Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| ஏதாவது | எந்த ஒன்றாவது | anything |
| ஏது1 | (ஒரு செயல் அல்லது நிகழ்ச்சி எளிதில் நடப்பதற்கான) வசதி | that which facilitates |
| ஏப்பம் | (வயிற்றிலிருந்து) வாய்வழியாகச் சத்தத்துடன் வெளிவரும் காற்று | belch |
| ஏப்பம்விடு | (பணத்தை) அபகரித்தல் | swindle |
| ஏமா | ஏமாற்றம் அடைதல் | get disappointed |
| ஏமாளி | எளிதில் ஒருவரை அல்லது ஒன்றை நம்பி மோசம்போய்விடக் கூடிய நபர் | one who is easily beguiled or duped |
| ஏமாற்றம் | எதிர்பார்ப்பது நிறைவேறாமல் ஏற்படும் மனக்குறை | disappointment |
| ஏமாற்று | (நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய் சொல்லி ஒருவரை) மோசம்செய்தல் | cheat |
| ஏமாறு | (எதிர்பார்த்து) நம்பிக்கை இழத்தல் | get disappointed |
| ஏய் | (நம்பும்படியாக நடந்து) ஏமாற்றுதல் | fool |
| ஏர் | கலப்பை | plough |
| ஏர்க்கால் | (கலப்பையில்) ஏரையும் நுகத்தடியையும் இணைக்கும் பகுதி | the rod connecting the plough with the yoke |
| ஏர்கட்டு | (நிலத்தை உழுவதற்காக) கலப்பையில் மாட்டை இணைத்தல் | yoke the oxen to the plough |
| ஏர்பிடி | (கலப்பைகொண்டு) உழுதல் | plough |
| ஏராளம் | (எண்ணிக்கையில், அளவில்) அதிகம் | a large number |
| ஏரி | மழைநீர் வருவதற்கு வசதியாகத் திறந்த பக்கங்களும், நீர் வெளியேறும் பக்கத்தில் கரையும் கொண்டதாக உள்ள, பாசனத்திற்கான பெரிய நீர்நிலை | lake (that receives water mainly from rain, with a bank on the side from where water is discharged for irrigation) |
| ஏரிக்கட்டு | (காளை மாட்டின்) திமில் | hump (of a bull) |
| ஏருவப்படு | (நீதிமன்றத்தில் அல்லது காவல் துறையினரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு) சரணடைதல் | surrender (oneself in a court of law or to the police pleading guilty) |
| ஏல் | ஒப்புக்கொள்ளுதல் | accept |
| ஏலம்1 | பலர் கூடியுள்ள ஒரு கூட்டத்தில் மிக உயர்ந்தபட்ச விலையில் கேட்போருக்குப் பொருளைக் கொடுக்கும் விற்பனை | auction |
| ஏலம்2 | (உணவுப் பண்டங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படும்) நறுமணம் உடைய சிறு விதைகள் கொண்ட காய் | cardamom (pod containing) seeds |
| ஏலரிசி | ஏலக்காயின் உள்ளிருக்கும் விதை | seed of the cardamom fruit |
| ஏலவே | ஏற்கனவே | already |
| ஏவலாள் | ஒருவர் இடும் கட்டளையை ஏற்றுப் பணிவிடை செய்பவன் | servant |
| ஏவறை | ஏப்பம் | belch |
| ஏவாள் | கடவுள் ஆதாமிடமிருந்து படைத்த பெண் | eve |
| ஏவுகணை | தொலைவில் அல்லது உயரத்தில் உள்ள ஓர் இலக்கைக் குறிவைத்துத் தாக்குவதற்குச் செலுத்தப்படும் ராணுவ ஆயுதம் | missile |
| ஏழ் | (உயிரெழுத்துகளில் தொடங்கும் பெயர்களின் முன்) ஏழு என்பதன் பெயரடை வடிவம் | the adjectival form of ஏழு (before a vowel) |
| ஏழ்மை | வறுமை | poverty |
| ஏழாம் பொருத்தம் | ஒருவர் மற்றொருவரோடு ஒத்துப்போக முடியாத நிலை | incompatibility |
| ஏழு | ஆறு என்ற எண்ணுக்கு அடுத்த எண் | (the number) seven |
| ஏழை | வறுமையில் இருப்பவர் | poverty stricken (person) |
| ஏழைப்பங்காளன் | ஏழைகளின் துன்பங்களில் தானும் பங்கேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்பவன் | saviour of the poor |
| ஏழைபாழை | ஏழையும் ஆதரவற்றவரும் | the poor and the destitute |
| ஏற்கனவே/ஏற்கெனவே | (சொல்லப்படும் இந்த நேரத்துக்கு) முன்பே(கட்டுரை முதலியவற்றில், குறிப்பிடப்படும் இந்த இடத்துக்கு) முந்??திய பகுதியில் | (in time and space) already |
| ஏற்ப | (நான்காம் வேற்றுமையோடு இணைந்து) தகுந்த அல்லது இசைந்த முறையில் | according to |
| ஏற்படு | (ஒரு செயலின் விளைவு) வந்து சேர்தல் | (the effect/result of a cause) come into existence |
| ஏற்படுத்து | (ஒரு விளைவை) வந்து சேரச்செய்தல் | cause |
| ஏற்பாடு | செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை | preparatory work |
| ஏற்பு | (பெரும்பாலும் செய்தித்தாள் தலைப்புகளில்) அதிகாரபூர்வமான முறையில் பெற்றுக்கொள்ளுதல் அல்லது ஒப்புக்கொள்ளுதல் | acceptance |
| ஏற்பு ஊசி | தசைவிறைப்பு ஜன்னியைக் குணப்படுத்தப் போடும் ஊசி | injection against tetanus |
| ஏற்புடைய | உகந்த | suitable |
| ஏற்புத்திறன் | ஏற்றுக்கொள்கிற தன்மை | absorbing capacity |
| ஏற்புரை | பாராட்டப்படுபவர் தன்னைப்பற்றி அல்லது தன் சேவையைப்பற்றிக் கூட்டத்தில் கூறிய (பாராட்டு) கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் முறையில் பேசும் பேச்சு | speech accepting felicitations (at a formal meeting) |
| ஏற்புவலி | தசைவிறைப்பு ஜன்னி | tetanus |
| ஏற்ற | தகுந்த | agreeable |
| ஏற்ற இறக்கம் | (பேசுதல், பாடுதல் போன்றவற்றில் குரலை) உயர்த்துதலும் தாழ்த்துதலும் | (tonal) modulation (when talking, singing, etc.) |
| ஏற்றத்தாழ்வு | (மனிதரிடையே அல்லது சமுதாயத்தின் படிநிலைகளில் பிரிக்கப்படும்) தர வேறுபாடு | inequalities |
| ஏற்றப்பாடல் | (கிராமங்களில்) ஏற்றம் இறைக்கும்போது பாடும் பாடல் | song sung at the time of drawing water from well for irrigation |
| ஏற்றம்1 | (விலை) அதிகரிப்பு | rise (in price) |
| ஏற்றம்2 | கிணறு போன்ற நீர்நிலைகளின் அருகில் நீளமான கம்பு ஒன்றை நட்டு அதன் கவைப் பகுதியில் உள்ள சுழல் கட்டையோடு குறுக்குவாட்டில் ஒரு கட்டையைப் பொருத்தி அதில் நீர் பாய்ச்சுவதற்கான சால் பொருத்தப்பட்ட அமைப்பு | a structure consisting of a wooden post with a cross-bar at one end of which a சால் is tied to draw water from a well (for irrigation) |
| ஏற்று1 | (வாகனத்தில்) ஏறச்செய்தல் | take (passengers) |
| ஏற்று2 | (விளக்கு, கற்பூரம் போன்றவற்றை) எரியச்செய்தல் | light (an oil lamp, camphor, etc.) |
| ஏற்றுமதி | (பிற மாநிலங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு) அனுப்புதல் | the act of exporting |
| ஏற இறங்க | (எடைபோடும் நோக்கத்துடன் ஒருவரைப் பார்க்கும்போது) மேலும்கீழுமாக | sizing up with a view of assessing |
| ஏறக்கட்டு | (படிப்பு, வியாபாரம் முதலியவற்றை) மேலும் தொடராவண்ணம் நிறுத்துதல் | wind up |
| ஏறக்குறைய/ஏறத்தாழ | சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக | approximately |
| ஏறுக்குமாறு-ஆக/-ஆன | (பேச்சில், செயலில்) முரண்பாடாக/முரண்பாடான | in a contradictory way/inconsistent |
| ஏறுதழுவுதல் | (முற்காலத்தில் ஓர் இளைஞன் பெண்ணை மணமுடிக்கும் பொருட்டு) காளையை அடக்குதல் | taming a bull (in order to win the hand of a girl) |
| ஏறுநடை | கம்பீரமான பெருமித நடை | proud bearing (as of a victor) |
| ஏறுமுகம் | (வாழ்க்கை, வியாபாரம், விலை முதலியவற்றில்) தாழ்ந்த நிலையிலிருந்து உயரும் நிலை | upward trend (in business, life, etc.) |
| ஏறுவரிசை | முறைப்படுத்தப்பட்ட வரிசையில் முதலாவதாக உள்ளதிலிருந்து இறுதியாக உள்ளதற்குச் செல்லும் முறை | ascending order |
| ஏனம் | (வீட்டில் புழங்கும்) பாத்திரம் | vessel (in daily use) |
| ஏனெனில் | ஏனென்றால் | because |
| ஏனைய | மேலும் உள்ள | other |
| ஏனோ | குறிப்பிட்டுக் கூற முடியாத காரணத்தால் | for some reason or other |
| ஏனோதானோ-என்று/-என்ற | உரிய கவனமோ ஈடுபாடோ இல்லாமல்/உரிய கவனமோ ஈடுபாடோ இல்லாத | half-heartedly/half-hearted |
| ஐ | ஐந்து என்பதன் பெயரடை வடிவம் | the adjectival form of ஐந்து |
| ஐக்கியநாடுகள் சபை | போரைத் தடுக்கவும் மனித உரிமை, சுதந்திரம், பண்பாடு போன்றவற்றைப் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட, உலக நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட சர்வதேச அமைப்பு | united Nations Organization |
| ஐக்கியம் | இரண்டும் தனித்தனியானவை என்ற வேற்றுமை மறைந்து ஏற்படும் ஒன்றிய நிலை | fusion |
| ஐதிகம் | (காலம்காலமாக இருந்துவரும்) கருத்து(ஊறிய) நம்பிக்கை | (traditional) belief |
| ஐது | அடர்த்திக் குறைவு | sparseness |
| ஐந்தாண்டுத் திட்டம் | நாடு முன்னேற்றம் காண்பதற்காகச் சில குறிப்பிட்ட இலக்குகளை நிறைவேற்றும் நோக்கத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு வகுக்கும் திட்டம் | five Year Plan (of the central government for planned economic growth) |
| ஐந்தாம்படை | (ஒரு நாட்டை அல்லது அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்துகொண்டே) எதிரிகளுக்கு உதவிசெய்யும் கும்பல் | fifth column |
| ஐந்து | நான்கு என்ற எண்ணுக்கு அடுத்த எண் | (the number) five |
| ஐந்தொகை | (கடை முதலியவற்றில்) வரவு, செலவு, கொள்முதல், விற்றுவரவு, இருப்பு ஆகிய ஐந்தையும் சரிபார்க்கும் கணக்கு விபரம் | balance sheet |
| ஐப்பசி | ஏழாம் தமிழ் மாதத்தின் பெயர் | the name of the seventh Tamil month, i |
| ஐம்பது | பத்தின் ஐந்து மடங்கைக் குறிக்கும் எண் | (the number) fifty |
| ஐம்பொறி | (காண்பதற்கான) கண், (கேட்பதற்கான) காது, (முகர்வதற்கான) மூக்கு, (சுவைத்தறிவதற்கான) வாய், (தொட்டறிவதற்கான) உடல் ஆகிய ஐந்து உணர்வுகளுக்கான புலன்கள் | the five sense organs |
| ஐமிச்சம் | சந்தேகம் | suspicion |
| ஐயந்??திரிபு | சந்தேகமும் குழப்பமும் | doubt or misgivings |
| ஐயப்பாடு | சந்தேகத்தைத் தோற்றுவிப்பது | reservation about sth |
| ஐயம் | சந்தேகம் | doubt |
| ஐயர் | வேதமந்திரங்கள் சொல்லிக் கோயில்களில் பூஜைசெய்பவர் அல்லது திருமணம் போன்ற சடங்குகளை நடத்திவைப்பவர் | a (brahmin) priest |
| ஐயனார் | கிராமத்தின் எல்லையில் (மண் குதிரையில் அமர்ந்து) காணப்படும் ஒரு காவல் தெய்வத்தின் பெயர் | a village deity (on horseback) on the outskirts of the village |
| ஐயுறு | சந்தேகம் அடைதல் | have a doubt |
| ஐயோ | ஒருவர் தன்னுடைய வலி, துக்கம், இரக்கம் முதலியவற்றைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் ஒரு குறிப்புச் சொல் | an interjection expressing pain, sorrow, pity, etc ஐயோ, கால்வலி உயிர்போகிறதே!/ ஐயோ, எங்களையெல்லாம் இப்படி அனாதையாக விட்டுவிட்டுப் போய்விட்டாயே?/ ஐயோ, அவனுக்கு இந்த இளம் வயதில் இப்படி ஒரு நோயா? |
| ஐவேசு | சொத்து | property |
| ஒ | (ஒன்று மற்றொன்றை) போல இருத்தல்(ஒன்று மற்றொன்றுக்கு) சமமாக இருத்தல் | resemble |
| ஒக்கிடு | (சிறு கருவிகளை, இயந்திரங்களை) பழுதுபார்த்தல் | repair (usually small tools or machines) |
| ஒட்டகச்சிவிங்கி | மிக நீண்ட கழுத்தும் கால்களும் சிவந்த மஞ்சள் நிறத் தோலில் கரும் புள்ளிகளும் உடைய விலங்கு | giraffe |
| ஒட்டகம் | நீண்ட கழுத்தும் கால்களும் முதுகில் ஒற்றை அல்லது இரட்டைத் திமிலும் உடைய (பாலைவனத்தில் போக்குவரத்துக்குப் பயன்படும்) விலங்கு | camel |
| ஒட்டடை | (கூரையிலும் சுவரின் மூலைகளிலும்) திரிதிரியாகத் தொங்கும் அல்லது படிந்திருக்கும் தூசி | dust enriched with cobwebs |
| ஒட்டடைக் கம்பு | நீளமான கழியின் ஒரு முனையில் (பெரும்பாலும்) நார் சுற்றப்பட்டு ஒட்டடை நீக்கப் பயன்படும் வீட்டுச் சாதனம் | a long stick tied (usually) with mop of coconut fibre at one end to remove the dusty cobwebs |
| ஒட்டாமல் | (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) அனுமதிக்காமல் | (after an infinitive) not allowing or permitting |
| ஒட்டி | மிகக் குறைவான இடைவெளி விட்டு | close to |
| ஒட்டி உறவாடு | நெருங்கிப் பழகுதல் | move closely with |
| ஒட்டிக்கிரட்டி | ஒன்றுக்கு இரு மடங்கு | twice as much (as mentioned) |
| ஒட்டிய | (குறைவான இடைவெளியில்) அடுத்து இருக்கிற(காலத்தில்) அடுத்து வருகிற | alongside |
| ஒட்டியாணம் | (பெரும்பாலும் நடனம் ஆடும் பெண்கள்) இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்துகொள்ளும், பொன்னால் அல்லது வெள்ளியால் பட்டையாகச் செய்யப்பட்ட ஒரு வகை ஆபரணம் | gold or silver girdle-like ornament worn around the waist over the saree (mostly) by dancers |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.