Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| அவமதிப்பு | இழிவு | disrespectful treatment |
| அவமரியாதை | மரியாதைக் குறைவு | disrespectful treatment |
| அவமானம் | மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை | shame |
| அவயவம் | உடல் உறுப்பு | human organ |
| அவரை | இரு பகுதிகளாகப் பிரியக் கூடிய மெல்லிய பச்சை நிறத் தோலினுள் விதைகளைக் கொண்ட சிறு காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் ஒரு வகைக் கொடி | field bean (the seed and the creeper) |
| அவரோகணம் | ஏழு ஸ்வரங்களையும் படிப்படியாக மேலிருந்து கீழாக ஒலி அளவில் குறைக்கும் முறை | descending scale of the seven notes from the highest to the basic |
| அவல் | ஊறவைத்த நெல்லைக் காயவைத்து வறுத்து இடித்துப் பெறும் உணவுப் பண்டம் | rice flakes prepared by soaking paddy, parching it and pounding it |
| அவலட்சணம் | அழகின்மை | unsightliness |
| அவலம் | வருந்தத்தக்க அல்லது இரங்கத்தக்க நிலை | regrettable state |
| அவஸ்தை | துன்பம் | distress |
| அவா | ஆவல் | desire |
| அவி1 | வேகுதல் | boil (in water) |
| அவி2 | அணைதல் | be extinguished |
| அவி3 | வேகவைத்தல் | steam (paddy, groundnut, etc.) |
| அவி4 | (விளக்கு, அடுப்பு முதலியவற்றை) அணைத்தல் | extinguish (lamp, furnace, etc.) |
| அவிசாரி | சோரம்போன மனைவி | adulteress |
| அவிசுவாசி | கடவுள் நம்பிக்கை இல்லாதவன் | unbeliever |
| அவிட்டம் | இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்து மூன்றாவது | the twenty third of the twenty seven stars |
| அவித்தியம் | அஞ்ஞானம் | ignorance |
| அவியல் | பல வகைக் காய்கறிகளை அவித்து ஒன்றாகச் சேர்த்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி | vegetable mix cooked with grated coconut |
| அவிழ்1 | (கட்டு, முடிச்சு முதலியவை) பிரிதல் | (of a knot, etc.) get untied |
| அவிழ்2 | (கட்டு, முடிச்சு முதலியவற்றை அல்லது பிணைத்துக் கட்டியிருப்பதிலிருந்து ஒன்றை) பிரித்தல் | untie |
| அவுரி | நீல நிறச் சாயம் எடுக்கப் பயன்படும் சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகைக் குத்துச் செடி | indigo plant |
| அவை1 | அரசன் தன் அமைச்சர்களுடன் காட்சி தரும் இடம் | royal court |
| அவைத்தலைவர் | மக்களவை, சட்டமன்றம் ஆகியவற்றில் சபை நடவடிக்கைகளை நடுவர் போல் இருந்து நடத்தும் பொறுப்பு வகிப்பவர் | speaker (of the parliament or the state legislative assembly) |
| அவை முன்னவர் | அவை நடவடிக்கைகளுக்கான நாள், நேரம் முதலியவற்றைக் குறிப்பதற்கும் ஆளுங்கட்சியின் தேவைகளைப் பேரவைத் தலைவரிடம் எடுத்துக்கூறுவதற்கும் நியமிக்கப்பட்ட ஆளுங்கட்சி உறுப்பினர் | leader of the ruling party in the parliament or legislative assembly |
| அழகன் | அழகிய தோற்றமுடையவன் | handsome man |
| அழகாக | சுலபமாக | very easily |
| அழகி | அழகிய தோற்றமுடையவள் | beautiful woman |
| அழகிய | அழகான | beautiful |
| அழகியல் | (கலைகளில்) அழகைப்பற்றிய கொள்கை | aesthetics |
| அழகு | கண்ணாலோ காதாலோ மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி | beauty |
| அழகுகாட்டு | (நாக்கை நீட்டுதல், முகத்தைச் சுளித்தல் போன்ற செய்கைகளால்) கேலிசெய்தல் | make faces at |
| அழகுசாதனம் | ஒப்பனை செய்துகொள்வதற்கு வேண்டிய பொருள்கள் | cosmetics |
| அழல் | நெருப்பு | fire |
| அழற்சி | தொற்று நோயால் பாதிக்கப்பட்ட உடல் பகுதி சிவந்தும் வீங்கியும் சற்றுச் சூடாகவும் இருக்கும் நிலை | inflammation |
| அழி1 | இருப்பது மறைதல் | become extinct |
| அழி2 | இல்லாமல்செய்தல் | cause to perish |
| அழிச்சாட்டியம் | முரண்டு | stubborn behaviour |
| அழிந்துபடு | இல்லாமல்போதல் | go to rack and ruin |
| அழிப்பான் | (எழுதப்பட்டதை அல்லது தட்டச்சு செய்யப்பட்டதை) அழிக்கப் பயன்படும் ரப்பர்த் துண்டு | eraser |
| அழிப்பு | அழித்தல் | destroying |
| அழிபாடு | (கட்டடம் போன்றவற்றின்) இடிந்த சிதைவு | ruin(s) |
| அழிவு | சிதைவு | destruction |
| அழு | (துன்பம், வலி, பசி முதலியவற்றால்) கண்ணீர் விடுதல் | weep |
| அழுக்கு | (-ஆக, -ஆன) (உடை, உடல் முதலியவற்றில் சேரும்) அசுத்தம் | dirt (on clothes, body, etc.) |
| அழுகல் | (பழம், முட்டை முதலிய) பொருள்களின் கெட்டுப்போன நிலை | the state of being rotten or putrefied |
| அழுகு | (பழம், முட்டை முதலியன) கெட்டுப்போதல் | (of fruits, eggs, etc.) rot |
| அழுகுணி | (பெரும்பாலும் சிறுவர்களைக் குறிப்பிடும்போது) அழுமூஞ்சி | crybaby |
| அழுகை | (துன்பம், வலி, பயம் போன்றவற்றால்) அழுதல் | weeping |
| அழுத்தம் | உறுதி | firmness |
| அழுத்தம்திருத்தம்-ஆக/-ஆன | (சிறிதும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல்) உறுதியோடு தெளிவாக/உறுதியோடு தெளிவான | firmly and precisely/firm and precise |
| அழுத்தி | வலியுறுத்தி | with stress |
| அழுத்து | உள் அல்லது கீழ் நோக்கிப் போகச்செய்தல்(ஒன்று) ஒரு பரப்பை விசையோடு நெருக்குதல் | press |
| அழுதுவடி | (எதிர்பார்க்கும்) இயல்பு முதலியன வெகுவாகக் குறைந்து காணப்படுதல் | look gloomy |
| அழுந்த | (ஒன்றில்) பதியும்படியாக அல்லது படியும்படியாக | close |
| அழுந்து | (ஈரப் பதமுடைய தரையில் அல்லது மென்மையான பொருளில்) உள்ளிறங்குதல் | sink (in a wet soil or on a soft material) |
| அழுமூஞ்சி | சிறிய விஷயங்களுக்குக்கூட அழுதுவிடும் குணமுடைய நபர் | a sulky person |
| அழைத்துக்கொள் | ஒருவர் மற்றொருவரைத் தம்மோடு கூட்டிக்கொள்ளுதல் | take |
| அழைத்துவா | (ஓர் இடத்துக்கு) கூட்டிக்கொண்டு வருதல் | bring |
| அழைப்பாளர் | (விழா, கருத்தரங்கு முதலியவற்றில் கட்டணம் செலுத்தியோ அழைப்பின் பேரிலோ) பங்குபெறுபவர் | delegate |
| அழைப்பிதழ் | கலந்துகொள்ளுமாறு அல்லது காண வருமாறு வேண்டி ஒருவருக்கு அனுப்பப்படும் அச்சிட்ட தாள் | invitation |
| அழைப்பு | எழுத்து அல்லது வாய்மொழி வடிவ வேண்டுகோள் | call (to appear) |
| அழைப்பு மணி | வீட்டுக்குள் இருப்பவருக்குத் தன் வரவைத் தெரிவிக்க அல்லது ஒருவரைத் தன்னிடத்துக்கு வரச் சொல்லப் பயன்படுத்தும், ஒலி எழுப்பக் கூடிய (மின்) சாதனம் | calling bell |
| அள்ளி | (இறை, வீசு போன்ற வினைகளுடன்) மிகுதியாக | in large measure |
| அள்ளிக்கொண்டு போ | திட்டமிட்டதற்கு அல்லது எதிர்பார்த்ததற்கு மாறாகக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாகச் செலவாதல் | go beyond all calculations |
| அள1 | (ஒரு பொருளின் முப்பரிமாணங்களையோ எடையையோ அதற்கான கருவிகளால்) கணக்கிடுதல் | measure |
| அள2 | (ஒன்றை) பல மடங்காக்கி (சொந்தக் கற்பனையோடு) கூறுதல் | exaggerate |
| அளப்பரிய | அளவிட முடியாத | immeasurable |
| அளப்பு1 | (ஒன்றை) அளத்தல் | measurement |
| அளப்பு2 | கட்டுக்கதை | exaggeration |
| அளவளாவு | (நட்பு முறையில்) மனம்விட்டுப் பேசுதல் | talk in a friendly way |
| அளவிடு | மதிப்பிடுதல் | assess |
| அளவு | (-ஆக, -ஆன) நீளம், அகலம், உயரம், எடை, எண்ணிக்கை ஆகியவற்றுள் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதைக் கொண்டு அமைக்கும் வரையறை | measurement |
| அளவுக்கு | (பெயரெச்சத்தின் பின்) (கூறப்படும்) நிலைக்கு | (after relative participle) to the extent of |
| அளவுகோல் | ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கு உரிய அலகு குறிக்கப்பட்ட கோல் | measuring rod |
| அளவுச் சாப்பாடு | (உணவு விடுதியில்) குறிப்பிட்ட அளவுடைய உணவும் அதற்குத் தரப்படும் உப உணவுகளும் | set meal (in a restaurant) |
| அளவெடு | (உடை போன்றவற்றைத் தயாரிக்க நீளம், சுற்றளவு முதலியவற்றை) கணக்கெடுத்தல் | take measurements |
| அளவை | ஒரு பொருளின் எடை, எண்ணிக்கை, நிறை முதலியவற்றை அறியும் நிறுத்தல், எண்ணுதல், முகத்தல் போன்ற முறை | measure (of length, count, weight, etc.) |
| அளாவு | (வானம், உலகு முதலிய சொற்களுடன் இணைந்து வரும்போது) தொடும் அளவுக்குப் போதல் | (when combining with words such as sky, world, etc.) extend up to |
| அளி | வழங்குதல் | give |
| அளை | (விரல்களால் அங்குமிங்கும்) ஒதுக்குதல் | fiddle about or around |
| அற்பசொற்பம் | மிகவும் குறைவு | negligible (amount or measure) |
| அற்பம் | கேவலம் | meanness |
| அற்பாயுசு/அற்பாயுள் | குறைந்த வாழ்நாள் | short lease of life |
| அற்புதம் | (-ஆக, -ஆன) வியப்பு தரும் வகையில் சிறப்பானது | wonder |
| அற்ற | இல்லாத | without-less |
| அற்று | இல்லாமல் | without |
| அறக்கட்டளை | (கல்வித் துறை, சமூகச் சேவை முதலியவற்றில்) பொது நலனை மேம்படுத்தும் செயல்பாடுகளுக்காகத் தனி நபர்கள் அல்லது அரசு ஏற்படுத்தும் நிதி அமைப்பு | endowment |
| அறங்காவலர் | (கோயில், அறக்கட்டளை முதலியவற்றின்) நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர் | trustee (of a temple, trust, etc.) |
| அறநிலையத் துறை | இந்துக் கோவில்களின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யும் மாநில அரசின் பிரிவு | (Department of) Hindu religious and charitable endowments |
| அறநூல் | ஒருவர் தன்னுடைய அக, புற வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குகிற நூல் | ethical or moral treatise |
| அறம் | குடும்ப வாழ்வும் பொது வாழ்வும் சீராக இயங்க ஒருவர் கடைப்பிடிக்கும் சமயச் சார்பான அல்லது ஒழுக்கக் கண்ணோட்டத்துடன் கூடிய நெறிமுறைகள் அல்லது கடமைகள் | ethical or religious code of conduct |
| அறவுரை | சமய அல்லது ஒழுக்க போதனை | religious or moral instruction |
| அறவே | முற்றிலும் | completely |
| அறி | (அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக) தெரிந்துவைத்திருத்தல் | know |
| அறிக்கை | (நிகழ்ச்சிகளின், நடவடிக்கைகளின்) தகவல் தொகுப்பு | an account of events |
| அறிகுறி | இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ (ஊகித்து) முன்கூட்டியே தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு | indication |
| அறிஞர் | பல துறை அறிவுடையவர் | learned person |
| அறிமுகம்செய் | ஒருவர் மற்றொருவருடன் (முதன்முறையாக) தான் யார் என்பதைத் தெரிவித்தல் | introduce |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.