சு) குறைந்து உள்ளடங்குதல்(of volume, intensity, etc.) become reduced
ஒண்டி (துணை இல்லாமல்) தனி(by) oneself
ஒண்டிக்கட்டை துணை யாரும் இல்லாத வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்one who is alone (by choice)
ஒண்டு (ஒன்றின் அல்லது ஒருவரின் அருகில் போய்) ஒளிந்தாற்போல் அல்லது ஒட்டினாற்போல் இருத்தல்(பொருளோடு பொருளாகத் தன்னை) சார்த்திக்கொள்ளுதல்cling to
ஒண்டுக்குடி ஒட்டுக்குடித்தனம்living in a tenement
ஒண்ணு (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) இயலுதல்(used negatively) be able to
ஒத்த (காலத்தைக் குறிக்கையில்) ஒரே(while referring to time, period) same
ஒத்தடம் வெந்நீரில் துணியை நனைத்து அல்லது இளஞ்சூட்டில் உள்ள தவிட்டைத் துணியில் சுற்றி வலி அல்லது சளி நிவாரணத்துக்காக உடம்பில் சிறிது நேரம் வைத்துவைத்து எடுத்தல்fomentation
ஒத்தாசை (ஒருவருடைய வேலையின் சிரமத்தைக் குறைப்பதற்குச் செய்யும்) உதவிhelp
ஒத்தி கடன் வாங்கியவர் தன் உடமைகளுள் ஒன்றைக் கடன் தந்தவருக்கு அனுபோக உரிமையுடன் தருவதும் அதிலிருந்து வரும் வருமானத்தைக் கடனுக்கு ஈடாக எடுத்துக்கொள்ள அனுமதிப்பதுமான ஏற்பாடுusufructuary mortgage
ஒத்திகை (நாடகம், இசைக் கச்சேரி முதலியவற்றை மேடையில் நிகழ்த்துவதற்கு முன் அதை நடத்தி) சரிபார்க்கும் பயிற்சிrehearsal
ஒத்திசைவு (முரண்பாடு இல்லாத) பொருத்தம்harmony
ஒத்திப்போடு (ஒரு செயலை, பணியைத் திட்டமிட்ட நாளில் அல்லது நேரத்தில் செய்யாமல்) தள்ளிப்போடுதல்postpone (a work, plan, etc.)
ஒத்திரு (ஏதேனும் ஓர் அம்சத்தில் இருவர் அல்லது இரண்டாக இருப்பவை தன்மையில்) ஒன்று போல் இருத்தல்(in one aspect) be alike or the same
ஒத்திவைப்பு தள்ளிவைப்புpostponement
ஒத்திவைப்புத் தீர்மானம் பாராளுமன்றம், சட்டமன்றம் முதலியவற்றில் முக்கியமான பொதுப் பிரச்சினை ஒன்றை விவாதிக்கும்பொருட்டு அவையின் அன்றைய நடவடிக்கைகளை ஒத்திவைக்கக் கோரிக் கொண்டுவரப்படும் தீர்மானம்motion of adjournment on a matter of public importance
ஒத்து2நாதஸ்வர வாசிப்புக்குச் சுருதி கூட்ட உடன் ஊதப்படும் ஒரு குழல் கருவிa long wind instrument played on as an accompaniment to நாதஸ்வரம்
ஒத்து3இணைந்துjointly
ஒத்துப்பார் (மூலத்தையும் பிரதியையும் அல்லது கணக்கை) ஒப்பிட்டுச் சரிபார்த்தல்compare (the original with the copy)
ஒத்துப்போ இணங்கிப்போதல்be in agreement with
ஒத்துவா இணங்குதல்be in harmony with
ஒத்துழை (தனியாக ஒருவரால் முடியாத பெரிய பணியை முடிக்க மற்றவர் உடனிருந்து) இணக்கமாக உதவுதல்cooperate
ஒத்துழைப்பு இணக்கமான (கூட்டு) உதவிcooperation
ஒத்துழையாமை ஒத்துழைப்புத் தர மறுத்தல்non-cooperation
ஒத்தூது ஒத்துப்பாடுதல்say yes to
ஒதுக்கிவை (ஒருவரையோ ஒரு குடும்பத்தையோ எந்த விதத் தொடர்பும் இல்லாத வகையில்) விலக்கிவைத்தல்exclude
ஒதுக்கீடு (சேர வேண்டியது அல்லது உரியது எவ்வளவு என்று) பிரித்துத் தருவதுallotment (of place, house, etc.)
ஒதுக்கு (திரைச்சீலை, முடி முதலியவற்றை) ஒரு பக்கமாகத் தள்ளுதல்pull back (the curtains)
ஒதுக்குப்புறம் (ஊருக்கு) சற்றுத் தொலைவில் தள்ளி அமைந்திருக்கும் இடம்remote or secluded place
-ஒப்ப (நான்காம் வேற்றுமை உருபு ஏற்ற தொழிற்பெயருக்குப் பின்) முறையில்in the manner
ஒப்படை (தன் பொறுப்பில் உள்ள ஒருவரை அல்லது ஒன்றை மற்றொருவர்) பொறுப்பில் விடுதல்entrust
ஒப்பந்தக்காரர் குறிப்பிட்ட காலத்துக்குப் பொது இடங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லது கட்டடம் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்பவர்contractor
ஒப்பந்தப்புள்ளி (குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க அல்லது தேவையான பொருள்களை வழங்க ஆகும்) செலவு விவரங்களை ஒருவர் ஓர் அமைப்புக்குத் தெரியப்படுத்தும் முழு விவர அட்டவணை தாங்கிய ஆவணம்tender
ஒப்பந்தம் (நபர்கள் அல்லது அமைப்புகள் ஏதேனும் ஒன்றைத் தமக்குள் செயல்படுத்த முடிவுசெய்யும்போது அதற்காக) நடைமுறைக் குறிப்புகளோடு ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கைagreement
ஒப்பம் கையொப்பம்(mostly in government offices or government circulars) signature
ஒப்பற்ற மிகச் சிறந்தpeerless
ஒப்பனை நடிகர்கள் முகத்திலும் கை போன்ற உறுப்புகளிலும் வண்ணக் கலவையால் பூசிக்கொள்ளும் அல்லது உடலில் அணிகலன்களை அணிந்துகொள்ளும் அலங்காரம்(of actors, etc.) make up (sometimes including costume)
ஒப்பாய்வு எடுத்துக்கொண்ட பொருளை அல்லது படைப்பை அதை ஒத்த பொருளோடு அல்லது படைப்புகளோடு ஒப்பிட்டு மேற்கொள்ளும் ஆராய்ச்சிcomparative study (of a theme or of literary works)
ஒப்பாரி (இழவு வீட்டில்) இறந்துபோனவரைக்குறித்த அழுகையும் (பாட்டு வடிவிலான) புலம்பலும்lamentation (over the dead with wailing and mourning songs)
ஒப்பி (மனப்பாடமாக இருக்கும் விஷயத்தை மாற்றாமல்) திருப்பிச் சொல்லுதல்repeat or reproduce exactly (from memory)
ஒப்பிடு (ஒற்றுமை உடையவற்றில்) குறைநிறை அறிதல்(ஒற்றுமை குறைவானவற்றில்) வேறுபடுத்துதல்compare
ஒப்பீடு ஒற்றை மற்றொன்றோடு இணைத்துக் காணுதல்comparison
ஒப்பு1(ஒன்றைச் செய்வதற்கு அல்லது ஏற்பதற்கு) இணங்குதல்consent (to do)
ஒப்பு2(குணம், பண்பு, செயல், தரம் போன்றவற்றில்) இணைequal
ஒப்புக்குச் சப்பாணி குழுவில் ஒப்புக்காகச் சேர்த்துக்கொள்ளப்படும் நபர்a person included for the sake of form
ஒப்புக்கொடு ஒப்படைத்தல்entrust
ஒப்புக்கொள் ஒத்துக்கொள்ளுதல்accept
ஒப்புதல் சம்மதம்acceptance
ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் அல்லது நீதிமன்றத்திற்கு வெளியே நீதிபதி முன்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர் தானாக முன்வந்து தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகக் கொடுக்கும் வாக்குமூலம்statement of confession (made by an accused in the court or before a magistrate)
ஒப்புமை ஒப்பிடும்படி இருப்பதுcomparison
ஒப்புவி (ஒருவருடைய) பொறுப்பில் சேர்த்தல்hand over
ஒப்பேற்று (இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தன்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு) சரிக்கட்டுதல்(in difficult circumstances) make do (with what is available)
ஒப்பேறு (ஒன்றுமே இல்லை அல்லது மிகவும் மோசம் என்ற நிலையில் இல்லாமல்) தேறுதல்be salvaged
ஒய்யாரி (நடை, உடை முதலியவற்றில்) கவர்ச்சி நிறைந்த பெண்stylish woman
ஒயில் ஒய்யாரம்(stylish) elegance
ஒயில் கும்மி/ஒயிலாட்டம் கையில் வண்ணத் துணிகளை வைத்துக்கொண்டு கும்மி அடிப்பது போல் சுற்றிவந்து ஆடும் ஒரு நாட்டுப்புற நடனம்a kind of folk dance by a group in a circle waving colourful handkerchiefs
ஒருகால் ஒருவேளைperhaps
ஒருகாலும் (எதிர்மறை வினைகளுடன்) எந்தக் காலத்திலும்(with negative verbs) at any time
ஒருகை பார் (திறமைக்குச் சவால் விடப்படும்போது) உண்டு அல்லது இல்லை என்னும்படி முடித்தல்(in a challenging situation) deal with effectively
ஒருங்கமை ஒன்றுசேர்த்தல்join together
ஒருங்கிணை1(தனித்தனியாக அல்லது பல பகுதிகளாக உள்ளவை முரண்பாடு இல்லாமல்) ஒன்றாக இணைதல்join (harmoniously) together
ஒருங்கிணை2(தனித்தனியாக உள்ள பலவற்றை) ஒன்றாக இணைத்தல் அல்லது சேர்த்தல்link up
ஒருங்கிணைந்த ஒரு பணியின் அல்லது நோக்கத்தின் பல அம்சங்களையும் உள்ளடக்கிய(any scheme that is) integrated
ஒருங்கிணைப்பாளர் ஒரு திட்டத்தின் அல்லது பணியின் பகுதிகள் பலரால் அல்லது பல அமைப்புகளால் செயல்படுத்தப்படும்போது அவற்றை இணைத்துத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை வகிப்பவர்co-ordinator
ஒருங்கிணைப்பு ஒன்று கூடிய நிலைcombined state
ஒருங்கு ஒன்றாக (ஓர் இடத்தில்)all together (in one place)
ஒருங்கே ஒரே சமயத்தில்all at one time
ஒருசந்தி ஒருபொழுதுobservance of having one meal (a day)
ஒருசாரார் (பொதுவாகக் கூறும்போது) ஒரு சிலர்(ஓர் அமைப்பில்) கொள்கை ஒற்றுமை உடைய ஒரு பிரிவினர்(in general) some
ஒருசாலை மாணாக்கர் கல்விக்கூடத்தில் ஒரே சமயத்தில் படித்தவர்a contemporary at school or college
ஒருசிறிது சிறிதாவதுa small
ஒருசேர ஒன்றாக இணைந்துat the same time
ஒருத்தன் ஒருவன்a (certain) man
ஒருத்தி ஒரு பெண்/(பெண்களில் ஒரு சிலருக்கு அல்லது பலருக்கு எதிரிடையாகக் கூறும்போது) ஒரு நபர்a (certain) woman/one woman (in opposition to some or many)
ஒருதடவை (கடந்த காலத்தில்) ஒரு சந்தர்ப்பத்தில்on one occasion
ஒருதரப்பு (ஒருவருக்கு அல்லது ஓர் அமைப்புக்கு) சார்பாகச் செயல்படும் நிலைbeing one-sided or unilateral
   Page 25 of 204    1 … 23 24 25 26 27 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil