Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
அருவம் உருவம் இல்லாததுthat which has no form
அருவரு (அசுத்தம், ஆபாசம் முதலியவற்றால்) வெறுப்பு அடைதல்get a feeling of disgust
அருவருப்பு (அசுத்தம், ஆபாசம் முதலியன ஏற்படுத்தும்) வெறுப்புdisgust
அருவி குன்று, மலை முதலியவற்றிலிருந்து இயற்கையாக விழும் நீர்waterfall
அருவிவெட்டு கதிர் அறுத்தல்harvesting
அருள்1(கருணை நோக்கத்துடன்) தருதல்grant
அருள்2இறைவனோடும் பெரியவர்களோடும் ஒரு செயலைத் தொடர்புபடுத்திப் பேசும்போது அச் செயல் அருள் நோக்கத்தோடு வெளிப்பட்டதாக அல்லது நடைபெற்றதாக உணர்த்தும் ஒரு துணை வினை(in elevated style) an auxiliary verb used to denote that the action referred to in connection with god or respectable persons is as an act of grace
அருள்மிகு தெய்வத் தன்மை நிறைந்தholy
அரூ??பி உருவம் இல்லாதவன்/-ள்one who has no physical form
அரூபம் உருவம் இல்லாததுformlessness
அரை1(நீர் கலந்து) நைத்து மாவாக்குதல் அல்லது கூழாக்குதல்grind
அரை2ஒன்று என்னும் எண்ணின் பாதிhalf
அரை3இடுப்புwaist
அரைக்கண் பாதி மூடிய கண்கள்eyes half shut
அரைக்கால் எட்டில் ஒரு பாகம்one eighth or half of a quarter
அரைக் கால்சட்டை (சிறுவரும் ஆண்களும் அணியும்) முழங்காலுக்குச் சற்று மேல்வரை உள்ள கால்சட்டைknee or short trousers
அரைக்கீரை (சமைத்து உண்பதற்கான) தண்டையும் சிறு இலைகளையும் உடைய சிறு செடிgarden spinach
அரைக்கைச் சட்டை (சிறுவரும் ஆண்களும் அணியும்) முழங்கைக்குச் சற்று மேல்வரை உள்ள சட்டைshirt with half sleeves
அரைகுறை முழுமை அடையாத அல்லது முடிவு பெறாத நிலைthe state of being incomplete
அரைஞாண் ஆண்களும் குழந்தைகளும் இடுப்பில் கட்டியிருக்கும் கயிறு அல்லது தங்கம் போன்றவற்றால் செய்த சங்கிலிa thin cord (usually black in colour) or string made of gold etc worn around the waist by men and children
அரைப் புள்ளி எழுதும்போதோ அச்சிடும்போதோ வாக்கியத்தினுள் பயன்படுத்தும், முற்றுப் புள்ளிக்குக் குறைவான மதிப்பு உடைய (semicolon
அரைமண்டி உயரத்தைக் குறைத்துக் காலை வளைத்து நிற்கும் நிலைthe half-seated position of the dancer with both knees bent and spread sideways (a basic position in பரதநாட்டியம்)
அரைமனது (செயலில்) முழுமனத்தோடு இல்லாமைhalf-heartedness
அரைமூடி பெண் குழந்தைகளின் இடுப்புச் சங்கிலியில் கோக்கப்பட்டிருக்கும் அரசிலை வடிவிலான உலோகத் தகடுpipal leaf-shaped plate attached to the waist chain of a female child
அரையிறுதி (விளையாட்டில்) இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற ஆடும் ஆட்டம்semifinal
அரைவேக்காடு (காய்கறி, கிழங்கு முதலியன) பாதி வெந்தும் வேகாமலும் இருக்கும் நிலை(of vegetables, etc.) not fully or incompletely cooked or boiled
அல்குல் பெண்குறிfemale genital organ
அல்லது ஒரே வாக்கியத்திலும் இரு வேறு வாக்கியங்களிலும் மாற்றாக இருப்பவற்றின் இடையில் இடப்படும் இணைப்புச் சொல்(the disjunctive) or
அல்லர் மறுத்துக் கூறுதலுக்குப் பயன்படுத்தும் உயர்திணைப் பலர்பால் எழுவாய்க்கு உரிய எதிர்மறை முற்று(ஒப்பிடுக: அல்ல)a negative verb concord to the human plural subject
அல்லல் துன்பம்trouble
அல்லன் உயர்திணையில் (தன்மையிலும் படர்க்கையிலும்) ஆண்பால் எழுவாய்க்கு உரிய எதிர்மறை முற்று(ஒப்பிடுக: அல்ல)a negative verb concord to the human masculine (first or third person) subject
அல்லா ஆண்டவன்allah
அல்லாடு (ஒன்றைச் செய்வதற்கு) திண்டாடுதல்struggle
அல்லாத (சொல்லப்பட்டது) நீங்கலாக உள்ளother than (what is said)
அல்லாமல் (சொல்லப்பட்டதோடு) கூடுதலான மற்றொரு செய்தி தொடர்வதை அல்லது மாறாக ஒன்று அமைவதைக் காட்டும் சொல்not only
அல்லி அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டையும் உடைய, நீரில் மிதக்கும் ஒரு வகைத் தாவரம்/அந்தத் தாவரத்தின் வெண்ணிறப் பூwater lily (the plant and the flower)
அல்லிவட்டம் பூவின் இதழ்கள் வட்ட வடிவமாக அமைந்திருக்கும் ஒழுங்குcorolla
அல்லும்பகலும் இடைவிடாமல்day in and day out
அல்லோலகல்லோலப்படு பெரும் பரபரப்பு அடைதல்be in commotion
அல்வா கோதுமை மாவில் பாகு ஊற்றிக் கிளறிச் செய்யப்படும் (வழுவழுப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்) இனிப்புப் பண்டம்(a soft, smooth jelly like) sweet-meat made of sugar treacle and wheat flour
அலக்காக (அநாயாசமாக) அப்படியே தனியாக(with ease and facility) as it is
அலக்கு துறட்டிpole fixed with a hook (to pluck fruit, etc.)
அலகு2(நிறுத்தலளவை, முகத்தலளவை போன்றவற்றில்) அடிப்படை அளவுunit (of measurement)
அலங்கமலங்க (பார், விழி ஆகிய வினைகளுடன்) ஒன்றும் புரியாமல்confusedly
அலங்காரம் அலங்கரிக்கப்பட்ட நிலைmake-up
அலங்காரி சற்று மிகையாக ஒப்பனை செய்துகொண்ட பெண்a woman with heavy make-up
அலங்கோலம் (பொருள்களின்) சீர்குலைவு(ஆடை, அலங்காரத்தில்) தாறுமாறான தோற்றம்(of things) disorderliness
அலசல்1அடர்த்தியின்மைsparseness
அலசல்2பல்வேறு அம்சங்களையும் அடக்கிய விளக்கம்threadbare analysis
அலசு (அழுக்கு நீங்குவதற்காகத் துணி, பாத்திரம் போன்றவற்றை நீரில்) முக்கி ஆட்டி எடுத்தல்rinse (clothes, vessels, etc.)
அலட்சியமாக அநாயாசமாகwith ease
அலட்டு (சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி மனத்தை) வருத்துதல்bother
அலம்பு கழுவுதல்wash
அலமாரி பொருள்கள் வைப்பதற்கு வசதியாகச் சில தட்டுகள் கொண்டதும் (பெரும்பாலும்) கதவு போடப்பட்டதுமான அமைப்புa cupboard (usually) with doors
அலவாங்கு கடப்பாரைcrow-bar
அலறல் (பயத்தினால் எழுப்பும்) பெரும் குரல்scream
அலறியடித்துக்கொண்டு (ஒன்று ஏற்படுத்தும் பாதிப்பால் அல்லது விளைவால்) பதறிப்போய்agitatedly
அலறு (பயம், வலி முதலியவற்றால்) கூக்குரலிடுதல்scream (out of fear, grief, pain, etc.)
அலாதி (வேறுபட்டதாக இருப்பதால்) சிறப்பானதுsomething special or unique
அலாரிப்பு நாட்டியம் கற்பவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் முதல் பாடமான, குறிப்பிட்ட அடிப்படையான சொற்கட்டுகளுக்கு ஏற்ப ஆடும் முறைthe first invocatory item in a dance recital which helps the dancer to warm up and become capable of rhythmic coordinated movements
அலி ஆண் என்றோ பெண் என்றோ சொல்ல முடியாத நபர்a person who is neither male nor female
அலுகோசு தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அரசாங்க ஊழியன்hangman
அலுங்கு அசைதல்move slightly
அலுப்பு சலிப்புboredom
அலுமினியம் (பாத்திரம், மின் கம்பி முதலியன செய்யப் பயன்படும்) எளிதில் வளையக் கூடிய, கனம் அற்ற வெண்ணிற உலோகம்aluminium
அலுவல் மாத ஊதியம் பெற்றுச் செய்யும் பணிwork (at the office)
அலுவலகம் (மாத ஊதியம் பெற்று) பணி அல்லது தொழில் செய்யும் இடம்a place of work
அலுவலர் அலுவலகத்தில் பணி செய்பவர்employee
அலை1(ஒன்றைத் தேடி நேரம் செலவிட்டு) பல இடங்களுக்குப் போதல்go all around
அலை2(மனத்தை) அலைபாயச்செய்தல்toss about
அலை3காற்றின் இயக்கத்தால் நீர்ப் பரப்பிலிருந்து கரை நோக்கி உயர்ந்தும் சுருண்டும் வரும் நீர்wave
அலைக்கழி1(அலைச்சலால், முடிவுக்கு வர முடியாததால்) தத்தளித்தல்be beset
அலைக்கழி2தத்தளிக்கச்செய்தல்torment
அலைச்சல் அலைதலால் ஏற்படும் சிரமம்trouble caused by hectic moving about
அலைபாய் (கூட்டம்) திரண்டு வருதல்(of crowd) surge (up)
அலைவரிசை ஒலிபரப்புக்காகவோ ஒளிபரப்புக்காகவோ ஒரு வினாடிக்கு இத்தனை என்னும் முறையில் அனுப்பும் மின்காந்த அலைகளின் தொடர்(radio) frequency
அலோகம் திட, திரவ, வாயு ஆகிய மூன்று நிலைகளில் காணப்படுவதும் பளபளப்புத் தன்மை அற்றதுமான தனிமம்non-metal
அவ்வப்போது முடிந்தபோதெல்லாம்from time to time
அவ்வளவாக (எதிர்மறை வினைகளோடு மட்டும்) அதிக அளவில்much
அவ்வளவு அந்த அளவு(that/so) much
அவ்வாறு அப்படிin the specified or required or desired manner
அவ்விடம்2(பெரும்பாலும் கடிதம் எழுதும்போது) (கடிதம் பெறுபவர் இருக்கும் இடமான) அங்கு(mostly in letter writing) at your end
அவகாசம் (ஒரு வேலையைச் செய்துமுடிப்பதற்கு ஆகும்) நேரம்time
அவசரக்குடுக்கை (விளைவுகளைப்பற்றி நினைக்காமல்) ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்one who is rash and hasty
அவசரக்கோலம் (திருத்தமாகச் செய்ய முடியாத அளவுக்கு) மிகுந்த அவசரம்something done in haste
அவசரச்சட்டம் நாடாளுமன்றத்தின் அல்லது மாநிலச் சட்டமன்றத்தின் கூட்டம் நடைபெறாத காலத்தில் குடியரசுத் தலைவராலோ மாநில ஆளுநராலோ அவசரத் தேவை கருதிப் பிறப்பிக்கப்படும் தற்காலிகச் சட்டம்(in India) an ordinance promulgated by the President or the Governor (of a state) when the legislature is not in session
அவசரச் சிகிச்சைப் பிரிவு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுபவருக்கு உடனடிச் சிகிச்சை வழங்கும் பிரிவுemergency ward or unit (in a hospital)
அவசரப்படு (ஒன்றைச் செய்வதில் தேவை இல்லாமல்) வேகம்காட்டுதல்show undue haste
அவசரம் (கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும்) விரைவுhaste
அவசியம்1(இன்றியமையாத) தேவைnecessity
அவசியம்2கட்டாயமாகcertainly
அவதரி (கடவுள், புகழ்பெற்றோர் ஆகியோரின் பிறப்பைக் குறிப்பிடும்போது) தோன்றுதல்(of god) descend
அவதாரப் புருஷன் செய்வதற்கு அரிதான செயலைச் செய்துமுடிக்க என்றே (மனிதனாக) பிறந்தவன்man born with a mission
அவதாரம் ஏதேனும் ஓர் உருவத்தில் தெய்வம் எடுக்கும் பிறப்புincarnation (of god)
அவதானம் கூர்மையாகக் கவனித்தல்observation
அவதி1துன்பம்distress
அவதி2(கால நெருக்கடியால் ஏற்படும்) அவசரம்haste
அவதூறு (நற்பெயரைக் கெடுக்கும் அல்லது உண்மைக்கு மாறான) பழிill report
அவநம்பிக்கை நம்பிக்கையின்மைlack of faith
அவமதி (தரப்பட வேண்டிய மதிப்பைத் தராமல்) இழிவுபடுத்துதல்treat with indignity or disrespect
   Page 6 of 204    1 4 5 6 7 8 204