Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| ஒருதலை | ஒருதரப்பு | partiality |
| ஒருதலைக் காதல் | ஒருவர் மட்டும் மற்றொருவரை விரும்பும் காதல் | unreciprocated love |
| ஒருதலைப்பட்சம் | ஒரு பக்கச் சார்பான நிலை | partiality |
| ஒருதலையான உத்தரவு | ஒரு வழக்கு விசாரணைக்கு வரும்போது வாதி நீதிமன்றத்துக்கு வந்திருந்து பிரதிவாதி வராத நிலையில் அவரது வாதத்தைக் கேட்காமலேயே வழங்கப்படும் தீர்ப்பு | a decree given ex-parte |
| ஒருதார மணம் | ஒரே மனைவியோடு வாழும் மண முறை | monogamy |
| ஒருநேரம் | (நாளில்) ஒரு பகுதி | half-day |
| ஒருப்படு | உடன்படுதல் | agree |
| ஒருபடித்தான | ஒரே தன்மை அல்லது தரம் உடையதான | homogeneous |
| ஒருபேச்சுக்கு | வேறு வகையில் அர்த்தப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாமல் | without meaning anything |
| ஒருபொழுது | (விரதத்தின் காரணமாக) ஒரு வேளை மட்டும் உண்ணுதல் | observance of the practice of eating one meal only |
| ஒருமட்டும் | ஒருவாறாக | at long last |
| ஒருமனதாக/ஒருமனதான | கருத்து வேற்றுமை இல்லாமல்/கருத்து வேற்றுமை இல்லாத | unanimously/unanimous |
| ஒருமனப்பட்டு | ஒருமனதாக | unanimously |
| ஒருமாதிரி1 | இயல்புக்கு அல்லது வழக்கத்துக்கு மாறான முறை | out of sorts |
| ஒருமாதிரி2/-ஆக | சரியான முறைப்படி அல்லாமல் | not in the proper fashion |
| ஒருமித்து/ஒருமித்த | ஒன்றுசேர்ந்து | unanimously/unanimous |
| ஒருமுகப்படு | (மனம், உணர்வு ஆகியன) ஒன்றில் மட்டுமே நிலைபெறுதல் | (mind, feeling, etc.) get focussed on |
| ஒருமுகப்படுத்து | (மனத்தை, சிந்தனையை) ஒன்றின் மீது நிலைக்கும்படிசெய்தல் | concentrate |
| ஒருமுகமாக/ஒருமுகமான | ஒருமனதாக/ஒருமனதான | unanimously/unanimous |
| ஒருமுறை | ஒருதடவை | once |
| ஒருமுனை வரி | ஒரு பொருள் (உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து) முதலில் விற்கப்படும்போது அல்லது (கடையிலிருந்து வாங்குபவர்களுக்கு) கடைசியாக விற்கப்படும்போது விதிக்கப்படும் விற்பனை வரி | a tax levied either at the point of first sale or at the point of last sale |
| ஒருமூச்சு | தொடர்ச்சியாகச் சிறிது நேரம் | for a brief but uninterrupted spell of time |
| ஒருமைப்பாடு | (பல மாநிலங்களை உடைய ஒரு நாட்டைக் குறிப்பிடும்போது) பல உறுப்புகள் கொண்ட முழுமை | integration (of a nation) |
| ஒருவகையில் | (ஒரு விஷயத்தைக் காணக் கூடிய) குறிப்பிட்ட ஒரு நோக்கில் | from one angle |
| ஒருவருக்கொருவர் | தங்களுக்குள் அனைவரும் | to each other |
| ஒருவழிப்படுத்து | (மனத்தை) ஒருமுகப்படுத்துதல் | concentrate |
| ஒருவழிப் பாதை | வாகனங்கள் ஒரு திசையில் மட்டுமே போவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பாதை | (of traffic) one-way |
| ஒருவழியாக | இப்பொழுதாவது முடிந்ததே என்ற திருப்தியைத் தெரிவிக்கும் சொல் | a word signifying relief |
| ஒருவன் | ஓர் ஆண்/(ஆண்களில் ஒரு சிலருக்கு அல்லது பலருக்கு எதிரிடையாகக் கூறும்போது) ஒரு நபர் | a (certain) man/one man (in opposition to some or many) |
| ஒருவாய் | வாய் கொள்ளும் சிறிதளவு | a morsel |
| ஒருவிதத்தில் | ஒருவகையில் | in a way |
| ஒருவேளை | ஊகித்துக் கூறுவது நிகழ்வதற்கான வாய்ப்பு உண்டு என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்துவது | perhaps |
| ஒரே | (குறிப்பிட்ட ஒருவரை அல்லது ஒன்றைத் தவிர) வேறு இல்லாத | one and only |
| ஒரேமூச்சில்/ஒரேமூச்சாக | (ஒரு செயலை ஆரம்பித்த பின்) இடையில் நிறுத்தாமல் வேகத்துடன் | at one stretch |
| ஒரேயடியாக | (இறுதி எல்லைக்கே அல்லது வரம்புக்கே போய்விடுவது போல்) மிக அதிகமாக | completely |
| ஒல்லி | (உடல் அல்லது உடலின் ஓர் உறுப்பு) சதைப்பற்று இல்லாதிருக்கும் மெலிவு | (of body or limbs) thin |
| ஒலி1 | ஓசை எழுப்புதல் | produce sound |
| ஒலி2 | காதால் மட்டும் கேட்டு உணரக் கூடியது | (any) sound |
| ஒலிநயம் | (கவிதையில், இசையில்) இனிமையாகப் பொருந்தி வெளிப்படும் ஓசை | harmony of sound |
| ஒலிநாடா | பேச்சு, இசை போன்றவற்றை ஒலிப்பதிவுக் கருவி வழியாகப் பதிவுசெய்துகொள்ளக் கூடிய காந்தப் பூச்சுக் கொண்ட மெல்லிய பிளாஸ்டிக் நாடா | (magnetic) audio tape |
| ஒலிப்பதிவாளர் | (வானொலி நிலையம் முதலியவற்றில்) ஒலிப்பதிவு செய்பவர் | sound recordist |
| ஒலிப்பதிவு | (கருவிகள்மூலம்) ஒலியைப் பதிவுசெய்யும் பணி | sound recording |
| ஒலிப்பு | மொழியில் சொற்கள் உச்சரிக்கப்படும் முறை அல்லது மொழிக்கு உரிய ஒலிகளை வெளிப்படுத்தும் முறை | pronunciation |
| ஒலிபரப்பு1 | (வானொலி நிலையம் நிகழ்ச்சிகளை) மின்காந்த அலையாக (ஒரு எல்லைக்குள் கேட்கும்படியாக) அனுப்புதல் | transmit (programmes as from a radio station) |
| ஒலிபரப்பு2 | (வானொலி நிலையம் நிகழ்ச்சிகளை) மின்காந்த அலையாக அனுப்பும் செயல் | (radio) broadcast |
| ஒலிபெயர் | ஒரு மொழியின் சொல் ஒவ்வொன்றிற்கும் மற்றொரு மொழியில் குறியீடு தந்து எழுதுதல் | transliterate |
| ஒலிபெருக்கி | (பேச்சு, இசை முதலியவற்றின்) ஒலி அளவைப் பல மடங்காகக் கூட்டி வெளிப்படுத்த உதவும் ஒரு மின் சாதனம் | loud speaker |
| ஒலியமைப்பு | (திரைஅரங்கு, பொதுக்கூட்டம் முதலியவற்றில் இசை, பாடல் முதலியவை அனைவருக்கும் கேட்குமாறு) ஒலிபெருக்கி போன்ற சாதனங்களின்மூலம் செய்யும் ஏற்பாடு | sound arrangement (in a theatre, etc.) |
| ஒலியியல் | மொழியில் உள்ள ஒலிகள் பிறக்கும் விதம், சொற்களில் கொடுக்கப்படும் அழுத்தம், ஒலியின் அளவு முதலியவற்றை விவரிக்கும் மொழியியல் பிரிவு | phonetics (a branch of linguistics) |
| ஒலிவாங்கி | தொலைபேசியின் கேட்கக் கூடிய முனையும் பேசக் கூடிய முனையும் கொண்ட பகுதி | (telephone) receiver |
| ஒவ்வாமை | உட்கொள்ளும் உணவு, சுவாசிக்கும் காற்று முதலியவற்றில் ஒத்துக்கொள்ளாத ஏதேனும் ஒன்று இருந்து அதனால் தும்மல், தோலரிப்பு போன்ற ஆரோக்கியக் குறைவான விளைவு ஏற்படும் நிலை | allergy |
| ஒவ்வு | (ஒன்று மற்றொன்றுக்கு) பொருந்தி வருதல் | be agreeable |
| ஒவ்வொரு | குறிப்பிடப்படுகிற தனித்தனியான | every |
| ஒவ்வொன்று | (பங்கிட்டுக் கொடுக்கும் முறையில்) தனித்தனியாக (ஆளுக்கு) ஒன்று | one each (in distribution) |
| ஒழி1 | (கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவது) இல்லாமல்போதல் | disappea |
| ஒழி3 | (கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவதை) இல்லாமல்செய்தல் | eradicate |
| ஒழிந்தநேரம் | ஓய்வாக இருக்கும் நேரம் | leisure |
| ஒழிப்பு | (நடைமுறையில் கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவதை) இல்லாமல் ஆக்குவது | abolition |
| ஒழிய | (கூறப்படுவதிலிருந்து எதிர்பார்க்கும் இயற்கையான விளைவு இல்லாமல் அதற்கு மாறான நிலை ஏற்படும்போது) தவிர | though |
| ஒழுக்கக்கேடு | (சமூக நெறிமுறைகளுக்கு) புறம்பான அல்லது தவறான நடத்தை | immoral behaviour |
| ஒழுக்கம் | (-ஆன) (தன்னுடைய அல்லது தான் சார்ந்து வாழும் குழுவினருடைய பொதுநலன், ஒற்றுமை முதலியவற்றைக் கருத்தில்கொண்டு) தனிமனிதன் கடைப்பிடிக்கும் நெறி | (high) moral standard |
| ஒழுக்கு | (துவாரம், காயம் முதலியவற்றிலிருந்து நீர், இரத்தம் முதலியவற்றின்) வெளியேற்றம் | leak |
| ஒழுகலாறு | பழக்கவழக்கம் | custom and habit |
| ஒழுகு1 | (துவாரம், காயம் முதலியவற்றிலிருந்து நீர், இரத்தம் முதலியவை) வெளியேறி வழிதல் | leak |
| ஒழுகு2 | (பின்பற்றி) நடத்தல்(ஒன்றோடு ஒத்து) வாழ்தல் | conduct (oneself adhering to principles) |
| ஒழுங்கீனம் | (செயல், நடத்தை முதலியவற்றைக் குறிப்பிடும்போது) தரக்குறைவு | (of conduct, behaviour) low standard |
| ஒழுங்கு | (-ஆக, -ஆன) (ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு ஏற்பட்டிருக்கும்) நியதி அல்லது பொருத்தமான முறை | proper manner |
| ஒழுங்குசெய் | ஏற்பாடுசெய்தல் | make arrangements for |
| ஒழுங்கு நடவடிக்கை | விதிமுறைகளை மீறும் உறுப்பினர் மீது அல்லது பணியாளர் மீது அவர் சார்ந்திருக்கும் அமைப்போ நிறுவனமோ தன் சட்டதிட்டப்படி எடுக்கும் நடவடிக்கை | disciplinary action (taken by an organization against its member or employee) |
| ஒழுங்குப் பிரச்சினை | பாராளுமன்றம், சட்டமன்றம் முதலியவற்றில் அப்போதைய நடவடிக்கை அந்த அவையின் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று கூறி உறுப்பினர் அவைத் தலைவரின் முடிவு வேண்டி எழுப்பும் பிரச்சினை | point of order (regarding rules of procedure of a house raised by a member for the decision of the speaker) |
| ஒழுங்குமுறை | (விதிகளுக்குப் பணிந்து நடக்கும்) கட்டுப்பாடு | discipline |
| ஒழுங்கை | குறுகலான பாதை | lane |
| ஒளி1 | (ஒருவர் பிறர்) கண்ணில் படாதவாறு இருத்தல் | hide (oneself) |
| ஒளி2 | மறைவான இடத்தில் இருக்கச்செய்தல்(பார்வை படாத இடத்தில்) மறைத்தல் | hide |
| ஒளி3 | சூரியன், சந்திரன், எரியும் பொருள் முதலியவற்றிலிருந்து வெளிப்படுவது | (of illuminating objects) light |
| ஒளிக்கற்றை | ஒளிக் கதிர்த் திரள் | beam (of light) |
| ஒளிச்சிதறல் | சமதளமாக இல்லாத பரப்பில் ஒளி விழும்போது சீரற்ற முறையில் எல்லாத் திசைகளிலும் சிதறும் பிரதிபலிப்பு | scattering of light |
| ஒளிச்சேர்க்கை | இலைகளில் சூரிய ஒளி படும்போது மண்ணிலிருந்து உறிஞ்சப்பட்ட நீரும் காற்றிலிருந்து பெறப்பட்ட கரியமிலவாயுவும் இணைந்து தாவரத்துக்கு அவசியமான மாவுப்பொருளாக மாறும் முறை | photosynthesis |
| ஒளிப்பதிவாளர் | (திரைப்படத்தில்) ஒளிப்பதிவு செய்பவர் | cameraman |
| ஒளிப்பதிவு | (திரைப்படத்துக்கான) காட்சிகளைத் தக்க ஒளியமைப்புடன் புகைப்படக் கருவியால் பதிவுசெய்தல் | lighting and shooting |
| ஒளிபரப்பு1 | (நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிப் பெட்டியில் காணும் வகையில்) மின்காந்த அலைகளாக மாற்றி அனுப்புதல் | telecast |
| ஒளிபரப்பு2 | (தொலைக்காட்சிப் பெட்டியில்) படம் தெரியச்செய்யும்படி அனுப்புதல் | transmission |
| ஒளியமைப்பு | (நாடகம், திரைப்படம், முதலியவற்றுக்கு) விளக்குகளால் தேவையான வெளிச்சம் தரும் அமைப்பு | lighting arrangement (in a stage performance, etc.) |
| ஒளியாண்டு | (நட்சத்திரங்களுக்கு இடையிலான தூரத்தைக் கணக்கிடும் அளவாக உள்ள) ஒளி ஒரு வருடக் காலத்தில் செல்லும் தூரம் | light year |
| ஒளிர் | (எரியும் பொருளிலிருந்து) ஒளி வெளிப்படுதல் | glow |
| ஒளிவட்டம் | கடவுள் அல்லது மகான்களின் படங்களில் தலைக்குப் பின்னால் தெய்வீகத் தன்மையைக் குறிக்கும் வகையில் உள்ள வட்ட வடிவ ஒளி | halo |
| ஒளிவிடம் | மறைவிடம் | hideout |
| ஒளிவிலகல் | (ஓர் ஊடகத்தினுள் செல்லும்) ஒளிக் கதிர் தன் நேரான பாதையிலிருந்து சற்று விலகுதல் | refraction (of light rays) |
| ஒளிவிளக்கு | (ஓர் இடத்தை) வெளிச்சமாக்கிக் காட்டும் ??பிரகாசமான விளக்கு | powerful bright lamp (that illuminates the whole area) |
| ஒளிவுமறைவு | (ஒரு செயலைச் செய்கையில்) தெரியப்படுத்தாமல் மறைத்தல் | withholding information |
| ஒற்றறி | உளவு பார்த்தல் | spy |
| ஒற்றன் | உளவுபார்ப்பவன் | spy |
| ஒற்று2 | உளவு | spying |
| ஒற்று3 | (பெரும்பாலும் சந்தி விதியைக் கூறும்போது) மெய்யெழுத்து | (often in sandhi rules) consonant |
| ஒற்றுமை | (பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும்) கூட்டுறவு(பல பகுதிகள் இணைந்த) முழுமை | unity (of people) |
| ஒற்றெழுத்து | (புள்ளி பெறும்) மெய்யெழுத்து | consonant |
| ஒற்றை | (இரட்டையில்) ஒன்று | one (of a pair) |
| ஒற்றைக்காலில் நில் | ஒன்றைச் செய்தே அல்லது அடைந்தே தீர்வது என்று இருத்தல் | show unusual firmness or determination in achieving |
| ஒற்றைத் தலைவலி | ஒரு பக்கத்தில் மட்டும் ஏற்படுகிற தலைவலி | migraine |
| ஒற்றைநாடி | ஒல்லி | thin |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.