Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
எரிசாராயம் எளிதில் தீப் பற்றிக்கொள்ளும் தன்மை உடையதும் ஆவியாகக் கூடியதுமான திரவ நிலையில் உள்ள எரிபொருள்spirit
எரிசோடா பெரும்பாலும் துணிகளைச் சலவை செய்வதற்குப் பயன்படும், அரிப்புத் தன்மை உடைய ஒரு வகை உப்புcaustic soda
எரிந்து விழு (பொறுமை இல்லாமல்) கோபத்துடன் கடுமையாகப் பேசுதல்fly into a temper
எரி நட்சத்திரம் (புவியீர்ப்பு விசையால் காற்றுமண்டலத்துக்குள் நுழையும்போது) ஒளியுடன் எரியும் அல்லது எரிந்து கீழே விழும் விண்வெளிப் பொருள்meteor
எரிபந்தம் தீவட்டிflaming torch
எரிபொருள் (விறகு, மண்ணெண்ணெய் போன்ற) எரிப்பதற்குப் பயன்படும் பொருள்fuel
எரிமலை பூமியின் ஆழத்திலிருந்து கொதிக்கும் பாறைக் குழம்பு முதலியவற்றை வெடிப்புடன் வெளியே தள்ளும் திறப்பு உடைய மலைvolcano
எரியூட்டு (சடலத்தைச் சிதையில் வைத்து) நெருப்புவைத்தல்light the funeral pyre
எரிவாயு நிலத்தடியிலிருந்து எடுக்கப்பட்டு எரிபொருளாகப் பயன்படும் வாயுnatural gas
எரு மக்கி மாறும் தாவரக் கழிவு, சாணம் முதலிய பயிர்களுக்கான ஊட்டச் சத்துcompost
எருக்கு பயிரிடாமல் தானாக முளைக்கும், தண்டுகளில் பால் நிறைந்த சாம்பல் நிறச் செடிyercum
எருக் குழி (உரமாக மாறுவதற்கு) தாவரக் கழிவுகள், சாணம் முதலியவை கொட்டப்படும் பள்ளம்manure pit (in the backyard of the house)
எருது (எருமை அல்லாத) மாட்டினத்தில் ஆண்ox
எருமை நீண்டு வளைந்த கொம்பும் கரிய நிறமும் தடித்த தோலும் கொண்ட ஒரு வகை மாடுbuffalo
எல்லை (நாடு, மாநிலம் ஆகியவை) முடியும் இடம்(of a country) frontier
எல்லைக்காவல் படை நாட்டின் எல்லைகளைக் காக்கும் பணிக்கு ஏற்படுத்தப்பட்ட காவல் பிரிவுborder Security Force (abbreviated to BSF)
எலி சிறிய தலையும் நீண்ட வாலும் சற்றுப் பெருத்த வயிறும் உடைய பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பிராணிcommon name for rat and mouse
எலிப்பொறி எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்புmouse trap
எலும்பு தசையினுள் அமைந்து உடலுக்கு உருவத்தைத் தரும் உறுதியான வெண்ணிறப் பகுதிbone
எலும்புக்கூடு உடலின் எலும்புக் கட்டமைப்புskeleton
எலும்பும்தோலுமாக (நோயால் அல்லது சத்துக் குறைவால்) உடல் வற்றி எலும்பு இருப்பது தெரியும்படியாகbony
எலும்புருக்கி (உடலை வற்றச் செய்யும்) காச நோய்tuberculosis
எலுமிச்சை வெளிர் மஞ்சள் நிறத்தில் புறத் தோலையும் புளிப்புச் சுவையையும் உடைய, உருண்டை வடிவப் பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும் மரம்lemon/lime tree
எவ்வாறு எந்த விதமாகin what manner
எவ்வு (உயரத்தில் இருக்கும் பொருளை எடுப்பதற்காக) எம்புதல்stretch
எவர் படர்க்கை இடத்து ஒருவரை மரியாதையுடன் குறிப்பிடும் வினாச் சொல்interrogative pronoun of the third person masculine (honorific)
எவர்சில்வர் (பாத்திரம் முதலியவை செய்யப் பயன்படும்) இரும்பும் துத்தநாகமும் கலந்த (எளிதில் துருப்பிடிக்காத) வெள்ளி நிறக் கலப்பு உலோகம்stainless steel
எவள் (பெரும்பாலும் மரியாதைக் குறைவாக) படர்க்கை இடத்துப் பெண்ணைக் குறிப்பிடும் வினாச் சொல்third person feminine interrogative pronoun (not a respectful term)
எவன் (பெரும்பாலும் மரியாதைக் குறைவாக) படர்க்கை இடத்து ஆணைக் குறிப்பிடும் வினாச் சொல்third person masculine interrogative pronoun (not a respectful term)
எவை அஃறிணைப் பொருள்களைப்பற்றிய வினாச் சொல்interrogative pronoun of the neuter plural
எழில் அழகுbeauty
எழு1(படுத்த நிலையிலிருந்து அல்லது இருந்த நிலையிலிருந்து) நிமிர்ந்த நிலைக்கு, நிற்கும் நிலைக்கு அல்லது மேல்நோக்கி உயரும் நிலைக்கு வருதல்rise
எழு2முதன்மை வினை தெரிவிக்கும் உணர்ச்சி நிலை மிகுந்த வேகத்துடன் வெளிப்படுவது என்பதைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு துணை வினைan auxiliary used to indicate that the feeling or emotional state referred to has become active or has started manifesting
எழுச்சி (குன்றிய நிலையிலிருந்து அல்லது வீழ்ச்சிக்குப் பின்) புதிய வேகத்துடன் கூடிய வளர்ச்சிrejuvenation
எழுத்தர் அலுவலகத்தில் எழுதுதல், பதிவுசெய்தல் போன்ற பணிகள் செய்யும் இடைநிலை ஊழியர்assistant
எழுத்தறிவு கல்வியறிவுliteracy
எழுத்தாணி (பனை ஓலையில்) எழுதுவதற்குப் பயன்படுத்தும், கூர்மையான நுனிப்பகுதி உடைய, ஆணி போன்ற சாதனம்stylus (for writing on palmyra leaf)
எழுத்தாளர் (பெரும்பாலும்) கதை, கட்டுரை எழுதுபவர்(mostly) writer (of prose)
எழுத்து (மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள) வரி வடிவம்letter
எழுத்துக்கூட்டு (மொழியைக் கற்கும் ஒருவர் எழுதும்போது அல்லது படிக்கும்போது) சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் உச்சரித்தல்articulate every syllable (as a beginner does)
எழுத்தெண்ணிப் படி நுணுக்கமாகப் படித்தல்study (a text) in great detail
எழுதிவை (உயிலில் சொத்துகளை) பங்கிட்டு ஒதுக்குதல்bequeath
எழுதுகோல் எழுதுவதற்குப் பயன்படுத்தும் கருவிwriting instrument (such as pen, pencil, etc.)
எழுதுபொருள் எழுதுவதற்குத் தேவைப்படும் (தாள், மை, கடித உறை முதலிய) பொருள்stationery
எழுதுவினைஞர் எழுத்தர்clerk
எழுந்திரு நிற்கும் நிலைக்கு வருதல்rise
எழுப்பு (கோட்டை, நினைவுச் சின்னம் முதலியன) உருவாக்குதல்build
எழுபது பத்தின் ஏழு மடங்கைக் குறிக்கும் எண்(the number) seventy
எழும்பு எழுதல்go up
எள் நல்லெண்ணெய் எடுக்கப் பயன்படும் கருப்பு நிறத்தில் உள்ள மிகச் சிறிய விதை/அந்த விதையைத் தரும் பயிர்sesame (the seed and the plant)
எள்ளல் ஒருவருடைய முட்டாள்தனத்தை அல்லது ஓர் அமைப்பினுடைய முரண்பாடுகளை (சிரிக்கும்படியாக) சுட்டிக்காட்டும் பரிகாசம்satire
எள்ளி நகையாடு (அவமானம் அடையும்படி) கேலிசெய்தல்make (one) an object of scorn
எள்ளுருண்டை சர்க்கரைப் பாகில் எள்ளைப் போட்டு உருண்டையாகப் பிடித்த தின்பண்டம்a ball-shaped sweetmeat prepared by mixing sesame seeds in treacle
எளிது கஷ்டம் இல்லாததுnot difficult
எளிமை சிக்கல் அற்ற தன்மைsimplicity
எளிய சிக்கல் அற்றuncomplicated
எளியார் பொருள் வசதி இல்லாதவர்people of little means
எற்று (காலால்) உதைத்தல்kick
எறி1(தள்ளி விழும்படி) வேகத்துடன் வீசுதல்throw (with force)
எறி2முதன்மை வினையின் செயல் ஒரு வேகத்துடனும் தீவிரத்துடனும் நிகழ்த்தப்படுவது என்பதைக் குறிப்பிடும் துணை வினைan auxiliary verb used to lend force and intensity to the action of the main verb
எறிநாடா தறியில் ஊடையைச் செலுத்தக் கையால் இயக்கும் சாதாரண நாடாவைவிட அகலத்திலும் நீளத்திலும் சிறிய நாடாthrow shuttle (for weaving cloth with finer counts of yarn)
எறிபந்து நடுவில் கட்டியிருக்கும் வலையில் படாமல் ஒரு பெரிய பந்தை ஓர் அணியினர் எறிய, எதிர் அணியினர் அதைப் பிடித்துத் திருப்பி எறிந்து விளையாடும் (மகளிர்) விளையாட்டுthrow-ball (a game played by women)
எறும்பு மூன்று பகுதியாக உள்ள உடலைக் கொண்ட, ஒன்றுகூடி அமைப்போடு வாழும் சிறு உயிரினம்ant
எறும்புதின்னி இரவு நேரத்தில் எறும்பு, கரையான் முதலியவற்றைத் தன் நீண்ட நாக்கால் இழுத்து உண்பதும், தாக்கப்பட்டால் பந்து போல் சுருண்டுகொள்வதுமான ஒரு பிராணிany of several animals that eat ants
என்றால் விதிநிலை வினையெச்சமாக வருவதுused as a conditional form
என்று1எந்த நாள்which day
என்று2எந்த நாளில்on which day
என்றும் எப்பொழுதும்all the time
என்னது என்ன (முதல் பொருளிலும் ஐந்தாவது பொருளிலும்)in the first and fifth sense of என்ன
என்னவோ ஒரு நிகழ்ச்சி நடந்ததாக ஒத்துக்கொண்டாலும் அவ்வாறு நடந்ததற்கு ஏதோ ஒரு நியாயம் இருப்பதாக ஒருவர் உணர்வதை வெளிப்படுத்த உதவும் சொல்a term used to mitigate the severity or seriousness of a statement
எனவே ஆகவேas a result
எனினும் ஆயினும்nevertheless
எஜமானி எஜமான் என்பதன் பெண்பால்feminine of எஜமான்
ஏக்கர்/ஏக்கரா நிலத்தைக் கணக்கிடுவதற்கான ஓர் அளவுacre
ஏக1ஏகப்பட்டlarge
ஏகத்தாறாக அதிகமாகexorbitantly
ஏகதேசம் உத்தேசம்approximation
ஏகப்பட்ட (எண்ணிக்கையில், அளவில்) மிகுதியானexcessive
ஏகபோகம் (வேறு யாருக்கும் இல்லாமல்) அனைத்தையும் தன்னிடத்தே கொண்டிருக்கும் ஆதிக்கம்(ஒருவரிடம்) குவிக்கப்பட்டிருக்கும் உரிமைmonopoly
ஏகமனதாக ஒருமனதாகunanimously
ஏகமாக (அளவில்) மிகுதியாக(of quantity, etc.) in excess
ஏகமுடி (கூத்தில் நடிக்கும் ஆண்கள் வெட்டாமல் வளர்த்திருக்கும்) நீளமான தலைமுடிlong hair (of an actor in folk theatre)
ஏகாக்கிர சிந்தை மனக் குவிப்புconcentration
ஏகாங்கி (குடும்பம், பொறுப்பு முதலியவற்றிலிருந்து விலகிய) தனித்த மனிதன்a person without a family
ஏகாதசி (உண்ணாவிரதம் இருக்கும்) அமாவாசையிலிருந்து அல்லது பௌர்ணமியிலிருந்து பதினோராவது திதி(a day of fasting occurring on the) eleventh day from new moon and also full moon
ஏகாதிபத்தியம் சிறிய நாடுகள் மீது வலிமை படைத்த நாடுகள் செலுத்தும் அரசியல், பொருளாதார ஆதிக்கம்imperialism
ஏகாந்தம் தனிமையும் அமைதியும் நிறைந்ததுsolitude
ஏகாலி சலவைத் தொழிலாளிlaunderer
ஏகு செல்லுதல்go
ஏகோபித்து/ஏகோபித்த ஒருமனதாக/ஒருமனதானunanimously/unanimous
ஏங்கு இழந்ததைப் பெற விழைதல்long for
ஏச்சு வசவுscolding
ஏட்டிக்குப்போட்டி எதிர்மறுப்புrivalry
ஏட்டு தலைமைக் காவலர்head constable
ஏட்டுச்சுரைக்காய் வாழ்க்கைக்கு உதவாத வெறும் நூல் அறிவுbookishness
ஏடாகூடம் முறைகேடுimproper
ஏடு (பொதுவாக) பத்திரிகை(குறிப்பாக) இதழ்(generally) magazine
ஏணி உயரமான ஓர் இடத்தை ஏறி அடைவதற்கு வசதியாக இரு நீண்ட கழிகளுக்கு இடையில் குறுக்குச் சட்டங்களை இணைத்துச் செய்யப்பட்ட ஓர் அமைப்பு(mostly wooden) ladder
ஏணை தூளிa cloth hammock for children to sleep
ஏத்து (புகழ்ந்து) சிறப்பித்தல்extol
   Page 23 of 204    1 … 21 22 23 24 25 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil