Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| சந்தியக்கரம் | (சமஸ்கிருதத்தில்) இரண்டு உயிரெழுத்துகள் இணைந்து ஒலிக்கும் ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள் | diphthongs (of Sanskrit) viz |
| சந்தியாகால பூஜை | கோயிலில் மாலை ஐந்து மணிக்கு மேல் ஏழு மணிக்குள் நைவேத்தியமும் தீபாராதனையும் காட்டிச் செய்யப்படும் பூஜை | one of the obligatory பூஜை in a temple with நைவேத்தியம் and தீபாராதனை performed after 5 p |
| சந்தியாவந்தனம் | காலை, உச்சி, மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் குறிப்பிட்ட மந்திரம் சொல்லிச் செய்யும் வழிபாடு | chanting of mantras in the morning, at noon and in the evening |
| சந்திரகாந்தம் | நிலா வெளிச்சத்தில் காட்டினால் நீரை வெளிவிடும் தன்மையும் (காந்தம் இரும்பைக் கவர்வது போல) வெள்ளியைக் கவரும் தன்மையும் கொண்டதாகக் கூறப்படும் ஒரு வகைப் படிகக் கல் | moonstone said to glisten with water when exposed to moonlight and said to attract silver |
| சந்திர மண்டலம் | சந்திரன் என்னும் துணைக்கோளும் அதைச் சுற்றியுள்ள வெளியும் | moon and the space around it |
| சந்திரன் | பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள் | moon |
| சந்து | அகலக் குறைவான தெரு அல்லது வழி | narrow street |
| சந்துபொந்து | (பழக்கம் இல்லாத) குறுகலான வழியும் பாதையும் | nook and corner |
| சந்தேகப்பிராணி | (மிக எளிதில்) சந்தேகப்படும் நபர் | one who is suspicious by nature |
| சந்தேகம் | (இதுதான், இவ்வளவுதான் என்று) துணிந்து கூற முடியாத நிலை | doubt |
| சந்தேகி | சந்தேகம்கொள்ளுதல் | doubt |
| சந்தை | (பெரும்பாலும்) கிராமங்களிலிருந்து ஒரு பெரிய ஊரின் எல்லைப்புறத்திற்குக் கால்நடை, உணவுப் பொருள்கள் முதலியவற்றைக் குறிப்பிட்ட சில கிழமைகளில் கொண்டுவந்து நடத்தும் விற்பனை | fair |
| சந்தோஷம் | மகிழ்ச்சி | happiness |
| சப்-என்று | (உப்பு, உறைப்பு, புளிப்பு முதலிய) சுவை எதுவும் இல்லாமல் | bland |
| சப்தநாடியும் ஒடுங்கு | (அதிர்ச்சி, பயம் முதலியவற்றால் ஒருவரின்) அனைத்துப் புலன்களும் செயலற்றுப்போதல் | become (almost) paralysed (with fear, etc.) |
| சப்தம்2 | பாடமும் சொற்கட்டுகளும் மாறிமாறி வரும் அமைப்பு அல்லது உருப்படி | suggestive and expressive use of gestures communicating the meaning of individual words |
| சப்தம்3 | (சில தொடர்களில் அடையாக) ஏழு | (in certain phrases) seven |
| சப்தரிஷி மண்டலம் | ஏழு நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு விண்மீன் கூட்டம் | ursa major or the Great Bear |
| சப்பட்டை | சப்பை | flat |
| சப்பணம் | முழங்காலை மடக்கிக் கால்களைக் குறுக்காக வைத்தல் | sitting cross-legged |
| சப்பரம் | கோயிலில் விழாவின்போது விக்கிரகங்களை வைத்து இழுத்துச்செல்லப் பயன்படும் தேர் போல அலங்கரிக்கப்பட்ட சிறு வண்டி | small wooden chariot (decorated like a தேர்) in which idols are carried during festivals |
| சப்பளாக்கட்டை | (கதாகாலட்சேபம் செய்வோர்) நான்கு விரல்களில் ஒன்றும் கட்டைவிரலில் ஒன்றுமாகக் கோத்துக்கொள்ளும் சிறு மணிகள் இணைக்கப்பட்ட தாளத்திற்கான இரு கட்டை | a pair of wooden pieces, being held in between the fingers, with tiny bells for marking time (by the performers of religious songs) |
| சப்பளி1 | உருத்தெரியாமல் தட்டையாதல் | be pressed out of form |
| சப்பளி2 | உருத்தெரியாமல் தட்டையாக்குதல் | press |
| சப்பாணி | நொண்டி | cripple |
| சப்பாத்தி1 | கோதுமை மாவை அல்லது மைதா மாவைப் பிசைந்து அப்பளம் போல இட்டுச் சுட்டுத் தயாரிக்கும் ஒரு வகை உணவுப் பண்டம் | unleavened roasted bread made from wheat or maize dough, thin in size and round in shape |
| சப்பாத்தி2 | வெளிர் மஞ்சள் நிறப் பூக்களுடன் அகன்ற தண்டு முழுவதும் முட்கள் நிறைந்து புதராக வளரும் ஒரு தாவரம் | common prickly-pear |
| சப்பாத்து | பாதத்தை முழுமையாக மறைக்கும் காலணி | shoe |
| சப்பு | (கடிக்காமல்) வாய்க்குள் வைத்து அழுத்தி உறிஞ்சுதல் | suck (the finger, nipple, etc.) |
| சப்புக்கொட்டு | (தின்பண்டம் போன்றவற்றின் ஒரு சிறு துண்டைச் சுவைத்து அல்லது சுவைக்க விரும்பி) நாக்கினால் ஒலி எழுப்பி ருசியின் அருமையை வெளிப்படுத்துதல் | relish a dish or an item of food by making a click |
| சப்புச்சவறு | (உபயோகமற்றதாகக் கருதி) கழித்துக்கட்டப்பட்ட பொருள் | junk |
| சப்பை | (-ஆன) தட்டை | flat |
| சப்பைக்கட்டு | (குற்றமோ குறையோ உடைய காரியத்துக்கு அல்லது அதைச் செய்தவருக்கு) ஆதரவாக வலிந்து கூறும் காரணம் | lending weak support for the wrongdoings of s |
| சப்போட்டா | மண் நிறத்தில் தோலும் வெளிர்ப் பழுப்பு நிறத்தில் சதைப் பகுதியும் உடைய சிறு பழம் | sapota plum |
| சபலம் | (கிடைத்தால்) அடைந்துவிட வேண்டும் என்னும் துடிப்பு அல்லது நினைப்பு | temptation |
| சபா | கலை நிகழ்ச்சிகளை உறுப்பினர்களுக்காக நடத்தும் அமைப்பு | organization conducting cultural programmes |
| சபாநாயகர் | பேரவைத் தலைவர் | speaker (of the legislature) |
| சபைக்கூச்சம் | (மேடையில் பேசுதல், பாடுதல் முதலியவற்றைச் செய்யும் ஒருவருக்கு) கூட்டத்தினரைக் கண்டு எழும் பயம் அல்லது கூச்சம் | stage fright |
| சம்சயம் | சந்தேகம் | doubt |
| சம்சாரம் | குடும்பம் | family |
| சம்சாரி1 | (பெரிய) குடும்பத்தை உடையவர் | man with a large family |
| சம்சாரி2 | நிலத்தில் பயிரிடுபவர் | farmer |
| சம்பத்து | செல்வம் | riches |
| சம்பந்தப்பட்ட | (குறிப்பிட்ட ஒன்றோடு) தொடர்புடைய | connected |
| சம்பந்தப்படுத்து | (குற்றத்தில் மற்றொருவரையும்) தொடர்புபடுத்திக் கூறுதல் | implicate |
| சம்பந்தம் | தொடர்பு | relevance |
| சம்பந்தி | தன் மருமகளின் அல்லது மருமகனின் பெற்றோர் | the parents of son-in-law or daughter-in-law |
| சம்பல் | தேங்காய், மிளகாய், புளி முதலியவற்றைச் சேர்த்து அரைத்த துவையல் | a kind of துவையல் |
| சம்பவம் | குறிப்பிடத்தக்க அல்லது நினைவுகூரத்தக்க நிகழ்ச்சி | happening |
| சம்பவி | (சாவு, துன்பம் முதலியவை) நேர்தல் | happen |
| சம்பளம் | (ஒவ்வொரு மாதமும்) உழைப்பிற்குப் பெறும் தொகை | salary |
| சம்பா | (பொதுவாக, தை மாதம் அறுவடையாகும்) ஐந்து மாத கால நெற் பயிர் | a crop of paddy of five months duration (harvested sometime in தை) |
| சம்பாத்தியம் | (ஒருவர்) சேர்த்த பொருள் | earnings |
| சம்பாதி | (வருமானமாக) பணம் பெறுதல்(செல்வம், லாபம்) சேர்த்தல் | earn |
| சம்பாஷணை | பேச்சு | conversation |
| சம்பாஷி | பேசுதல் | converse |
| சம்பிரதாயம் | (பின்பற்றப்படும்) தொன்றுதொட்டு வரும் பழக்கம் அல்லது நடைமுறை | time-honoured custom |
| சம்புடம் | (விபூதி, சாம்பிராணி முதலியவற்றை வைத்துக்கொள்ள உதவும்) மூடி போட்ட வட்ட வடிவப் பாத்திரம் | small round metal case (to keep sacred ash) |
| சம்பூர்ணம் | நிறைவு | completeness |
| சம்போகம் | உடலுறவு | sexual intercourse |
| சம்மதம் | (ஒன்றைக்குறித்து ஒருவர் தெரிவிக்கும்) உடன்பாடு | consent |
| சம்மதி | சம்மதம் தெரிவித்தல் | consent |
| சம்மன் | வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது வாதிகளையும் பிரதிவாதிகளையும் சாட்சியங்களையும் குறிப்பிட்ட நாளில் வருமாறு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு | summons (issued by a court of law) |
| சம்மேளனம் | (ஒரு தொழிலின் முன்னேற்றத்திற்கான, ஒரு நிர்வாகத்தின் ஒழுங்கிற்கான) உறுப்பினர்களின் கூட்டமைப்பு | federation |
| சம்ரட்சணை | பராமரிப்பு | maintenance |
| சம்ரட்சி | (ஒருவரை, குடும்பத்தை) பேணிப் பாதுகாத்தல் | support (a person, a family) |
| சம்ஹாரம் | அழித்தல் | destruction |
| சமகாலம் | ஒருவர் வாழ்ந்த அல்லது ஒன்று தோன்றிய அதே காலம் | contemporary period |
| சமணம் | உயிரும் (ஆன்மாவும்) சடப் பொருளும் அழிவற்றவை, ஆன்மாக்கள் பல என்பன போன்ற கொள்கைகளைக் கூறுவதும் அகிம்சையை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிக்கக் கூறுவதுமான மதம் | jainism |
| சமத்துவம் | உலகில் மக்கள் அனைவரும் சமம் என்றும் மக்களுக்குச் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் கூறும் கொள்கை | equality |
| சமதர்மம் | அனைவருக்கும் ஒரே நியாயம், நீதி என்னும் செயல்பாட்டு முறை | equal justice |
| சமதளம் | மேடுபள்ளம் இல்லாமல் ஒரே சீராக இருக்கும் பரப்பு | level |
| சமதை | ஒப்பு | parity |
| சமநிலை | ஏற்றத்தாழ்வு, வேறுபாடு ஆகியவை இல்லாத ஒப்பான நிலை | equal footing |
| சமபந்தி | (சாதி வேறுபாடு, ஏழை பணக்காரன் போன்ற ஏற்றத்தாழ்வு பார்க்காமல்) எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுதல் | sitting all at a time to eat food (ignoring caste or status) |
| சமம் | (ஒப்பிடும்போது) ஒத்த தன்மை | (when comparing) equal |
| சமயசஞ்சீவி | (பெரும்பாலும் உவமையாக) தக்க சமயத்தில் உயிர்காக்கும் மருந்து | (often used metaphorically) life-saving drug |
| சமயத்தில் | எப்போதாவது ஒரு முறை | at times |
| சமயம்1 | (குறிப்பிட்ட ஒன்றைச் செய்வதற்கான) நேரம் | time |
| சமயம்2 | மதம் | religion |
| சமயோசிதம் | (அந்த) சமயத்துக்குப் பொருத்தம் | presence of mind |
| சமர் | போர் | war |
| சமர்த்தன் | திறமை அல்லது கெட்டிக்காரத்தனம் வாய்ந்தவன் | skilful person |
| சமர்த்து | (-ஆக, -ஆன) தொல்லை தராமல் நடந்துகொள்ளும் கெட்டிக்காரத்தனம்(ஒருவரின்) சாமர்த்தியம்திறமை | smartness |
| சமர்ப்பணம் | ஒருவரை கௌரவிக்கும் விதத்தில் அவருக்குத் தன்னுடைய படைப்பைச் சமர்ப்பித்தல் | (of a book, etc.) dedication (to s |
| சமரச சன்மார்க்கம் | எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாக பாவித்துச் செயல்பட வேண்டும் என்னும் கொள்கை | a religious doctrine advocating love of fellow beings and equality |
| சமரசம் | (-ஆக) இணக்கமான முடிவு | accord |
| சமவெளி | மேடுபள்ளம் இல்லாத பரந்த நிலப் பகுதி | plain |
| சமன்பாடு | (ஒன்றுக்கொன்று) ஒத்துப்போகும் அல்லது சமமாக இருக்கும் தன்மை | balance |
| சமனம் | (உணர்ச்சிக் கொந்தளிப்பின்) தணிந்த நிலை | state of calmness or equilibrium |
| சமஷ்டி | தனித்தனியாக இயங்குவதற்கான அதிகாரம் படைத்த அமைப்புகள் ஒன்றுகூடி அமைத்துக்கொள்ளும் உயர் கூட்டமைப்பு | federation |
| சமஸ்கிருதம் | (வேதங்கள் இயற்றப்பட்டதும் தற்போது பேச்சு வழக்கில் இல்லாததுமான) பழமையான இந்திய மொழி | sanskrit |
| சமஸ்தானம் | (இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்) (குறுநில) மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நிலப் பகுதி | princely state (at the time of British India) |
| சமா(ச்)சாரம் | செய்தி | matter |
| சமாதானம் | (சண்டை, வழக்கு, பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும்) அமைதி | peace |
| சமாதி | இறந்தவரைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்துச் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் உள்ள நினைவுச்சின்ன மேடை | tomb |
| சமாதியடை | (ஞானிகள், மகான்கள் ஆகியோரின் மறைவை மங்கல வழக்காகக் கூறுகையில்) இறத்தல் | (of sages, etc, euphemistically) die |
| சமானம் | சமம் | equal by comparison |
| சமி | செரித்தல் | digest |
| சமிக்கை/சமிக்ஞை | (செய்தியை) குறிப்பாக வெளிப்படுத்தக் கூடிய சைகை அல்லது குறியீடு | gesture |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.